முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / Renault: இந்த மூன்று மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளிவீசும் ரெனால்ட்

Renault: இந்த மூன்று மாடல்களுக்கு தள்ளுபடியை அள்ளிவீசும் ரெனால்ட்

 ரெனால்ட் கார்

ரெனால்ட் கார்

Renault car discount | விற்பனை வேகத்தை மீண்டும் அதிகரிக்கவும், தொற்று ஏற்படுத்திய சிக்கலில் இருந்து விடுபடவும், கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தற்போது அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள 3 மாடல்களில் ஒவ்வொன்றுக்கும் சில அற்புதமான தள்ளுபடிகளை வழங்குகிறது.

மேலும் படிக்கவும் ...

நாட்டின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக வர ரெனால்ட் இந்தியா தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த முயற்சிகளின் ஒரு பகுதியாக முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரெனால்ட் இந்தியா நிறுவனம் மிகவும் சிறப்பாக செயல்பட தொடங்கி உள்ளது. எனினும் கடந்த ஆண்டு தொற்று காரணமாக பல நிறுவனங்களை போலவே ரெனால்ட் இந்தியாவும் விற்பனையில் பெரிய அளவு சரிவை சந்தித்தது. இந்நிலையில் விற்பனை வேகத்தை மீண்டும் அதிகரிக்கவும், தொற்று ஏற்படுத்திய சிக்கலில் இருந்து விடுபடவும், கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட் தற்போது அதன் போர்ட்ஃபோலியோவில் உள்ள 3 மாடல்களில் ஒவ்வொன்றுக்கும் சில அற்புதமான தள்ளுபடிகளை வழங்குகிறது.

பிரான்ஸை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனமான ரெனால்ட், இந்தியாவில் இந்த ஜூன் 2022-ல் Kwid, Kiger மற்றும் Triber ஆகிய கார்களுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் எக்ஸ்சேஞ்ச் பாலிசிகளின் கீழ் ஏராளமான தள்ளுபடிகளை அறிவித்துள்ளன. ஆம், ரெனால்ட் இந்தியாவானது க்விட் ஹேட்ச்பேக், கிகர் காம்பாக்ட் எஸ்யூவி மற்றும் ட்ரைபர் எம்பிவி ஆகியவற்றில் ஜூன் மாதத்திற்கான சிறப்பு தள்ளுபடிகளை வழங்குகிறது.

ரெனால்ட் க்விட் (Renault Kwid) காருக்கான ஜூன் மாத தள்ளுபடிகள்:

ரெனால்ட்டின் என்ட்ரி-லெவல் தயாரிப்பான க்விட் ஹேட்ச்பேக்கின் 2021-ஆம் ஆண்டு மாடல் ரூ.82,000 வரை தள்ளுபடியை பெறுகிறது, இதில் ரூ.35,000 மதிப்புள்ள கேஷ் டிஸ்கவுன்ட்ஸ், ரூ. 37,000 மதிப்புள்ள லாயல்டி போனஸ், ரூ. 10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் ஸ்கிராப்பேஜ் பாலிசி பெனிஃபிட்கள் உள்ளன. மறுபுறம் 2022-ஆம் ஆண்டு மாடல் ரெனால்ட் க்விட் ரூ.77,000 ரூபாய் வரை தள்ளுபடியை பெறுகிறது. இவற்றில் ரூ.30,000 கேஷ் டிஸ்கவுன்ட் வடிவில் அடங்கும், மற்ற 2 சலுகைகளும் அப்படியே இருக்கும்.

Also Read... இந்தியாவில் வெளியாக உள்ள வோல்க்ஸ்வேகன் விர்டஸ் கார்.! அசரவைக்கும் சிறப்பம்சங்கள்...

ரெனால்ட் கிகர் (Renault Kiger) காருக்கான ஜூன் மாத தள்ளுபடிகள்:

Renault Kiger காம்பாக்ட் SUV காரானது 1.0-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மூலம் இயக்கப்படுகிறது, இது நேச்சுரலி ஆஸ்பிரேட்டட் அல்லது டர்போசார்ஜ் செய்யப்பட்டு மேனுவல் அல்லது AMT கியர்பாக்ஸுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மாதம் நீங்கள் ரெனால்ட் கிகர் காரை வாங்க திட்டமிட்டிருந்தால் ரூ.75,000 வரை சேமிக்கலாம். இந்த காருக்கு ரெனால்ட் நிறுவனம், ரூ.55,000 மதிப்பிலான லாயல்டி பெனிஃபிட், கார்ப்பரேட் டிஸ்கவுன்ட் ரூ.10,000 மற்றும் ஸ்கிராப்பேஜ் பாலிசியின் கீழ் ரூ.10,000 மதிப்பிலான எக்ஸ்சேஞ்ச் பெனிஃபிட் என மொத்த தள்ளுபடிகள் ரூ.75,000-ஆக இருக்கிறது.

ரெனால்ட் ட்ரைபர் (Renault Triber) காருக்கான ஜூன் மாத தள்ளுபடிகள்:

Renault Triber என்பது கார் தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்படும் 7-சீட்டர் MPV ஆகும், இது சப்-4 மீட்டர் வகையின் கீழ் வருகிறது. ஜூன் 2022-ல் இந்த MPV ரூ.40,000 கேஷ் டிஸ்கவுன்ட்ஸ் மற்றும் ரூ.44,000 மதிப்புள்ள லாயல்டி பெனிஃபிட்ஸ் மற்றும் ஸ்கிராப்பேஜ் பாலிசியின் கீழ் ரூ.10,000 எக்ஸ்சேஞ்ச் போனஸையும் சேர்த்து மொத்தம் ரூ.94,000 தள்ளுபடி ரெனால்ட் ட்ரைபர் காரை வாங்குவோருக்கு வழங்கப்படுகிறது.

First published:

Tags: Cars