Home /News /automobile /

ராயல் என்ஃபீல்ட் Himalayan 450 இந்தியாவில் எப்போது அறிமுகம்.?

ராயல் என்ஃபீல்ட் Himalayan 450 இந்தியாவில் எப்போது அறிமுகம்.?

ராயல் என்ஃபீல்டு

ராயல் என்ஃபீல்டு

Royal Enfield Himalayan 450 | ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வேலைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ராயல் என்ஃபீல்டு நிறுவனம் அடுத்தடுத்து பல புதிய மோட்டார் சைக்கிள்களை அறிமுகம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இந்த மாதம் இந்தியாவில் தனது ஆல்-நியூ ஹண்டர் 350-ஐ அறிமுகப்படுத்திய நிலையில், இப்போது நிறுவனம் தனது அடுத்த புதிய பைக் வெளியீட்டிற்கு தயாராகி வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 (Royal Enfield Himalayan 450) மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தும் வேலைகளில் மிக தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450 மோட்டார் சைக்கிளின் டீசர் முதன் முறையாக அதிகாரப்பூர்வமாக ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

Himalayan 450-ன் வெளியீட்டு தேதி அறிவிப்புக்கு முன்னதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தற்போது இந்த பைக்கின் ஃபர்ஸ்ட் லுக்கை டீசராக வெளியிட்டுள்ளது. இந்த அட்வென்ட்ச்சர் பைக் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது அதிகாரபூர்வ சோஷியல் மீடியாக்களில் Royal Enfield Himalayan 450-ன் டீசர் வீடியோவை ஷேர் செய்து இருக்கிறது.

இந்த சிறிய டீசர் வீடியோ கிளிப் Himalayan 450 மோட்டார் சைக்கிள் தண்ணீர் நிறைந்துள்ள பாதையில் கடந்து சென்று ஆஃப்-ரோட் சோதனைக்கு உட்படுத்தப்படுவதை வெளிப்படுத்துகிறது. மேலும் இந்த சிறிய கிளிப்பிங் Himalayan 450 பைக்கின் முன்பக்க எல்இடி ஹெட்லைட்டை மட்டும் வெளிப்படுத்தி இருக்கிறது.



 




View this post on Instagram





 

A post shared by Royal Enfield (@royalenfield)






வரவிருக்கும் புதிய Himalayan 450 புதிய K1 பிளாட்பார்மில் கட்டமைக்கப்படும், மேலும் இது ஹையர் சீட் பொசிஷனிங்குடன் வர வாய்ப்புள்ளது. BGR India-வின் கூற்றுப்படி இந்த புதிய பைக்கில் ஹெட்லேம்ப் கவுல், விண்ட்ஷீல்ட், ஃப்ரன்ட் பீக், ஃப்யூயல் டேங்க் மற்றும் சைட் பேனல்களில் மாற்றங்கள் உள்ளன. எடை திறனை அதிகரிக்க ஹிமாலயன் 450-ல் லக்கேஜ் ரேக் பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் புதிய 450சிசி மாடலில் ரைடிங் வசதி மேம்படுத்தப்பட்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read : இரு சக்கர வாகன ஓட்டிகளே உஷார்...  இந்த வகை ஹெல்மெட் அணிந்தால் அபராதம்.! 

ஹிமாலயன் 450 இந்த ஆண்டு நவம்பரில் EICMA 2022-ல் அறிமுகப்படுத்தப்படலாம் என்றும் பைக் வெளியீடு அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் என்றும் BGR India-வின் அறிக்கை கூறுகிறது. இது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதும் BMW G310GS, Hero Xpulse 300 மற்றும் KTM 390 அட்வென்ச்சர் ஆகிய பைக்குக்குகளுக்கு போட்டியாக இருக்கும் என்றும் அறிக்கைகள் கூறுகின்றன. புதிய ராயல் என்ஃபீல்டு ஹிமாலயன் 450-ல் புதிய 450சிசி சிங்கிள்-சிலிண்டர், லிக்விட்-கூல்டு, ஃப்யூயல்-இன்ஜெக்டட் எஞ்சின் இருக்கும். இதன் ஆற்றல் புள்ளிவிவரங்கள் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை என்றாலும், சுமார் 40 bhp மற்றும் 45 Nm பீக் டார்க்கை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக் எஞ்சின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது. பெரிய எரிபொருள் டேங்க் மற்றும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டரை இந்த பைக் பெற வாய்ப்புள்ளது.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Royal enfield

அடுத்த செய்தி