• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • லீக்கான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 புகைப்படம் - சுவாரஸ்யமான புதிய அப்டேட்

லீக்கான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 புகைப்படம் - சுவாரஸ்யமான புதிய அப்டேட்

லீக்கான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 புகைப்படம்

லீக்கான ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 புகைப்படம்

Royal Enfield Hunter 350 : ஹண்டரில் 349 cc இன்ஜினைப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 22 bhp அதிகபட்ச ஆற்றலையும் 27 Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்யும்.

  • Share this:
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் விரைவில் அறிமுகப்படுத்த இருக்கும் ராயல் என்ஃபீல்டு 350 ஹண்டர் பைக்கின் புகைப்படம் இணையத்தில் லீக்காகியுள்ளது.

Meteor 350 மற்றும் புதிய ஜென் கிளாசிக் ஆகிய மாடல்களுக்குப் பிறகு, ராயல் என்ஃபீல்டு நிறுவனம், 350 ஹண்டர் பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்கு களமிறக்க உள்ளது. புதிய வருடம் பிறப்பதற்கு இரண்டு மாதங்கள் மட்டுமே இருக்கும் நிலையில், வருட கடைசியில் விற்பனையை அதிகரிக்க ஹண்டர் பைக்குளை களமிறக்க உள்ளது. இந்த பைக் அறிமுகம் குறித்து ஏற்கனவே தகவல்கள் வெளியான நிலையில், இப்போது புகைப்படமும் லீக்காகியுள்ளது. சோதனை ஓட்டத்தின்போது, பைக்கின் புகைப்படம் எடுக்கப்பட்டு, இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த பைக்கும் Meteor 350 போன்று அதே எஞ்சின் மற்றும் பிளாட்ஃபார்மை அடிப்படையாக கொண்டதாக இருக்கும். அதாவது ஹண்டரில் 349 cc இன்ஜினைப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

 



 

இந்த என்ஜின் 22 bhp அதிகபட்ச ஆற்றலையும் 27 Nm உச்ச முறுக்குவிசையையும் உற்பத்தி செய்யும். டிரான்ஸ்மிஷன் விருப்பத்தில் ஐந்து வேக யூனிட் இருக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.



லீக்கான புகைப்படம் மற்றும் வீடியோவில் இடம்பெற்றிருக்கும் தகவல்களின்படி, ராயல் என்ஃபீல்டின் புதிய தலைமுறை ஹண்டர் பைக்குகள் விரைவாக 3 இலக்க வேகத்தை எட்டும் எனக் கூறப்படுள்ளது. அதிகாரப்பூர்வமான தகவல் இல்லையென்றாலும், யூகத்தின் அடிப்படையில் கூறப்படுகிறது. Meteor 350 மற்றும் புதிய கிளாசிக் 350 உடன் ஒப்பிடுகையில், மோட்டார் சைக்கிள் ஒட்டுமொத்த எடை குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்.



ஹண்டர் 350, டிரிப்பர் நேவிகேஷன் சிஸ்டம் கொண்ட செமி-டிஜிட்டல் கன்சோலுடன் வரும். இதே அம்சம் கிளாசிக் 350 மற்றும் ஹிமாலயன் 2021 ஆகியவற்றிலும் இருந்தது. இந்த பைக் அறிமுகப்படுத்தினால், இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஹோண்டா அறிமுகப்படுத்திய Honda CB 350 RS -க்கு கடும் போட்டியை உருவாக்கும். விலையைப் பொறுத்த வரை ரூ.170 லட்சம் வரை இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



இந்த ஆண்டின் தொடகத்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் புதிய படைப்பாக கிளாசிக் 350 ரெட்டிச் மாடல் சிவப்பு, பச்சை மற்றும் நீலம் என மூன்று வண்ணங்களில் விற்பனைக்கு வந்தது.



கிளாசிக் 350 ரெட்டிச் பைக்கில் புல்லட் மாடலில் இடம் பெற்றுள்ள அனைத்து அம்சங்களும் இடம்பெற்றுள்ளன. இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அமைந்துள்ளது.



முன்பக்க டயரில் 240மிமீ டிஸ்க் பிரேக் மற்றும் பின்புற டயரில் 130மிமீ டிரம் பிரேக் இணைக்கப்பட்டுள்ளது. தமிழ் நாட்டின் தலைநகர் சென்னையில் 1,47,831 ரூபாய் விலையிலும், பெங்களூரில் 1,55,456 ரூபாய் விலையிலும் விற்பனை செய்யப்படுகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: