Home /News /automobile /

வெளியானது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்.! இதன் விலை எவ்வளவு தெரியுமா.?

வெளியானது ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 பைக்.! இதன் விலை எவ்வளவு தெரியுமா.?

Royal Enfield

Royal Enfield

Royal Enfield Hunter 350 | ஒவ்வொரு முறையும் புது வித மாடல் ராயல் என்ஃபீல்டு வண்டியை அறிமுகம் செய்யும் போதும் மக்கள் அதற்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மாடல் வண்டிக்காக பல நாள் காத்திருந்த நிலையில், தற்போது அந்த வண்டி வெளியாகி பலரது வரவேற்பை பெற்று வருகிறது.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
ராயல் என்ஃபீல்டு பைக் என்றாலே ஒரு தனி கெத்து எப்போதும் இருக்கும். அதிலும் குறிப்பாக இளைஞர்களின் கனவு பைக்காக பல தலைமுறையாக இது இருந்து வருகிறது. ராயல் என்ஃபீல்டு வண்டிக்கென்று ஒரு தனி பெருமையும், அடையாளமும் இருப்பதாலே இந்த அளவிற்கு பெரிய அளவிலான ரசிகர் கூட்டம் ராயல் என்ஃபீல்டு வண்டிக்கு உள்ளது. ஒவ்வொரு முறையும் புது வித மாடல் ராயல் என்ஃபீல்டு வண்டியை அறிமுகம் செய்யும் போதும் மக்கள் அதற்காக ஆவலுடன் காத்திருப்பார்கள். அந்த வகையில், ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மாடல் வண்டிக்காக பல நாள் காத்திருந்த நிலையில், தற்போது அந்த வண்டி வெளியாகி பலரது வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் அனைத்து புதிய வகை ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 மாடல் வண்டிகள் தாய்லாந்தின் பாங்காக்கில் அறிமுக செய்யப்பட்டது. இதன் விலை ரூ.1.49 லட்சம் முதல் ரூ.1.68 லட்சமாக உள்ளது. இந்த வண்டிக்கான முன்பதிவு இன்று முதல் தொடங்குகிறது. அதே நேரத்தில், இந்தியாவில் இதன் விற்பனை மற்றும் டெலிவரியானது ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல் தொடங்குகிறது என அறிவிப்பு வந்துள்ளது.

இந்த பைக்கை ராயல் என்ஃபீல்டு தலைமை நிர்வாக அதிகாரி சித் லால் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராத்தில் வெளியிட்டு இருந்தார். அப்போது முதலே இந்த வண்டியின் மீதிருந்த ஆர்வம் பல இளைஞர்களுக்கு மேலும் அதிகரித்து விட்டது. இது ரெட்ரோ மற்றும் மெட்ரோ வடிவில் உருவாகியுள்ள வண்டியாக உள்ளது. எனவே இது இரண்டு வகை டிரிம்களில் வழங்கப்பட்டுள்ளது. ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வண்டியானது இதுவரை தயாரிக்கப்பட்ட ராயல் என்ஃபீல்டு வண்டிகளில் மிகவும் எடை குறைவான வண்டியாகும்.



இந்த வண்டி மிக கம்பீரமானதாகவும், நவீனமாகவும், கண்ணுக்கு கவர்ச்சியாகவும் உள்ளது. ரெபெல் ப்ளூ, ரெபெல் ரெட், ரெபெல் பிளாக், டாப்பர் ஆஷ், டாப்பர் ஒயிட் மற்றும் டாப்பர் கிரே ஆகிய வண்ணங்களில் ஹண்டர் 350 வண்டி கிடைக்கிறது. இதன் பெட்ரோல் டேங்க் பகுதியில் டூயல் டோன் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள உடல் பகுதி முழுவதும் கருப்பு நிறத்தில் வண்ணம் பூசப்பட்டுள்ளது.

Also Read : பஜாஜ் மற்றும் KTM இணைந்து உருவாக்கும் அதி நவீன எலக்ட்ரிக் பைக்!

இந்த ஹண்டர் 350 ஆனது 17 இன்ச் வீல் செட்டுடன் முன்புறத்தில் 110/70 அளவும் மற்றும் பின்புறமத்தில் 140/70 டியூப்லெஸ் டயர்கள் கொண்ட வண்டியாக உள்ளது. ராயல் என்ஃபீல்டு ஸ்க்ராம் 411-ஐப் போன்றே இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் பாட் இதில் தரப்பட்டுள்ளது. இது 13 லிட்டர் பெட்ரோல் திறனையும், 800 மிமீ இருக்கை உயரமும், 150.5 மிமீ கிரவுண்ட் கிளியரன்ஸும் மற்றும் 1370 மிமீ வீல்பேஸும் பெற்றுள்ளது. பிரேக்கிங் அம்சத்தை பொறுத்தவரை, 300 மிமீ டிஸ்க்குடன் டிவிஸ்ட்-பிஸ்டன் மிதக்கும் காலிபருடன் வருகிறது. அதே நேரத்தில் 270 மிமீ டிஸ்க்கும் உள்ளது. இதன் பின்புறத்தில் ஒற்றை பிஸ்டன் கொண்ட மிதக்கும் காலிபர் உள்ளது.

Also Read : இளசுகளை கவரும் ஹோண்டாவின் புதிய அறிமுகம்.! CB300F விலை, அம்சங்கள்.!

மேலும் சஸ்பென்ஷன் அமைப்பைப் பொறுத்தவரை, 130 மிமீ பயணத்துடன் 41 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகளைக் கொண்டுள்ளது. அதே நேரத்தில் ட்வின் டியூப் எமல்ஷன் ஷாக் அப்சார்பர் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வண்டியானது 349 சிசி சிங்கிள் சிலிண்டர் 4 ஸ்ட்ரோக் ஜே-சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது. இது 27 என்எம் பீக் டார்க் உடன் 20.2 பிஎச்பி டாப் பவரை உற்பத்தி செய்கிறது. 5-ஸ்பீடு கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ள இந்த ராயல் என்ஃபீல்டு ஹண்டர் 350 வண்டியானது லிட்டருக்கு 36.2 கிமீ மைலேஜ் வழங்குகிறது..
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Royal enfield

அடுத்த செய்தி