Home /News /automobile /

சாலை விபத்து அறிக்கை குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ள சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

சாலை விபத்து அறிக்கை குறித்து புதிய விதிகளை வெளியிட்டுள்ள சாலைப் போக்குவரத்து அமைச்சகம்

சாலை விபத்து

சாலை விபத்து

Road Accident Claims | வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய, செயல்பாட்டில் உள்ள மொபைல் எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று மத்திய அரசின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சாலை விபத்துகள் குறித்த விரிவான விபத்து அறிக்கை (detailed accident report - DAR) தயாரிக்கும்போது கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான விதிமுறைகள் குறித்து மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மோட்டார் விபத்துக் காப்பீடு தீர்ப்பாயத்தில், வெகு விரைவாக கிளைம் பெற்றுக் கொள்வதற்கான வசதியாக இந்த நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொள்கிறது. காப்பீடு சார்ந்த அனைத்து தொழில்துறையினருக்கும் இந்த அறிவிக்கையை மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

வாகனத்திற்கு இன்சூரன்ஸ் செய்ய, செயல்பாட்டில் உள்ள மொபைல் எண் குறிப்பிடுவது கட்டாயம் என்று மத்திய அரசின் விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன.

2022 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதியிட்ட விரிவான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 4 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகள் தொடர்பாக அந்த அறிவிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விரைவான கிளைம் பெற வழிமுறை

விபத்து குறித்த தகவல் கிடைத்தவுன், காவல் துறை விசாரணை அதிகாரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொள்ளலாம். விபத்து நடந்த இடத்தை ஆய்வு செய்து, விபத்து நிகழ்வு மற்றும் வாகனங்களை ஃபோட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ALSO READ |  India vs Sri Lanka: இன்னும் 222 ரன்கள் மீதமிருக்கிறது இலங்கை!!- 2வது டெஸ்ட் டிக்கெட்டுகள் விற்று விட்டதாம்!

மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள, காயமடைந்த நபர்களையும் விசாரணை அதிகாரிகள் படம்பிடித்துக் கொள்ளலாம். விபத்து நிகழ்ந்த இடத்தில் உள்ள சாட்சிகள் மற்றும் வழிபோக்கர்கள் ஆகியோரிடம் விசாரணை அதிகாரி விசாரணை நடத்திக் கொள்ளலாம்.

விபத்து தொடர்பான முதல் விரிவான அறிக்கையை தயார் செய்து, அதுகுறித்து வாகன விபத்து தீர்ப்பாயத்திற்கு 48 மணி நேரத்திற்குள் தகவல் தெரிவிக்கலாம்.

வாகனத்திற்கான இன்சூரன்ஸ் ஆவணம் கிடைக்கப்பெற்றால், விபத்து விரிவான அறிக்கையை, தொடர்புடைய இன்சூரன்ஸ் நிறுவனத்தின் மண்டல அதிகாரிகளுக்கு விசாரணை அதிகாரி அனுப்பி வைக்கலாம்.

குழந்தைகளுக்கு பாதுகாப்பு அம்சங்கள்

மோட்டார் வாகனச் சட்டத்தின் பிரிவு 129இன் படி இந்த புதிய விதிகள் அமல்படுத்தப்படுகின்றன. 4 வயதுக்கும் குறைவான குழந்தைகளை வாகனத்தில் அழைத்துச் செல்லும்போது, அவர்கள் பாதுகாப்பிற்காக safety harness என்ற அமைப்பை பயன்படுத்தவும், கிரேஷ் ஹெல்மெட் பயன்படுத்தவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும், வாகனங்களை 40 கி.மீ. வேகத்தில் இயக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

கனரக வாகனங்களுக்கு கட்டுப்பாடு

மிகுந்த ஆபத்து கொண்ட பொருட்கள் அல்லது அபாயகரமான பொருட்களை கொண்டு செல்லும் கனரக வாகனங்களை, டிராக் செய்வதற்கான தொழில்நுட்ப கட்டமைப்புகளை வாகனங்களில் கட்டாயமாக ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Road accident, Road Safety

அடுத்த செய்தி