ராயல் என்ஃபீல்டு பைக்குகளின் விலை அதிரடி உயர்வு - எந்தெந்த மாடல்கள் தெரியுமா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 350 சிசி ரக பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 350 சிசி ரக பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

  • Share this:
    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது 350 சிசி ரக பைக்குகளின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது.

    ஹீரோ மற்றும் யமஹா நிறுவனங்கள் வரிசையில், ராயல் என்பீல்டு நிறுவனம் அண்மையில் தனது கிளாசிக் 350 பைக்கின் விலையை உயர்த்தியது. அதன்படி கிளாசிக் 350 விலை அதிகபட்சமாக ரூ.5,992 வரை உயர்த்தப்பட்டது. இந்த விலை உயர்வானது ஒவ்வொரு வேரியண்ட்டிற்கும் மாறுப்பட்டது.

    அந்த வகையில், கிளாசிக் 350 ஸ்டான்டர்டு வேரியண்ட் முன்பை விட ரூ. 52,31 உயர்த்தப்பட்டது, கிளாசிக் பிளாக் ரூ.5,475 உயர்த்தப்பட்டது, கன்மெட்டல் கிரே ஸ்போக் வீல் ரூ. 5,531 உயர்த்தப்பட்டது, கன்மெட்டல் கிரே அலாய் வீல் ரூ.5,893 உயர்த்தப்பட்டது, சிக்னல்ஸ் ரூ. 5,791 உயர்த்தப்பட்டது, மெட்டாலோ சில்வர், ஆரஞ்சு எம்பெர் ரூ. 5,893 உயர்த்தப்பட்டது. மேட் மற்றும் குரோம் வேரியண்ட் விலை ரூ. 5,992 உயர்த்தப்பட்டது.

    ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கிளாசிக் 350 சிசி பைக்கின் விலையை கடந்த ஜனவரி மாதம் கணிசமாக உயர்த்திய நிலையில், தற்போது இதர 350 சிசி பைக்கின் விலையை அதிரடியாக உயர்த்தியுள்ளது. அதன்படி, புல்லட் 350 மற்றும் மீட்டியார் 350 சிசி பைக்குகளின் விலை உயர்த்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கிளாசிக் 350 சிசி பைக்கின் விலை அதிகபட்சமாக ரூ.5,992 வரை உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது ரூ.13,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது. அதில் மீட்டியார் 350 சிசி பைக்குகளின் விலை ரூ.6,000 வரையும், புல்லட் 350 சிசி ரக பைக்குகளின் விலை ரூ. 7,000 முதல் ரூ.13,000 வரையும் உயர்த்தப்பட்டுள்ளது.

    அதன்படி ராயல் என்ஃபீல்டு புல்லட் 350 விலை - ரூ 1,61,385, புல்லட் 350 இ.எஸ் - ரூ.1,77,342, மீட்டியார் 350 (பையர் பால்) - ரூ.2,08,751, மீட்டியார் 350 (ஸ்டெல்லார்) - ரூ.2,15,023, மீட்டியார் 350 (சூப்பர் நோவா) - ரூ.2,25,478 ஆகும். இந்த விலையேற்றமானது இந்த மாதம் முதல் அமலுக்கு வந்துள்ளது.



    உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
    Published by:Esakki Raja
    First published: