Home /News /automobile /

சிறிய ரக எலெக்ட்ரிக் விமானம்.. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் அடுத்த அதிரடி திட்டம்

சிறிய ரக எலெக்ட்ரிக் விமானம்.. ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தில் அடுத்த அதிரடி திட்டம்

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம்

ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனம்

Rolls-Royce : உலக அளவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைவருமே, மாற்று எரிபொருளில் இயங்கக் கூடிய விமானத்தை தயாரிக்க வேண்டும்.

அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் சிறிய ரக எலெக்ட்ரிக் விமானம் தயாரிக்க ரோல்ஸ் ராய்ஸ் இலக்கு நிர்ணயித்து உள்ளது. அந்த நிறுவனத்தில் பணியாற்றும் மூத்த அதிகாரி ஒருவர் இந்த தகவலை அண்மையில் தெரிவித்தார்.

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் தலைவர் ராப் வாட்ஸனின் கனவுத் திட்டமாக இது உருவாகிறது. சுமார் 600 கிலோ வாட் அளவுக்கு அவுட்புட் திறன் கொண்டதாக அமைய இருக்கும் இந்த விமானம் 6 முதல் 8 நபர்களை ஏற்றிக் கொண்டு, 80 நாட்டிகல் மைல் தொலைவு வரை பறந்து செல்லக் கூடியதாக இருக்கும்.

பேட்டரியின் செயல் திறனை பொருத்து, விமானம் பயணிக்கும் தொலைவு அதிகரிக்கப்படும் என்றும், நல்ல வலிமையான பேட்டரி தொழில்நுட்பத்தை கொண்டு 2030ஆம் ஆண்டுக்குள் 400 கிலோ மீட்டர் பயணிக்க கூடிய எலெக்ட்ரிக் விமானத்தை தயாரிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படியுங்கள் : கால் செய்யும் வசதியை அப்டேட் செய்கிறது வாட்ஸ் அஃப் நிறுவனம்

எலெக்ட்ரிக் விமானம் தயாரிப்பதற்கான தொழில்நுட்பத்தை மிகுந்த ரகசியத் தன்மையோடு காக்க வேண்டும் என்பதில் ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் த்லைவர் ராப் வாட்ஸன் மிகுந்த உறுதியோடு இருக்கிறார். அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளில் 8 இல் இருந்து 18 சீட்களை கொண்ட நகர்ப்புற விமான சேவை மற்றும் பிராந்திய விமான சேவை ஆகியவை பயன்பாட்டுக்கு வரும் என்று வாட்ஸன் தெரிவித்துள்ளார்.

உலக அளவில் உள்ள பல்வேறு நிறுவனங்கள், குறிப்பாக ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் முதல் பெரும் நிறுவனங்கள் வரை அனைவருமே, மாற்று எரிபொருளில் இயங்கக் கூடிய விமானத்தை தயாரிக்க வேண்டும் என்பதில் மும்முரமாக இருக்கின்றனர். நிலையான விமான எரிபொருள் என்ற திட்ட இலக்குடன் இதனை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. ஹைட்ரஜன் வாயு கொண்டு இயக்குவது அல்லது முழுவதும் எலெக்ட்ரிக் மற்றும் எலெக்ட்ரிக் - ஹைட்ரஜன் ஆகிய இரண்டிலும் இயங்கும் ஹைபிரிட் வகை விமானங்களை தயாரிக்க அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள் : செக்யூரிட்டி அலர்ட்: உங்கள் ஆப்பிள் ஐஃபோன் மற்றும் ஐபேட் போன்றவற்றை உடனடியாக அப்டேட் செய்யவும்

அதே சமயம், மிக அதிகமான பயணிகளை ஏற்றிச் செல்லவும், அதிகமான தூரம் பயணிக்கவும் எலெக்ட்ரிக் விமானங்கள் பயனுள்ளதாக இருக்காது என்று ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம் தெரிவிக்கிறது. இதுகுறித்து அந்நிறுவனத்தின் தலைவர் வாட்ஸன் கூறுகையில், “நீங்கள் நூற்றுக்கணக்கான மக்களுடன் பயணிக்க விரும்பினால், நீங்கள் ஆயிரக்கணக்கான மைல் தொலைவுக்கு பயணிக்க வேண்டும் என்று விரும்பினால், அதற்கு பேட்டரியை கொண்டு இயக்க முடியாது. ஏனென்றால், பேட்டரியின் திறன் என்பது லிமிடெட் டென்சிட்டி கொண்டதாகும். ஆனால், நிலையான விமான எரிபொருள் மூலமாக, பின்னர் ஹைட்ரஜன் மூலமாக இது சாத்தியப்படும்’’ என்று தெரிவித்தார்.

இதையும் படியுங்கள் : உலக வானொலி தினம்: தேன் சிந்தும் ராகம் - வானொலி

மிக ஆடம்பரமான, சொகுசான, பணம் படைத்தவர்கள் மட்டுமே வாங்கக் கூடிய விலையில் கார்களை விற்பனை செய்வதில் பெயர் பெற்ற நிறுவனமான ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனம், தற்போது பேட்டரிகளை கொண்டு இயங்கும் விமான தயாரிப்பில் ஈடுபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Electric car

அடுத்த செய்தி