• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • குறைவான விலையில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியுள்ள ரைடிங் ஜாக்கெட்!

குறைவான விலையில் ராயல் என்ஃபீல்டு அறிமுகப்படுத்தியுள்ள ரைடிங் ஜாக்கெட்!

ராயல் என்ஃபீல்ட் எக்ஸ்ப்ளோரர் வி 3.

ராயல் என்ஃபீல்ட் எக்ஸ்ப்ளோரர் வி 3.

ரைடிங் செல்லும்போது, நாம் அணிந்திருக்கும் பேன்ட் உடன் இணைத்துக்கொள்ளும் ஜிப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாக்கெட்டிற்கு உட்புறத்தில் ஸ்மார்போன் வைக்கவும், பணம் வைக்கவும் பாக்கெட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
நாட்டிலேயே மிகக்குறைந்த விலையில் ரைடிங் ஜாக்கெட்டை அறிமுகப்படுத்தியுள்ள ராயல் என்ஃபீல்டு நிறுவனம், அனைத்து காலநிலைகளுக்கும் ஏற்றவகையில் வடிவமைத்துள்ளது.

சுற்றுலாவுக்கும், பயணத்துக்கும் மிக சிறிய இடைவெளி என்றாலும், இரண்டும் வெவ்வேறான அனுபவத்தைக் கொடுக்கக்கூடிவை. அதுவும் பைக் டிரைவ் உங்களுக்கு புதிய அனுபவத்தைக் கொடுக்கும். அப்படி, பயணம் மேற்கொள்பவர்களுக்கு ரைடிங் ஜாக்கெட்டுகள் அவசியம். ஏராளமான ரைடிங் ஜாக்கெட்டுகள் இருந்தாலும், சரியான ஜாக்கெட்டை தேர்தெடுப்பது சவாலானது. காரணம், ரைடிங் செல்பவர்கள் பல்வேறு கால நிலைகளை ஒரே நேரத்தில் எதிர்கொள்ள நேரிடும். அதனால், அனைத்துக்கும் ஏற்ற வகையிலான ஜாக்கெட்டுகளை தேர்தெடுப்பது அவசியம். 

சுற்றுலா, விளையாட்டு, நகரப்பயணம் என பல்வேறு சூழலுக்கு ஏற்ப ஜாக்கெட்டுகள் இருக்கின்றன. அதில், ரைடிங் செல்வதற்கு ஏற்ற வகையிலான ஜாக்கெட்டுகளை தேர்ந்தெடுக்க வேண்டும். ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள பிரத்யேகமான ரைடிங் ஜாக்கெட் (Riding jacket) உயர்ந்த தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. பல்வேறு காலநிலைகளுக்கும் பொருந்தும் வகையிலான பாதுகாப்பையும் கொடுக்கிறது. ராயல்என்ஃபீல்டு Explorer V3 ஜாக்கெட், இந்தியாவில் 8,950 ரூபாய்க்கு கிடைக்கிறது. 

மழையின்போது ஜாக்கெட்டின் மேலே rain-liner அணிந்துகொள்ளலாம், குளிர் காலங்களில் ஜாக்கெட்டின் உள்பகுதியில் ஜிப் வசதியுடன் தெர்மல் லைனர் (thermal-liner) வைத்து உடலை கதகதப்பாக வைத்துக்கொள்ளலாம். மிக விலை உயர்ந்த ரைடிங் ஜாக்கெட்டுகளுடன் ஒப்பிடும்போது, மிக குறைந்த விலையில் கூடுதல் பாதுகாப்பு வசதிகளை ராயல் என்ஃபீல்டு  Explorer V3 ஜாக்கெட் கொடுக்கிறது. மேலும், சில எதிர்பாராத தருணங்களில் ஏற்படும் விபத்துகளால் காயம் ஏற்பட நேரிடும்போது, ரைடிங் ஜாக்கெட் அணிந்திருந்தால் அதில் இருந்து தப்பிக்கலாம். 

உயர்தர ஜாக்கெட்டுகளாக இருந்தாலும் சில ஜாக்கெட்டுகள், அத்தகைய பாதுகாப்புகளை வழங்குவதில்லை. ஆனால், ராயல் என்ஃபீல்டு ஜாக்கெட் சிறு சிறு சிராய்ப்புகள் ஏற்படுவதில் இருந்து நிச்சயம் பாதுகாக்கிறது. மேலும், விலை உயர்ந்த ஜாக்கெட்டுகளாக இருந்தாலும், ரைடிங் செல்லும்போது உடலுடன் பொருந்தாவிட்டால், ஒருவிதமான அசௌகரியத்தை உணரநேரிடும். அத்தகைய கவலை இதில் இருக்காது. உடலுடன் நன்கு பொருந்தி நீண்ட தூரம் புத்துணர்ச்சியுடன் ரைடிங் செல்வதற்கு ராயல் என்ஃபீல்டு ரைடிங் ஜாக்கெட் உதவியாக இருக்கும்.  ஜாக்கெட்டில் ரிப்பட் ஸ்ட்ரெச் பேனல்கள் உள்ளதால், உங்களின் உடல் அமைப்புக்கு ஏற்ப நீட்டிக்கொள்ளலாம். 

Also read... அமெரிக்காவில் ட்ரெண்ட் ஆகும் கமலா ஹாரிஸின் 'Future is Female' சாக்ஸ்!

ரைடிங் செல்லும்போது, நாம் அணிந்திருக்கும் பேன்ட் உடன் இணைத்துக்கொள்ளும் ஜிப் வசதியும் கொடுக்கப்பட்டுள்ளது. ஜாக்கெட்டிற்கு உட்புறத்தில் ஸ்மார்போன் வைக்கவும், பணம் வைக்கவும் பாக்கெட் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. செல்போன் வைப்பதற்காக கொடுக்கப்பட்டுள்ள பாக்கெட்டில் தண்ணீர் புகாது என்பது கூடுதல் சிறப்பு. ஒருநாள் முழுவதும் நீங்கள் அணிந்திருந்தாலும், ஜாக்கெட்டில் இருந்து விடுபட வேண்டும் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாது. CE சான்று என்பது ஜாக்கெட் அணிபவரின் பாதுகாப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு உகந்த வகையில் இருந்தால் மட்டுமே கொடுக்கப்படும். அந்தவகையில் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஜாக்கெட்டுக்கு CE சான்று கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டார் விதிகளின்படி, 2018 ஆம் ஆண்டு முதல் ஐரோப்பிய நாடுகளில் பயணத்துக்கு பயன்படுத்தப்படும் ரைடிங் ஜாக்கெட்ஸ், டிரவுசர்ஸ், பூட்ஸ் ஆகியவை PPE வழிமுறைகள்படி கட்டாயம் ஆய்வு செய்யப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, ராயல் என்ஃபீல்டு ஜாக்கெட்டும் முறையாக பரிசோதனை செய்யப்பட்டு விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. விளையாட்டு, சுற்றுப்பயணம், ரைடிங் என அனைத்துக்கும் பொருந்தும் வகையில் இருக்கும் இந்த ராயல் என்ஃபீல்டு ஜாக்கெட், உயர்வான தரத்துடன் மிகக் குறைந்த விலையில் கிடைப்பதால், வாடிக்கையாளர்களின் வரவேற்பையும் பெற்றுள்ளது. இதேபோல், பேன்ட், பூட்ஸ், கிளவுஸ் ஆகியவற்றையும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் உயர்வான தரத்துடன் குறைவான விலையில் விற்பனை செய்கிறது.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: