Home /News /automobile /

கவலைப்படாதீங்க பாஸ்..! நான் இருக்கேன்.. காரில் மயங்கியவரை 25 கிமீ பத்திரமாக கொண்டு சேர்த்த ரெனால்ட் க்ளியோ!

கவலைப்படாதீங்க பாஸ்..! நான் இருக்கேன்.. காரில் மயங்கியவரை 25 கிமீ பத்திரமாக கொண்டு சேர்த்த ரெனால்ட் க்ளியோ!

ரொனால்ட் கிளியோ

ரொனால்ட் கிளியோ

ஓட்டுநர் மயங்கிய பிறகு கார் சாலையில் நிதானமாக ஒரே சீரான வேகத்தில் சென்றதாகவும், வலது இடது என்று திரும்பினாலும் சில நொடியிலேயே கார் சாலையின் நடுவே வந்துவிட்டது என்று சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
கார் ஓட்டும்போது லேசாக கண் அயர்ந்தாலே சிவலோகம் தான். கண் மூடித்திறப்பதற்குள் ஒரு பிரளயமே முடிந்தது போல் ஆகிவிடும். வண்டி ஏதோ ஒரு மரத்திலோ, திட்டிலோ கல்லிலோ நின்றால் தான் ஆகும் . ஆனால் பெல்ஜியத்தில் மயங்கி விழுந்த ஓட்டுனரை 25 கிலோமீட்டருக்கு ஒரு கார் பத்திரமாக கொண்டு சேர்த்துள்ளது.

ஆகஸ்ட் 14 அன்று பெல்ஜியத்தில் உள்ள லீவென் நகருக்கு ரெனால்ட் கிளியோ காரில் சென்று கொண்டிருந்த 41 மதிக்கத்தக்க நபர் வண்டி ஒட்டி கொண்டிருக்கும்போதே நினைவிழந்து மயங்கி கார் ஸ்டேரிங் மீது விழுந்துவிட்டார்.

அவர் மயங்கியத்தைப் பார்த்த சிலர் காரை நிறுத்த முடியாமல் அவசர உதவிக்கும், காவல் துறைக்கும் செய்தியை அனுப்பியுள்ளனர். அவர்கள் வந்து சேரும்போது கார் 25 கிமீ தொலைவில் உள்ள ஹாலன் பகுதியில் உள்ள ஒரு பாதுகாப்பு தடுப்பை உடைத்து நின்றுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்து ஓட்டுனரை சோதனை செய்தபோது, அவருக்கு சிறு காயங்கள் கூட ஆகவில்லை. உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு மயக்கத்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மயங்கியதற்கான காரணம் குறித்தும் ஆராயப்பட்டு வருகிறது.

கால்நடைகளை விட குறைவான விலைக்கு குழந்தைகள் கடத்தப்பட்டு விற்பனை - நோபல் பரிசு பெற்ற சத்யார்த்தி வேதனை

கார் எப்படி 25 கிமீ பயணித்தது?

ஓட்டுனரின்றி, விபத்து ஏற்படாமல் கார் எப்படி 25 கிலோமீட்டர் வந்தது என்று ஆச்சரியப்பட்டனர். ஓட்டுநர் மயங்கிய பிறகும் கார் சாலையில் நிதானமாக ஒரே சீரான வேகத்தில் சென்றதாகவும், வலது இடது என்று திரும்பினாலும் சில நொடியிலேயே கார் சாலையின் நடுவே வந்துவிட்டது என்றும் சாலையில் சென்ற மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.

25 கிமீ ஓட்டுநர் இன்றி கார் எப்படி பயணித்தது என்று காவல்துறை ரெனால்ட்  நிறுவனத்திடம் கேட்டபோது வண்டியில் லேன் அசிஸ்ட் உள்ளது. அது கார் ஒவ்வொரு முறை வண்டிபாதையை விட்டு  விலகும்போதும் வண்டி மீண்டும் பாதையின் நடுவில் திரும்புவதை உறுதி செய்தது. மறுபுறம், க்ரூஸ் கண்ட்ரோல், காரின் வேகத்தை சீராகவும் வைத்திருந்தது. இதனால் தான் அவ்வளவு தூரம் விபத்து ஏற்படாமல் சென்றதாக கார் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஸ்பாட் லைட்:
இந்த சம்பவம் வலைத்தளங்களில் வருகிறது. ஓட்டுநர் மயங்கிய பின்னும் விபத்தின்றி ஓடிய கார் என்று இந்த கார் குறித்த தேடல்கள் அதிகமாகியுள்ளன. 3 டர்போ சார்ஜ் செய்யப்பட்ட இன்ஜினுடன் பெட்ரோல், டீசல் என இரண்டு மாறுபாடுகள் கொண்ட வண்டியாக உள்ளது. டீசல் வண்டி 25 கிமீ, பெட்ரோல் வண்டி 18 கிலோமீட்டரும் மைலேஜ் தருகிறது.

ரெனால்ட் க்ளியோ காரில் ஏபிஎஸ், டூயல் ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட், ஏஎஸ்ஆர் டிராக்ஷன் கன்ட்ரோல் மற்றும் க்ரூஸ் கன்ட்ரோல் போன்ற அனைத்து நிலையான பாதுகாப்பு அம்சங்களும் உள்ளது. B பிரிவிற்கான EuroNCAP இன் 5 ஸ்டார் கிராஷ் டெஸ்டிங் மதிப்பீட்டைபெற்ற முதல் கார் இதுவாகும்.
Published by:Ilakkiya GP
First published:

Tags: Accident, Renault

அடுத்த செய்தி