Home /News /automobile /

ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு அதீத வளர்ச்சி... எவ்வளவு தெரியுமா?

ஆகஸ்ட் மாதத்தில் ராயல் என்பீல்டு அதீத வளர்ச்சி... எவ்வளவு தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு வளர்ச்சி அதிகரித்துள்ளது

ராயல் என்ஃபீல்டு வளர்ச்சி அதிகரித்துள்ளது

இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வளர்ச்சி பாதிக்கும் மேல் உயர்ந்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
    ராயல் என்பீல்டு வண்டியின் விற்பனையானது ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் வளர்ச்சியானது 53% சதவீதம் உயர்ந்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

    பைக் பிரியர்கள் யாரைக் கேட்டாலும் அவர்களில் முக்கால்வாசி பேர் சொல்லக் கூடிய கனவு பைக் ராயல் என்பீல்டு தான். ஆம், பலரின் நீண்ட நாள் கனவே எப்படியாவது ஒரு ராயல் என்ஃபீல்டு வண்டியை வாங்கி விட வேண்டும் என்பது தான். இப்படிப் பலரும் இந்த வண்டியின் மீது தீராக்காதல் கொண்டிருப்பதற்கு சில முக்கிய காரணங்கள் இருக்கிறது. குறிப்பிட்டுச் சொல்லப்போனால் இந்த வண்டியின் எஞ்சின், டிசைன், திறன், வேகம் ஆகியவற்றை முக்கிய அம்சமாக பைக் பிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

    அதன்படி, ஆகஸ்ட் 2022-க்கான மொத்த விற்பனை புள்ளி விவரங்களை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் கடந்த வியாழக்கிழமை வெளியிட்டது. ஆகஸ்ட் 2021-இல் 45,860 மாடல்களையும், ஆகஸ்ட் 2022 இல் 70,112 மாடல்களையும் விற்பனை செய்துள்ளதால், இதன் வளர்ச்சியானது 53 சதவீதம் அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளது.

    2021-22 ஆம் ஆண்டில், ராயல் என்ஃபீல்டு 213,538 மாடல்களையும் 2022-23 ஆம் ஆண்டில் ராயல் என்ஃபீல்டு 312,872 மாடல்களை விற்பனை செய்ததாக உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

    ராயல் என்ஃபீல்டுக்கான ஆகஸ்ட் 2021-இன் மொத்த விற்பனை புள்ளிவிவரங்கள் 38,572 ஆகும். ஆகஸ்ட் 2022 இல் இது 61 சதவீதம் உயர்த்தப்பட்டு 62,236 மாடல்களாக இருந்தது. மேலும் ஏற்றுமதிகள் கூடுதலாக 7,288 மாடல்களில் இருந்து 7,876 மாடல்களாக ஒரே நேர இடைவெளியில் உயர்த்தப்பட்டது. இது 8.1 சதவீத வளர்ச்சி விகிதத்தைக் குறிக்கிறது. இதன் மொத்த விற்பனை 182,681 இலிருந்து 264,376 ஆக உயர்ந்துள்ளது.

    Also Read : ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.22 கோடி மதிப்புள்ளதாக மாறிய நானோ கார்.? எப்படி தெரியுமா.?

    இந்த புள்ளிவிவரங்கள் முறையே 2021-22 மற்றும் 2022-23-க்கானவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, இதன் உள்நாட்டு மொத்த விற்பனை 45 சதவீதம் உயர்ந்துள்ளது. அதே இடைவெளியில் ஏற்றுமதி விகிதமானது கூடுதலாக 57 சதவீதம் உயர்ந்துள்ளது. 2021-22 ஆம் ஆண்டில் மொத்த விற்பனை எண்ணிக்கை 30,857 மாடல்களாக இருந்தது, எனவே அவை 2022-23 இல் 48,496 மாடல்களாக தற்போது உயர்ந்துள்ளன. இந்த வளர்ச்சியின் அளவு மிகவும் பெரியது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

    இதன் வளர்ச்சிக்கு மிகப்பெரிய காரணங்களில் ஒன்று சமீபத்திய பைக்குகளின் வெளியீடு ஆகும். இது பெரும்பாலும் J வகை இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டவையாக இருந்துள்ளன. அந்த வகையில், கிளாசிக் ரீபார்ன், மீட்டியார் 350 மற்றும் சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஹண்டர் 350 ஆகியவை பெரும்பாலான மக்களால் மிகவும் விரும்பப்பட்ட மாடல் வண்டிகளாகும்.

    தற்போது, ​​ராயல் என்ஃபீல்டு வண்டிகளின் வரிசையில் எட்டு பைக்குகள் உள்ளன. J-பிளாட்ஃபார்ம் பைக்குகள் தவிர, ஸ்கிரம் 411, இமாலயன், காண்டினெண்டல் GT 650, இன்டெர்செப்டார் 650 மற்றும் புல்லட் ஆகியவை இவற்றில் அடங்கும். ராயல் என்ஃபீல்டு சமீபத்திய வண்டிகளில் இருக்க அம்சமும் இதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக உள்ளது.
    Published by:Janvi
    First published:

    Tags: Automobile, Royal enfield, Sales

    அடுத்த செய்தி