கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும் வரை வேலை புறக்கணிப்பு - ரெனால்ட் நிசான் தொழிலாளர் சங்கம்!

கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கும் வரை வேலை புறக்கணிப்பு

ரெனால்ட் நிசான் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் தமிழக அரசு இன்று ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சமரச முடிவு எட்டப்பட்டு மீண்டும் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  • Share this:
சென்னை ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ரெனால்ட் நிசான் கார் ஆலையில் (ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ) கோவிட்-19 தொற்றுக்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் முறையாக அமல்படுத்தப்படும் வரை பணிகளில் ஈடுபட போவதில்லை என்ற முடிவை ரெனால்ட் நிசான் இந்தியா தொழிலாளர் சங்கம் (Renault Nissan India Thozhilalar Sangam - RNITS) எடுத்துள்ளது. எனினும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்படுகிறதா என்பதை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் இந்த விவகாரத்தில் நல்ல முடிவு எட்டப்படும் என்று தொழிலாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

முன்னதாக தொழிலாளர் சங்கம் வெளியிட்டஅறிக்கையில், தொழிலாளர்களின் பாதுகாப்பு குறித்து நிலவும் அச்சம் காரணமாகவும், அவர்களின் உயிரைப் பணயம் வைக்க விரும்பவில்லை என்பதையும் தங்கள் நிர்வாகக் குழு கருத்தில் கொண்டுள்ளதாக RNITS கூறி உள்ளது. தொழிற்சங்கத்தின் கூற்றுப்படி, கோவிட் தொற்றுக்கு எதிரான முக்கிய தடுப்பு நடவடிக்கையாக இருக்கும் தனிமனித இடைவெளியை அமல்படுத்துவதன் மூலம் உற்பத்தி குறைவதை நிசான் நிறுவன நிர்வாகம் விரும்பவில்லை. இது பற்றி யூனியன் கூறுகையில், கார் ஆலையின் பாடி ஷாப் கன்வேயர் லைனில் (car plant’s body shop conveyor line) ஊழியர்களிடையே சமூக இடைவெளி பராமரிக்கப்படவில்லை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தவிர, கோவிட் -19 காரணமாக இறந்த தொழிலாளர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கான புனர்வாழ்வு நடவடிக்கைகள் மற்றும் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கான மருத்துவ சிகிச்சை தொடர்பாக யூனியன் நிர்வாக குழு விடுத்த கோரிக்கைகளையும் நிறுவன நிர்வாகம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதுவரை 200 தொழிலாளர்களுக்கு மட்டுமே தடுப்பூசியின் முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. இரண்டாவது டோஸ் தடுப்பூசி இன்னும் போடப்படாததால் இன்னும் முழுமையாக அவர்களுக்கும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகவில்லை.

எனவே லைன் 1-ல் 3 ஷிஃப்ட்களிலும், லைன் 2-ல் 2 ஷிஃப்ட்களிலும் பணிகளை மேற்கொள்ள தொழிற்சங்கம் விடுத்த கோரிக்கையையும் நிறுவனம் ஏற்று கொள்ளவில்லை என்று குறிப்பிட்டு நிர்வாகத்திற்கு கடிதம் எழுதி உள்ளது. கடந்த வாரம், மே 26 முதல் தொழிற்சாலையில் கோவிட் -19 பாதுகாப்பு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும் வரை காலவரையற்ற பணி புறக்கணிப்பில் ஈடுபடுவதாக RNITS அறிவித்தது. கடந்த ஆண்டு முதல் ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் நிறுவனத்தில் ஐந்து தொழிலாளர்கள் இறந்துவிட்டனர் மற்றும் சுமார் 850 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்" என்று RNITS தலைவர் கே. பாலாஜி கிருஷ்ணன் முன்பு IANS-ஸிடம் தெரிவித்தார்.

Also read... மும்பையில் எரிபொருள் நிரப்பும் மொபைல் வாகனம் - ரிலையன்ஸ் அறிமுகம்!

பின்ரெனால்ட் நிசான் ஆட்டோமோட்டிவ் ஆலையை மே 26 முதல் மே 30 வரை ஐந்து நாட்களுக்கு மூடவும், மே 31 அன்று உற்பத்தியை மறுதொடக்கம் செய்யவும் முடிவு செய்தது. இதனிடையே ரெனால்ட் நிசான் கார் தயாரிப்பு தொழிற்சாலையில் தமிழக அரசு இன்று ஆய்வு மேற்கொள்ள சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ள நிலையில், சமரச முடிவு எட்டப்பட்டு மீண்டும் பணிகள் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: