1.53 லட்சம் ரூபாய்க்கு ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 ABS அறிமுகம்!

Royal Enfield Classic 350. (Image: Royal Enfield)

வருகிற ஏப்ரல் 1-ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களும் ABS பொருத்தப்பட்டே வெளியாக வேண்டும் என உத்தரவு உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
புதிதாக டூயல் சேனல் ABS பொருத்தப்பட்டு ராயல் என்ஃபீல்டின் க்ளாசிக் 350 இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் வெளியீடுகளில் இந்தியாவில் அதிக வரவேற்பைப் பெற்ற பைக் ஆக க்ளாசிக் 350 உள்ளது. தற்போது இந்த பைக்கில் கூடுதலாக ABS பொருத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் விலை 6 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு இந்த க்ளாசிக் 350 ABS இனி விற்பனைக்கு வரும்.

346cc ஏர்-கூல்டு சிங்கிள் எஞின் பொருத்தப்பட்டுள்ள க்ளாசிக் 350, 4000 rpm என்ற அளவில் 28 Nm டார்க் வெளியீடு கொண்டுள்ளது. 5 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைப்பு உள்ளது. கணமான என்ஜின் பொருத்தப்பட்டுள்ள க்ளாசிக் 350 ABS, மணிக்கு 120 கி.மீ வேகத்தில் சீறும் என்கிறது ராயல் என்ஃபீல்டு.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு பைக்குகளிலேயே இதுவரையில் ABS பொருத்தப்பட வேண்டிய பட்டியலில் ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 மற்றும் 350 ES ஆகிய இரண்டு பைக்குகள் மட்டுமே உள்ளன. புதிய மோட்டார் வாகனச் சட்டத்தின் அடிப்படையில் வருகிற ஏப்ரல் 1-ம் தேதிக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து மோட்டார் வாகனங்களும் ABS பொருத்தப்பட்டே வெளியாக வேண்டும் என உத்தரவு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பார்க்க: துல்லிய தாக்குதல் நடத்திய மிராஜ் 2000 போர் விமானத்தின் சிறப்பு அம்சங்கள்!
Published by:Rahini M
First published: