• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 120வது ஆண்டு விழா கொண்டாட்டம் - கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்டுகள் அறிமுகம்!

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் 120வது ஆண்டு விழா கொண்டாட்டம் - கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்டுகள் அறிமுகம்!

கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்

கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்

ஒவ்வொரு வாரமும், திங்கள் அன்று ஒரு டிசைனும், புதன்கிழமை அன்று மற்றொரு டிசைனும் காட்சிப்படுத்தப்படும். ஆனால், அந்த மாடல்கள் அன்றே விற்பனைக்கு கிடைக்காது.

  • Share this:
புல்லட் என்றாலே, ஒரு தனி கம்பீரம் தோன்றும். எத்தனை புதிய மாடல் பைக்குகள் வந்தாலும், ராயல் என்ஃபீல்டு புல்லட்டுகளுக்கு இந்தியர்கள் மனதில் தனி இடம் உள்ளது. தற்போது வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் அளவுக்கு வளர்ந்துள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், தற்போது தனது 120 ஆண்டு விழாவை கொண்டாட இருக்கிறது. கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கைகளால் பெயின்ட் செய்யப்பட்ட லிமிடெட் எடிஷன் ஹெல்மட்டுகளை அறிமுகப்படுத்துகிறது.

இந்திய இரு சக்கர வாகன சந்தையில், வெற்றிகரமான மோட்டார் சைக்கிள் நிறுவனமாக தொடர்ந்து இயங்கி வருகிறது ராயல் என்ஃபீல்டு. 120 ஆண்டுகள், ஒரு பைக் உற்பத்தி நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருவதற்குக்கு காரணம், தனக்கென்று ஒரு அடையாளத்தை உருவாக்கி, அதனை மக்களின் வாழ்வியலுடன் இணைத்திருப்பது தான்.

தங்களின் 120 வருட பயணத்தை சிறப்பிக்கும் வகையில், பிரத்யேகமான 12 டிசைன்களில், ஒவ்வொரு டிசைனுக்கும் 120 ஹெல்மெட்டுகள் தயாரிக்க உள்ளதாக அறிவித்தது. ராயல் என்ஃபீல்டின் மதிப்புமிக்க வரலாற்றை காட்சிப்படுத்த, ஒவ்வொரு 10 ஆண்டுகளாக (Decade) பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு 10 ஆண்டின் பயணத்தையும் வெளிப்படுத்தும் டிசைன் கைகளால் வரையப்படுகிறது.

ராயல் என்ஃபீடு நிறுவனம், அக்டோபர் 18 தொடங்கி, ஒவ்வொரு வாரமும் இரண்டு லிமிடெட் எடிஷன் ஹெல்மெட் டிசைன்களை சந்தையில் அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது. இதன்படி, 12 டிசைன்களை, வாரம் 2 டிசைன் என்ற ரீதியில் ஆறு வாரங்களில் அறிமுகப்படுத்தும்.

ஒவ்வொரு வாரமும், திங்கள் அன்று ஒரு டிசைனும், புதன்கிழமை அன்று மற்றொரு டிசைனும் காட்சிப்படுத்தப்படும். ஆனால், அந்த மாடல்கள் அன்றே விற்பனைக்கு கிடைக்காது. வார நாட்களில் காட்சிக்கு வைக்கப்படும் ஹெல்மெட் மாடல்கள், அந்த வார இறுதியில் விற்பனைக்கு வரும். அதாவது, திங்கள் மற்றும் புதன்கிழமை அன்று அறிமுகமாகும் ஹெல்மெட்டுகள், சனி மற்றும் ஞாயிறு அன்று விற்பனை செய்வதற்கு சந்தைப்படுத்தப்படும்.

ஒவ்வொரு ஹெல்மெட்டுக்கும், ஒரு தனித்துவமான எண் வழங்கப்பட்டுள்ளது. இந்த எண்கள் 001/120 என்ற வரிசையில் தொடங்கி, 120/120 என்பதில் முடியும். மேலே கூறியது போல, ஒவ்வொரு டிசைனும் பத்தாண்டு கால வரலாற்றின் அடிப்படையில் அமைந்துள்ளது. இதனை தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில், குறிப்பிட்ட ஹெல்மெட்டின் டிசைன் உருவாக காரணமாக, ஊக்கமாக இருந்ததன் கதை, ஹெல்மெட்டின் பேக்கேஜில் ஒரு போஸ்ட்கார்டில் விவரிக்கப்பட்டடுள்ளதாக நிறுவனம் தெரிவித்தது.

Also read... இந்திய மார்க்கெட்டில் களமிறங்கும் மாருதி சுசுகியின் ஜிம்னி - அட்டகாசமான டீசர் வெளியீடு!

வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையில் உற்பத்தியாகும் ராயல் என்ஃபீல்டு ஹெல்மெட்டுகள், ISI, DOT, மற்றும் ECE சான்றிதழ்கள் பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த கைகளால் வரையப்பட்ட ஹெல்மெட்டுகள் இரண்டு வகைகளில் வருகின்றன. திறந்த முகம் ஹெல்மெட் (open face) விலை ₹6,950 என்றும், முழு முகம் ஹெல்மெட் (full face) விலை ₹8,450 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு மோட்டார் சைக்கிளின் நூற்றாண்டு கால பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் இந்த ஸ்பெஷல் ஹெல்மெட்டுகளை நிருவனத்தின் இணையத்தளத்தில் வாங்கலாம். இந்த ஹெல்மெட்டின் வழியே, நூற்றாண்டுக்கும் மேலான வரலாற்றை தங்களின் வாடிக்கையாளர்களுக்கு கொண்டு சேர்ப்பதில் பெருமை அடைகிறது என ராயல் என்ஃபீல்டு நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: