புல்லட்டை 241kmph வேகத்தில் ஓட்டிய 18 வயது பெண்- வீடியோ

news18
Updated: September 10, 2018, 6:48 PM IST
புல்லட்டை 241kmph வேகத்தில் ஓட்டிய 18 வயது பெண்- வீடியோ
மாடிஃபை செய்யப்பட்ட காண்டினெண்டல் ஜிடி 650.
news18
Updated: September 10, 2018, 6:48 PM IST
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் காண்டினெண்டல் ஜிடி 650, இண்டெர்செப்டர் 650 ஆகிய இரு 650 ட்வின் என்ஜின் பைக்குகளை இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளது.

இந்த புதிய காண்டினெண்டல் ஜிடி 650 பைக்கின் சக்தியை உலகறியச் செய்ய, அந்நிறுவனம் அமெரிக்காவின் பிரபலமான போன்வில் உப்பு நிலத்தில் இந்த பைக்கை டெஸ்ட் டிரைவ் செய்துள்ளது. இந்த டெஸ்ட் டிரைவ் முடிவில், காண்டினெண்டல் ஜிடி 650, 241 கிலோமீட்டர் பெர் ஹவர் வேகத்தில் ஓடி சாதனை படைத்துள்ளது. இதை சர்வேதச மோட்டார் சைக்கிள் கூட்டமைப்பு அங்கீரித்த பின் இது உலக சாதனையாக முறைப்படி அறிவிக்கப்படும்.

இந்த டெஸ்ட் டிரைவின் வீடியோவை ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, சித்தார்த் லால் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 

Loading...

View this post on Instagram
 

A little taste of The Pure Pursuit of Speed! Team Royal Enfield - S&S gave Cayla Rivas a bike that could break records, and break them she did (pending FIM certification), the 650 Twin powering us into the record books on the first day! Not satisfied to stop there, the team worked tirelessly, getting in a total of 20 more runs over the rest of the week, and a top speed of over 150 mph. And that record? More to come soon... #royalenfield #royalenfieldnorthamerica #royalenfieldcustom #royalenfieldtwins #ridepure #bonnevillesaltflats #harrisperformance #sscycle #caylarivas #womenwhorace #batesleathers #freeridentertainment


A post shared by Sid Lal (@sidlal) on

இந்த டெஸ்ட் டிரைவை 18 வயதேயான மோட்டார் ரேஸ் வீராங்கனை கேய்லா ரிவாஸ் செய்து முடித்தார். இவர் ஏற்கெனவே 12 உலக சாதனைகளைச் செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த டெஸ்ட் டிரைவுக்காக காண்டினெண்டல் ஜிடி 650 பைக்கில் சிறிய மாறுதல்கள் செய்யப்பட்டிருந்தது. வேகமாக செல்ல பைக்கின் எடையைக் குறைக்கும் பொருட்டு தேவையில்லாத பாகங்கள் அகற்றப்பட்டிருந்தன.

காண்டினெண்டல் ஜிடி 650, இண்டெர்செப்டர் 650 ஆகிய இரு 650 ட்வின் என்ஜின் பைக்குகளையும் இந்த மாத இறுதியில் ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவரவுள்ளது.
First published: September 10, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...