பழைய மவுசு இல்லையா...? வீழ்ந்தது ராயல் என்ஃபீல்டு விற்பனை...!

வாகன விற்பனைக்கான வீழ்ச்சியை ஈடுகட்ட முயற்சி செய்து வருவதாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Web Desk | news18
Updated: January 4, 2019, 11:25 AM IST
பழைய மவுசு இல்லையா...? வீழ்ந்தது ராயல் என்ஃபீல்டு விற்பனை...!
ராயக் என்ஃபீல்டு
Web Desk | news18
Updated: January 4, 2019, 11:25 AM IST
ராயல் என்ஃபீல்டு விற்பனை விகிதம் கடுமையான வீழ்ச்சி அடைந்துள்ளதாக அந்நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு பைக்குகள் மீதான மோகம் என்றுமே குறையாது என்றிருந்த நிலை மாறியுள்ளதாகவே கூறப்படுகிறது. தொடர்ந்து வளர்ச்சி அடைந்துவந்த ராயல் என்ஃபீல்டு-ன் விற்பனை கடந்த டிசம்பர் மாதம் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

சர்வதேச அளவில் 2018 டிசம்பரில் மொத்தம் விற்பனையான ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் எண்ணிக்கை 58,278. ஆனால், இது 2017-ம் ஆண்டு டிசம்பரில் 66,968 பைக்குகள் விற்பனை ஆகி இருந்துள்ளன. மொத்தம் 13 சதவிகித வீழ்ச்சியை சற்றும் எதிர்பார்க்கவில்லை என நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.

இந்திய அளவில் 2017-ல் 65,367 பைக்குகள் விற்பனை ஆகியுள்ளன. இதுவே 2018-ம் ஆண்டு 56,026 பைக்குகளே விற்பனை ஆகியுள்ளன. விற்பனை வீழ்ச்சி குறித்து சரியான காரணங்கள் எதையும் அறிவிக்காத ராயல் என்ஃபீல்டு நிறுவனம் இனிமேலாவது ஏற்றுமதிகளை அதிகரிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறதா பாமக..?
First published: January 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...