மணிக்கு 17 மரணங்கள்... பதற வைக்கும் சாலை விபத்துகளில் தமிழகத்துக்கு 2-வது இடம்!

மாதிரிப்படம்

இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும் மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் ஒவ்வொரு ஒரு மணி நேரத்துக்கும் சாலை விபத்தால் 17 பேர் மரணமடைகின்றனர் என மத்திய அரசு வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மக்களவையில் மோட்டார் வாகனச் சட்ட மசோதா 2019 மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரியால் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதலும் பெறப்பட்டது.

இந்த மசோதா தற்போது மாநிலங்களவையின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறது. போக்குவரத்துத் துறையில் உள்ள ஊழலை ஒழிக்கவும் சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தவும், இத்துறையில் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டை அதிகரிக்கவும் இந்த மசோதா உதவும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதின் கட்காரி கூறுகையில், “சாலைப் போக்குவரத்து இந்திய இரு சக்கர வாகன ஓட்டிகளுக்குப் பெரும் சவாலாகவே உள்ளது. அரசு ஆய்வின் அடிப்படையில் கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் சுமார் 1.5 லட்சம் பேர் சாலை விபத்துகளில் மரணமடைந்துள்ளனர்” என்றார்.

அரசு அறிக்கையின்படி, சாலை விபத்துகளில் மணிக்கு 17 பேர் மரணமடைவதாகக் கூறப்படுகிறது. இந்திய சாலைகளில் மணிக்கு 53 விபத்துகள் நடக்கிறதாம். இதில் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது. இரண்டாம் இடத்தில் தமிழகமும் மூன்றாம் இடத்தில் மஹாராஷ்டிராவும் உள்ளது.

மேலும் பார்க்க: சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு உதவினால் போலீஸ் விசாரணையா?- புது சட்டம் என்ன சொல்கிறது...?
Published by:Rahini M
First published: