Home /News /automobile /

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 அறிமுகம்! இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 அறிமுகம்! இதன் சிறப்பம்சங்கள் என்னென்ன?

hunter 350

hunter 350

Royal Enfield Hunter 350 | தற்போது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 என்கிற புது மாடலை தான் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
`எப்படியாவது ஒரு நல்ல வண்டியாவை வாங்கி விட வேண்டும் என்கிற கனவு இன்று பெரும்பாலான இளைஞர்களுக்கு உண்டு. அப்படிப்பட்ட கனவு உள்ள இளைஞர்களின் முக்கிய தேர்வாக இருக்க கூடிய வண்டி ராயல் என்ஃபீல்டு தான். இந்த வண்டியின் அமைப்பு, தோற்றம், சிறப்பம்சம் என எல்லாமே அதிரடியாக இருப்பதால் தான் காலம் காலமாக இளைஞர்களுக்கு ராயல் என்ஃபீல்டு வண்டிகளின் மீது அதிக மோகம் இருந்து வருகிறது. அதே போன்று புதிதாக ராயல் என்ஃபீல்டு மாடல் வண்டி வெளியாகினாலும் அதை உடனே வாங்க வேண்டும் என்கிற ஆவலும் பலருக்கும் உள்ளது.

இந்நிலையில், தற்போது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 என்கிற புது மாடலை தான் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த வண்டியானது வருகின்ற ஆகஸ்ட் 7 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகி உள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஹண்டர் 350 வண்டியை பற்றிய வீடியோவும், அதன் சிறப்பம்சங்களும் வெளியாகி உள்ளன. குறிப்பாக இதன் தோற்றமே பலரையும் கவர்ந்து உள்ளது என்று சொல்லலாம். இது குறித்து மேலும் தகவல்கள் இதோ..

சிறப்பம்சங்கள்

நீண்ட நாட்களாக ராயல் என்ஃபீல்டு வண்டியை வாங்க வேண்டும் என்று காத்து கொண்டிருந்தவர்களுக்கு இந்த ஹண்டர் 350 வண்டியின் அம்சங்கள் நிச்சயம் பிடிக்கும். அந்த வகையில் இது 346cc UCE இன்ஜினிலிருந்து 20.2 hp மற்றும் 27 Nm டார்க்கை உருவாக்கும் 349cc J-பிளாட்ஃபார்ம் எஞ்சின் வகையை கொண்டுள்ளது. இதன் அமைப்பானது ஸ்ப்ளிட் டபுள் கிராடில் வகை ஃபிரேம்மை பெற்றுள்ளது. மேலும் இதில் அரை டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர் தரப்பட்டுள்ளது. இவற்றுடன் மேம்படுத்தப்பட்ட சுவிட்ச் கியர், தரமான மின்சார ஸ்டார்டர், டிரிப்பர் நேவிகேஷன் பாட் ஆகியவையும் வழங்கப்பட்டுள்ளது.



இந்த புதிய ஹண்டர் 350 வண்டியானது டூயல்-டோன் வண்ணங்களில் கிடைக்கும். மேலும் இதன் வலதுபுறத்தில் சிறிய ட்ரிப்பர் நேவிகேஷன் பாட் உடன் ஆஃப்செட் வட்ட கருவி கிளஸ்டரும் உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 ஆனது ராயல் என்ஃபீல்டின் நிலையான வடிவமைப்பிலிருந்து வித்தியாசமாகத் தோற்றம் அளிக்கிறது. இருப்பினும், இது ரவுண்ட் ஹெட்லேம்ப்கள், ரியர் வியூ மிரர்கள் மற்றும் டெயில் லேம்ப்கள் போன்ற சிக்னேச்சர் ரெட்ரோ பிட்களுடன் வெளியாக உள்ளது. இது தவிர, ஸ்போர்ட்டி கிராபிக்ஸ், சிங்கிள் பீஸ் சேடில் மற்றும் காம்பாக்ட் எக்ஸாஸ்ட் ஆகிய அம்சங்களும் இடம்பெறுள்ளது.

Also Read : பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்.!

விலை

இந்த வண்டியின் விலையானது சற்றே குறைவாக தான் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதன்படி, இந்த மாடலின் விலை ரூ. 1.7 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையைக் கொண்டுள்ளது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வண்டியை ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான சித்தார்த் லால் அறிமுகம் செய்து வைத்தார். மேலும் இந்த அறிமுக வீடியோவை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார். இது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Royal enfield

அடுத்த செய்தி