Home /News /automobile /

ரெனால்ட் நிறுவனத்தின் 7 நாள் இலவச கார் பரிசோதனை முகாம்.. சலுகைகள், பரிசுகளுடன் அசத்தல் சம்மர் கேம்ப்!

ரெனால்ட் நிறுவனத்தின் 7 நாள் இலவச கார் பரிசோதனை முகாம்.. சலுகைகள், பரிசுகளுடன் அசத்தல் சம்மர் கேம்ப்!

ரெனால்ட்

ரெனால்ட்

Renault | கார் விற்பனையை மட்டும் முதன்மையாக கொண்டு செயல்படாமல் வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதை எப்போதுமே ரெனால்ட் இந்தியா நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது.

இந்தியாவில் அதிகம் பேரால் விரும்பப்படும் கார்களில் ஒன்றான ரெனால்ட் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுடன் நட்புறவு மற்றும் நம்பகத்தன்மையை அதிகரிப்பதற்காக கோடை கால கார் பரிசோதனை மற்றும் சர்வீஸ் முகாமை அறிவித்துள்ளது.

கார் விற்பனையை மட்டும் முதன்மையாக கொண்டு செயல்படாமல் வாடிக்கையாளர்களுடன் நல்ல நட்புறவை ஏற்படுத்திக் கொள்வதை எப்போதுமே ரெனால்ட் இந்தியா நிறுவனம் வழக்கமாக கொண்டுள்ளது. சமீபத்தில் கூட இந்தியா முழுவதும் 300 ரெனால்ட் முன்பதிவு மையங்களைத் திறக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தொலைதூரப் பகுதிகளில் வாடிக்கையாளர்களின் அணுகலை அதிகரிக்கவும், கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கு தங்களுக்குப் பிடித்தமான ரெனால்ட் காரை எளிதாகவும் வசதியாகவும் தங்கள் பகுதியில் முன்பதிவு செய்வதற்கான வாய்ப்பை வழங்கவே இந்த முயற்சியை தொடங்க உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்திருந்தது.

தற்போது வாடிக்கையாளர்களிடையே நன்மதிப்பை அதிகரிக்கவும், போட்டியாளர்களை சமாளிக்கவும் இலவச சம்மர் முகாமை ரெனால்ட் நிறுவனம் தொடங்கியுள்ளது. நாடு முழுவதும் உள்ள ரெனால்ட் சர்வீஸ் சென்டர்களில் ஏப்ரல் 18ம் தேதி முதல் 24ம் தேதி வரை 7 நாட்கள் நடைபெற உள்ள சம்மர் முகாமில், காரின் அனைத்து முக்கியமான செயல்பாடுகளையும் விரிவாக ஆய்வு செய்து இலவச பரிசோதனையை வழங்க உள்ளது.

இதுபோன்ற பரிசோதனை முகாம்கள் மூலமாக காரின் செயல்திறனை மேம்படுத்த தேவையான செயல்முறைகளை மேற்கொள்வதோடு, வாடிக்கையாளர்களுக்கு தங்களது பிராண்ட் மீதான நன்மதிப்பை கூட்டவும் முடியும் என ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும் கோடைக்கால முகாமில் வாடிக்கையாளர்களுக்கான உதிரி பாகங்கள், டயர்கள் மற்றும் ஆச்சஸரிகள் ஆகியவற்றிற்கு சிறப்பு தள்ளுபடி அளிக்க உள்ளதாக ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இத்துடன் நீட்டிக்கப்பட்ட வாரண்டி மற்றும் ரோடு சைடு அசிஸ்டேண்ட் (RSA) போன்ற பிரத்யேக நன்மைகளையும் வழங்க உள்ளது.

இந்த தள்ளுபடியில் தேர்ந்தெடுக்கப்பட்ட உதிரி பாகங்கள் மீது 50% வரை தள்ளுபடி, தொழிலாளர் கட்டணங்கள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகளில் 15% தள்ளுபடி, தேர்ந்தெடுக்கப்பட்ட பாகங்களுக்கு 10% தள்ளுபடி, நீட்டிக்கப்பட்ட வாரண்டி சேர்க்கையில் 10% தள்ளுபடி மற்றும் சில சிறப்பு சலுகைகளும் அடங்கும் என ரெனால்ட் நிறுவனம் அறிவித்துள்ளது.

Also read... ரூ.60 ஆயிரம் முன்பணம் செலுத்தினாலே போதும்... Tata Punch SUV கார் வாங்க சரியான நேரம்!

மார்ச் 31, 2022க்கு முன்பாக ரெனால்ட் கார்களை வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே நீட்டிக்கப்பட்ட வாரண்டி மீதான 10 சதவீத தள்ளுபடி பொருத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்துகொள்ளும் தனது வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியமூட்டும் பரிசுகள் மற்றும் குஷியான பொழுதுபோக்கை வழங்கவும் ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. குழந்தைகளுக்கான ஓவியம் வரைதல் மற்றும் வினாடி வினா போன்ற போட்டிகளை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த சம்மர் கேம்பில் இலவச ஹெல்த் செக்அப், கார் பராமரிப்பு குறித்த அடிப்படை பயிற்சிகள், கார்கள் குறித்து தெரிந்து கொள்ளவேண்டிய அடிப்படை தகவல்கள் மற்றும் கார் ஓட்டும் விதிமுறைகள் ஆகியவை குறித்தும் வாடிக்கையாளர்களுக்கு கற்றுத்தர ரெனால்ட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Renault

அடுத்த செய்தி