Home /News /automobile /

கிராம புறங்களில் 300 புக்கிங் சென்டர்களை திறக்க உள்ள Renault India நிறுவனம்.!

கிராம புறங்களில் 300 புக்கிங் சென்டர்களை திறக்க உள்ள Renault India நிறுவனம்.!

ரெனால்ட்

ரெனால்ட்

Renault India | கிராம புறங்களில் உள்ளவர்களுக்கு சுமுகமான முறையில் கார் முன்பதிவு அனுபவத்தை கொண்டு வரவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவு மையங்கள் பயிற்சி பெற்ற கிராம அளவிலான தொழில்முனைவோர் (VLEs) மூலம் அனைத்து நிதி மற்றும் தயாரிப்புகள் தொடர்பான கேள்விகளையும் எளிதில் பெறும் வகையில் கொண்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
ஏராளமான வாகன உற்பத்தி நிறுவனங்கள் இந்தியாவில் உள்ளன. அவற்றில் அவ்வப்போது அப்டேட்களை தர கூடிய நிறுவனங்களே சந்தையில் நிலையான இடத்தை பிடிக்க கூடும். அதே போன்று வாடிக்கையாளர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்ய கூடியதாகவும் இவை இருக்க வேண்டும். குறிப்பாக அதன் விலையும் வாடிக்கையாளர்களின் பட்ஜெட்டுக்குள் அடங்குவதாக இருக்க வேண்டும். இந்த காரணிகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய கூடிய நிறுவனத்திற்கே அதிக விற்பனை நடக்கும்.

அந்த வகையில் பல வாகன உற்பத்தியாளர்களும் இவற்றை நிவர்த்தி செய்யும் வகையில் புது புது விஷயங்களை முயற்சி செய்து வருகின்றனர். இதில் முக்கியமாக சொல்ல போனால் ரெனால்ட் நிறுவனமானது வாடிக்கையாளர்களின் பல வித தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

ரெனால்ட் இந்தியா நிறுவனம், CSC கிரெமீன் இ-ஸ்டோர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்தியா முழுவதும் 300 ரெனால்ட் முன்பதிவு மையங்களைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. தொலைதூரப் பகுதிகளில் வாடிக்கையாளர்களின் அணுகலை அதிகரிக்கவும், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்குப் பிடித்தமான ரெனால்ட் காரை எளிதாகவும் வசதியாகவும் தங்கள் பகுதியில் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கவே இந்த முயற்சியை தொடங்கி உள்ளனர்.

இதன்படி, அருகிலுள்ள ரெனால்ட் முன்பதிவு மையத்தில் கிடைக்கும் QR Code-ஐ ஸ்கேன் செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச ஆவண முறைகளுடன் தங்கள் ரெனால்ட் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம். இந்த வகை ரெனால்ட் முன்பதிவு மையங்கள் வாடிக்கையாளர் தகவல் மையமாகவும் செயல்படும் என்று கூறப்பட்டுள்ளது. கார் தயாரிப்பு, அதன் சிறப்பம்சங்கள், காரின் விலை, லோன் வசதி திட்டங்கள் மற்றும் அந்த நேரத்தில் பொருந்தும் சலுகைகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் இங்கு நீங்கள் பெற்று கொள்ள முடியும்.



கிராம புறங்களில் உள்ளவர்களுக்கு சுமுகமான முறையில் கார் முன்பதிவு அனுபவத்தை கொண்டு வரவே இந்த முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த முன்பதிவு மையங்கள் பயிற்சி பெற்ற கிராம அளவிலான தொழில்முனைவோர் (VLEs) மூலம் அனைத்து நிதி மற்றும் தயாரிப்புகள் தொடர்பான கேள்விகளையும் எளிதில் பெறும் வகையில் கொண்டுள்ளது. எனவே இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு எளிய முறையில் வாகன விற்பனை செய்ய இயலும்.

Also Read : கார் லோன் எடுக்கும் ஐடியா இருக்கா? இதை படியுங்கள்..

CSC என்கிற இ-கவர்னன்ஸ் சேவையானது இந்திய அரசாங்கத்திற்கு கீழ் நடத்தப்பட்டு வருகிறது. குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்கான மையப்படுத்தப்பட்ட கூட்டு கட்டமைப்பை இது வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் முறையான நம்பகத்தன்மை மற்றும் நிலைத்தன்மையை இது உறுதி செய்கிறது.

Also Read : ரூ.5 லட்சத்திற்கும் குறைவாக மலிவு விலைவில் கிடைக்கும் டாப் 5 கார்களின் பட்டியல்!

ரெனால்ட் நிறுவனம் போன்றே பல நிறுவனங்களும் இது போன்ற கிராம மக்களுக்கான திட்டங்களை கொண்டு வந்தால் அவர்களின் விற்பனை மதிப்பும் பல மடங்கு உயர வாய்ப்பு உள்ளது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். அதே போன்று வாடிக்கையாளர்களின் பிரச்சனைகளையும் எளிதில் புரிந்து கொள்ள இந்த புதிய திட்டம் பெரிதும் உதவும்.
Published by:Selvi M
First published:

Tags: Automobile, Renault

அடுத்த செய்தி