Royal Enfield Hunter 350: ராயல் என்பீல்ட் நிறுவனம் ஹண்டர் 350 என்ற புதிய பைக்கை களமிறக்கியுள்ளது. தற்கால இளைஞர்களைக் கவரும் வகையில் இந்த பைக்கின் டிசைன் வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராயல் என்பீல்ட் நிறுவன தயாரிப்புகளின் வழக்கத்துக்கு மாறாக அளவில் சிறியதாக ஒரு பைக்காக இந்த ஹண்டர் 350 உள்ளது.
இந்த ஹண்டர் 350 இரண்டு வேரியண்டுகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரு வேரியண்டுகளுக்கும் ரெட்ரோ மற்றும் மெட்ரோ என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், அவர்களைக் கவர்வதை நோக்கமாகக் கொண்டே இந்த ஹண்டர் 350 வெளியிடப்பட்டுள்ளதாக அந்நிறுவனத்தின் தலைமை வணிக அதிகாரி யத்விந்தர் சிங் குலேரியா தெரிவித்துள்ளார்.
தற்கால இளைஞர்களில் பெரும்பாலானோர்க்கு ராயல் என்பீல்டு நிறுவன பைக்குகள் வாங்கவேண்டும் என்ற ஆசை இருக்கிறது ஆனால் அவர்களுடைய தேவைகளைப் பூர்த்தி செய்யும் வண்ணம் ஒரு மாடல் எங்கள் நிறுவனத்தில் இல்லாமல் இருந்தது. அதை பூர்த்தி செய்யும் விதமாகப் பல வாடிக்கையாளர்களிடம் பேசி அவர்களின் ஆலோசனைகளுக்கு இணங்க உருவாக்கப்பட்டதே இந்த ஹண்டர் 350 எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த ஹண்டர் 350-ல் ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் மற்றொரு நிறுவனமான மீட்டியோரைட் பைக்கில் உள்ள அதே ஜே - சீரிஸ் இஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக்கில் டிரெண்டுக்கு ஏற்றார் போல் சிறிய எக்ஸாஸ்ட், சிறிய வீல்கள் மற்றும் டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ரெட்ரோவில் உள்ள வீல்களின் அளவு 110/80-17 மற்றும் 120/80-17 ஆக உள்ளது. மேலும் ரெட்ரோவில் டுயூப் டையர்கள் பொருத்தப்பட்டுள்ளன. மெட்ரோவில் டுயூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் அளவு 110/70-17(முன்) மற்றும் 140/70-17(பின்). இரண்டு வேரியண்டுகளின் டயர்களும் 17 இன்ச்களே. ராயல் என்பீல்ட் ரெட்ரோ பைக் ரூ.1,49,900 மற்றும் மெட்ரோ பைக் விலை ரூ. 1,68,900 ஆகும்.
இந்த பைக்கின் மெட்ரோ ரெட்ரோ வகைகளில் உள்ள வித்தியாசங்கள் என்னவென்றால் ரெட்ரோவில் வைர் ஸ்போக்ஸ் வீல்களும், மெட்ரோவில் அலாய் வீல்களும் இடம்பெற்றுள்ளன.
ராயல் என்பீல்ட் நிறுவனத்தின் பைக்குகளிலேயே மிகக் குறைந்த காலத்தில் அதிக பைக்குகள் விற்கப்பட்ட பைக்காக ஹண்டர் 350 மாறியிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும் ராயல் என்பீல்ட் நிறுவன பைக்குகள் அதிக அளவில் விற்கப்படுவது தமிழகத்தில்தான் எனவும் அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Royal enfield