அறிமுகமாகியது ஏபிஎஸ் வசதி கொண்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500

news18
Updated: September 14, 2018, 4:46 PM IST
அறிமுகமாகியது ஏபிஎஸ் வசதி கொண்ட ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 500
ராயல் என்ஃபீல்ட் 500 ஏபிஎஸ்.
news18
Updated: September 14, 2018, 4:46 PM IST
ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் ஏபிஎஸ் வசதிகொண்ட புதிய கிளாசிக் 500 பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இப்போது விற்பனைக்கு வரும் பைக்குகளில் ஆண்டி லாக் பிரேக்கிங் சிஸ்டம் என்ற ஏபிஎஸ் வசதி என்பது தவிர்க்கமுடியாத ஒன்றாக மாறிவிட்டது. வேகமாக சென்று பிரேக்கை செலுத்தும்போது ஸ்கிட் ஆகாமல் இருப்பதற்கு ஏபிஎஸ் வசதி அவசியம்.

சமீபத்தில் கிளாசிக் சிக்னல்ஸ் 350 என்ற பைக்கை, ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தியது. முதன் முதலில் ஏபிஎஸ் வசதியுடன் விற்பனைக்கு வந்த ராயல் என்ஃபீல்ட் பைக் இது என்பது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இப்போது அதேபோல் ஏபிஎஸ் வசதி கொண்ட கிளாசிக் 500 பைக்கை அந்நிறுவனம் விற்பனைக்குக் கொண்டுவந்துள்ளது. இதன் விலை ₹2.1 லட்சம். 499சிசி இன்ஜின் கொண்ட இந்த பைக்கின் விலை, ஏபிஎஸ் வசதி சேர்க்கப்பட்டுள்ளதால் ₹15,000 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த பைக் 27.6 ஹெச்பி சக்தியும், 41.3 என் எம் டார்க் திறனும் கொண்டது. இதே போல் ஹிமாலயன் மாடல் பைக்குகளிலும் ஏபிஎஸ் வசதியுடன் கூடிய மாடல் வெளிவந்துள்ளது.
First published: September 14, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...