ரெனால்ட் நிறுவன கார்களுக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி - யாருக்கு பொருந்தும்?

ரெனால்ட் நிறுவன கார்களுக்கு ஜிஎஸ்டி தள்ளுபடி - யாருக்கு பொருந்தும்?

Renault TRIBER

நாடு முழுவதும் ரெனால்ட், ஜி.எஸ்.டி சலுகையுடன் சேர்ந்து நிறுவனத்தின் சிறப்பு சலுகைகளையும் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு வழங்குரெனால்ட் நிறுவனத்தின் அறிவிப்பால், கார் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.கிறது.

  • Share this:
ஜி.எஸ்.டி நடைமுறைப்படுத்தப்பட்டபோது, மாற்றுத் திறனாளிகள் பயன்படுத்தும் வாகனங்களுக்கும் 18 % ஜி.எஸ்.டி வரி விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மாற்றுத் திறனாளிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியதால் இதனை உடனடியாக நீக்க வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கை வைக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அண்மையில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்ட மத்திய நிதி அமைச்சகம் மற்றும் கனரக தொழில்துறை அமைச்சகம், மாற்றுத் திறனாளிகளுக்கான வாகனங்களுக்கு 18 % ஜி.எஸ்.டி சலுகை வழங்க வேண்டும் என அறிவுறுத்தியது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி, இந்தியாவிலேயே முதல் நிறுவனமாக ரெனால்ட் இந்தியா நிறுவனம், தங்களது நிறுவனத்தில் கார் வாங்கும் மாற்றுத்திறனாளி வாடிக்கையாளர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது. அத்துடன், ஏற்கனவே வழங்கப்பட்டு வரும் மாதாந்திர சலுகையும் கூடுதலாக வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

புதிய திட்டத்தின்படி, நாடு முழுவதும் உள்ள ரெனால்ட் டீலர்கள், ஜி.எஸ்.டி சலுகையுடன் சேர்ந்து நிறுவனத்தின் சிறப்பு சலுகைகளையும் மாற்றுத் திறனாளி வாடிக்கையாளர்களுக்கு வழங்குவார்கள். சரியான ஆவணங்களை ஒப்படைக்கும் வாடிக்கையாளர்களுக்கு தள்ளுபடியுடன் சேர்த்து கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என ரெனால்ட் இந்தியா கூறியுள்ளது. இந்த சிறப்பு ஜி.எஸ்.டி சலுகை 4 மீட்டர் நீளமான வாகனங்கள், இன்ஜின் திறன் 1200 சிசிக்கும் குறைவான வாகனங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

Also read: பல்வேறு அம்சங்களுடன் இந்தியாவில் அறிமுகமாகும் நிசான் மேக்னைட் கார்!

இது தொடர்பாக பேசிய ரெனால்ட் நிறுவனத்தின் விற்பனை பிரிவு தலைவர் சுதிர் மல்கோத்ரா, சமூகத்தின் மிகச் சிறந்த பங்களிப்பாளர்கள் மாற்றுத் திறனாளிகளே. அவர்களின் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்துவதை ரெனால்ட் நிறுவனம் மிகவும் அக்கறை கொண்டுள்ளது. அதற்காகவே இந்த சலுகையை ரெனால்ட் நிறுவனம் வழங்கியுள்ளது. இதன்மூலம் எங்கள் நிறுவனத்தின் கார்கள் வாடிக்கையாளர்களை எளிதில் சென்றடையும்.

மாற்றுத் திறனாளிகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக மத்திய அரசு பொறுப்புடன் எடுத்துள்ள முயற்சியில், ரெனால்ட் நிறுவனமும் முழுமையாக பங்கெடுத்திருக்கிறது என்றார். ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ள புதிய சலுகையின்படி, அதிகபட்சமாக ரெனால்ட் DUSTER காருக்கு ரூ.30,000 வரை தள்ளுபடி அளிக்கப்படும். Renault KWID, Renault TRIBER வகை மாடல் கார்களுக்கு ரூ.9000 வரை தள்ளுபடி அளிக்கப்படும்.

இத்துடன், அந்தந்த மாதத்தில் அளிக்கப்படும் கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. ரெனால்ட் நிறுவனத்தின் அறிவிப்பால், கார் சந்தையில் மற்ற நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் ரெனால்ட் நிறுவனத்தின் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்
Published by:Rizwan
First published: