புதிய ஹிமாலயன் ஏபிஎஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்ட்!

news18
Updated: September 8, 2018, 8:17 PM IST
புதிய ஹிமாலயன் ஏபிஎஸ் பைக்கை அறிமுகப்படுத்தியது ராயல் என்ஃபீல்ட்!
ராயல் என்ஃபீல்ட் ஹிமாலயன் ஏபிஎஸ்.
news18
Updated: September 8, 2018, 8:17 PM IST
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் டுயல் ஏபிஎஸ் வசதிகொண்ட ஹிமாலயன் பைக்கை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், ஹிமாலயன் பைக்கை சில மாதங்களுக்கு முன் அறிமுகப்படுத்தியது. டூரிங் பைக் வகையான ஹிமாலயன் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 411 சிசி பைக்கான இதில் தற்போது ஏபிஎஸ் என்ற பிரேக்கிங் வசதியை இணைத்து புதிதாக ஹிமாலயன் ஏபிஎஸ் என்ற பெயரோடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த பைக் இரு வகைகளில்  1.79 லட்சம் ரூபாய் மற்றும் 1.81 லட்சம் ரூபாய் விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த புதிய ஹிமாலயனின் கன்சோலில் ஏபிஎஸ் இண்டிகேட்டர் லைட் மற்றும் முன் பக்க போர்க்கில் ஏபிஎஸ் ஸ்டிக்கர்கள் இடம்பெற்றுள்ளன.


ஐந்து கியர்களை கொண்ட இந்த ஹிமாலயன் பைக் 24.5 பிஎச்பி சக்தி கொண்ட ஏர் மற்றும் ஆயில் கூல் இன்ஜின் கொண்டது. மேலும், இந்த பைக்கில் மற்ற ராயல் என்ஃபீல்ட் பைக்குகளில் உள்ள வைப்ரேஷன்கள் முற்றிலும் குறைக்கப்பட்டுள்ளது. இதில் 21 இன்ச் முன் மற்றும் 17 இன்ச் பின் பக்க டயர்கள் உள்ளன. முதன் முதலில் ஏபிஎஸ் வசதியுடன் விற்பனைக்கு வந்த ராயல் என்ஃபீல்ட் பைக்கான, கிளாச்சிக் சிக்னல்ஸ் 350 கடந்த வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
First published: September 8, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...