ரோல்ஸ் ராய்சின் புதிய எஸ்யுவி- விலை எவ்வளவு தெரியுமா?

news18india
Updated: May 23, 2018, 7:30 AM IST
ரோல்ஸ் ராய்சின் புதிய எஸ்யுவி- விலை எவ்வளவு தெரியுமா?
ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் புதிதாக வெளியிட்டுள்ள கல்லினன்.
news18india
Updated: May 23, 2018, 7:30 AM IST
சர்வதேச அளவில் சொகுசு கார்களில் முன்னணி இடத்தில் உள்ள நிறுவனம் ரோல்ஸ் ராய்ஸ். ரோல்ஸ் ராய்ஸ் முதன்முறையாக `கல்லினன்’ என்ற புதிய சொகுசு எஸ்யுவி காரை அறிமுகம் செய்துள்ளது.

இங்கிலாந்தை மையமாக கொண்டு செயல்படும் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தனது முதல் எஸ்யுவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது.  இந்த எஸ்யுவி மாடல் காரை தயாரிப்பது குறித்த முடிவை 2015-ம் ஆண்டே ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் திட்டமிட்டது. அதுமட்டுமல்லாமல் இந்தக் காருக்கு பெயர் வைப்பது முதல் காரின் உள்புறம் உள்ள டிசைன் வரை மிகவும் சிரத்தையுடன் இந்தக் காரை தயாரித்துள்ளது.

சிறப்பம்சங்கள் – இந்தக் காரில் 6.75 லிட்டர் ட்வின் டர்போ என்ஜின் பொறுத்தப்பட்டுள்ளது. இது 563 பிஹெச்பி மற்றும் 850 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை வெளிப்படுத்தக் கூடியது. அதுவும் மிகக் குறைந்த 1600 ஆர்பிஎம் வேகத்திலேயே இந்த சக்தி வெளிப்படும். நான்கு சக்கர சுழற்சி இருப்பதால் கரடு முரடான மலைப் பாதைகளிலும் சொகுசான பயணத்தை இது உறுதி செய்யும். இந்தக் காரின் சர்வதேச விலை 3.35 லட்சம் டாலர். இந்திய மதிப்பில் இந்தக் காரின் விலை ரூ.5 கோடியாகும்.


ஏற்கெனவே சொகுசு எஸ்யுவி கார் தயாரிப்பில் பென்ட்லி, போர்ஷே, ஜாகுவார், ஆஸ்டன் மார்டின், லம்போர்கினி போன்ற நிறுவனங்கள் இதுபோன்ற சொகுசு எஸ்யுவி கார்களை வெளியிட்டுள்ளன. லம்போகர்னி யூர்ஸ், பென்ட்லி பெண்டேகா வி8 ஆகியவை அதற்கு சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இந்தக் கார்களுடன் போட்டி போடும் வகையில் ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் கார் தயாரிக்கப்பட்டுள்ளது.
First published: May 18, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...