• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • நியூசிலாந்தில் சிறந்த மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ராயல் என்ஃபீல்ட் முதலிடம்

நியூசிலாந்தில் சிறந்த மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் ராயல் என்ஃபீல்ட் முதலிடம்

ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்ட்

ராயல் என்ஃபீல்டின் சர்வதேச சந்தை, இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மாடல்களின் அறிமுகத்தில் தொடங்கியது. இந்த மாடல்களின் ரெட்ரோ-ஸ்டைல், டூயல் சிலிண்டர் மோட்டார் சைக்கிள்கள், உலகளவில் பைக் ஆர்வலர்களின் பாராட்டுகளை பெற்றுள்ளது.

  • Share this:
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தியாவில் மிகப்பெரிய சந்தையைக் கொண்டுள்ள இந்த நிறுவனம், நன்கு கட்டமைக்கப்பட்ட சிறப்பான செயல்திறன் கொண்ட பைக்குகளுக்கு மிகவும் பிரபலமானது. சமீபத்தில், சர்வதேச சந்தையிலும் கால் பதித்துள்ள ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், மிகப்பெரிய முன்னேற்றத்தை ஆய்ந்துள்ளது. ஏனெனில், இந்த நிறுவனம் தற்போது நியூசிலாந்தில் பிரபலமாக இருக்கும், நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிராண்டாக மாறியுள்ளது. மேலும், இதே பிரிவில் இருக்கும் போட்டி தொழில்துறை நிறுவனங்களையும் பின்னுக்குத் தள்ளியுள்ளது.

ராயல் என்ஃபீல்டின் சர்வதேச சந்தை, இன்டர்செப்டர் 650 மற்றும் கான்டினென்டல் ஜிடி 650 ஆகிய மாடல்களின் அறிமுகத்தில் தொடங்கியது. சென்னையைச் சேர்ந்த, மிகப்பிரபலமான, முன்னணி இரு சக்கர வாகன நிறுவனத்தின், ரெட்ரோ-ஸ்டைல், டூயல் சிலிண்டர் மோட்டார் சைக்கிள்கள் உலகெங்கிலும் உள்ள பைக் ரசிகர்கள் மற்றும் பைக் ஆர்வலர்களால் பாராட்டப்பட்டுள்ளன. ராயல் என்ஃபீல்ட் நிறுவனம், நியூசிலாந்தில் நடுத்தர அளவு (250 சிசி முதல் 1000 சிசி) மோட்டார் சைக்கிள் சந்தையில் முதலிடம் பிடித்தது. இதன் வருவாய் ரீதியாக கணக்கிடும் போதும், நிறுவனம் போட்டி நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி, முதல் இடத்திற்கு உயர்ந்துள்ளது. பிராண்டின் ரெட்ரோ-நவீன பைக்குகள், சந்தையில் நிறுவனத்தின் ராங்க்கை உயர்த்த உதவி செய்துள்ளன.

ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் ஆசியா பசிபிக் (APAC) வணிகத் தலைவரான விமல் சம்ப்லி, இது ஒரு சாதனை என்றும், இதை அடைந்ததில் மிகவும் திருப்தியாக இருக்கிறது என்றும் கூறினார். நியூசிலாந்தில், முதலிடத்தில் உள்ள நடுத்தர அளவிலான மோட்டார் சைக்கிள் பிராண்டாக, என்ஃபீல்ட் இருப்பதில் மிகவும் மகிழ்ச்சியாகவும், பெருமையாகவும் இருப்பதாகக் கூறினார். ராயல் என்ஃபீல்ட் உலக அளவில், மிடில்­-வெயிட் வகை பைக்குகளின் சந்தையை விரிவுபடுத்தி, அதிலே வெற்றியும் பெற்றுள்ளது. தொடர்ந்து, இந்நிறுவனம், உண்மையாகவே, உலகளாவிய மோட்டார் சைக்கிள் பிராண்டாக மாறியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Also Read : ஆணுறுப்பை ரப்பரால் கட்டிய நபர் - ரத்தம் ஓட்டம் இல்லாமல் செயலிழக்கும் நிலைக்கு சென்ற துயரம்

தன்னுடைய வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், நிறுவனம், தங்கள் நெட்வொர்க், அணுகல் தன்மை, தயாரிப்புகள், ஆடை, ஜிஎம்ஏ வரம்பு மற்றும் பல்வேறு சலுகைகளை அறிவித்து, எல்லைகளை விரிவுபடுத்தியுள்ளனர். தனது சந்தையை ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் அறிமுகப்படுத்தியதில் இருந்து, மோட்டார் சைக்கிள் ரசிகர்களிடமிருந்து நிறைய பாராட்டுகளையும், நேர்மறையான விமர்சனங்களையும் நிறுவனம் பெற்றுள்ளது.

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தின் அர்பன் மோட்டோ இம்போர்ட்ஸ், ராயல் என்ஃபீல்ட் பைக்குகள் விநியோகத்தைப் பெற்று, இறக்குமதி செய்து, விற்பனை செய்கின்றனர். ராயல் என்ஃபீல்டின் வெற்றிக்கு பாராட்டும் வகையில், அர்பன் மோட்டோ இம்போர்ட்ஸ் இன் தலைமை செயல் அதிகாரி ஜோசப் எலாஸ்மர், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் உள்ள ராயல் என்ஃபீல்டுடனான கூட்டாண்மை பற்றி பெருமையாக இருக்கிறது என்றும், பிராண்டின் அதே மதிப்புகளைப் பகிர்ந்து கொள்வது மகிழ்ச்சியாக இருப்பதாகவும் மகிழ்ச்சியோடு கூறினார்.

Also Read : இப்படியும் ஒரு ஹை-டெக் ஆட்டோவா? அசத்தும் சென்னை நபர்!

நடுத்தர அளவு மோட்டார் பைக் சந்தைக்கு, பெரிய, நம்பிக்கைக்குரிய எதிர்காலம் இருப்பதாகவும் தெரிவித்தார். ராயல் என்ஃபீல்டின் தனித்துவமான ரைடிங் ஸ்டைல், பைக் ரைடர், பைக் மற்றும் நிலப்பரப்புக்கு இடையில் ஆகிய மூன்றையும் நன்றாக பிணைக்கும் அடிப்படையில் இயங்குகிறது. இது "உண்மையான மோட்டார் சைக்கிளிங்" என்று பெருமையோடு குறிப்பிடப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Tamilmalar Natarajan
First published: