மும்பையில் எரிபொருள் நிரப்பும் மொபைல் வாகனம் - ரிலையன்ஸ் அறிமுகம்!

மாதிரி படம்

ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், முதலமைச்சர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அவசர தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் இலவச எரிபொருள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
மும்பையில் ஆம்புலனஸ் வாகனங்களுக்கு அவசர காலத்தில் எரிபொருள் நிரப்பக்கூடிய பவுசரை (எரிபொருள் நிரப்பக்கூடிய வாகனம்) ரிலையன்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு அரசு சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவை களத்தில் இறங்கி வேலை செய்து வருகின்றனர். அந்த முயற்சிக்கு வலுசேர்க்கும் விதமாக நாட்டின் மிகப்பெரிய நிறுவனமான ரிலையன்ஸ் நிறுவனம், கோவிட் நோயாளிகளுக்கு பயன்படுத்தப்படும் அவசர ஆம்புலன்ஸ்களுக்கு இலவசமாக எரிபொருளை நிரப்பி வருகிறது. தமிழகத்திலும் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரிலையன்ஸ் BP மொபிலிட்டி லிமிட்டெட் நிறுவனம் சார்பில் இந்த உதவி செய்யப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்நிலையில், மும்பையில் ஆம்புலன்ஸூகளுக்கு எரிபொருள் நிரம்பும் மொபைல் பவுசரை (Bowser - எரிபொருள் நிரப்பக்கூடிய வாகனம்) ரிலையன்ஸ் நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ளது. இது தொடர்பாக அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ரிலையன்ஸ் பவுண்டேசன் சார்பில் கோவிட் நோயாளிகளை ஏற்றிச்செல்லும் ஆம்புலன்ஸூகளுக்கு நாடு முழுவதும் இலவசமாக எரிபொருள் நிரப்பும் சேவை கடந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட்டதாக கூறியுள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் எரிபொருள் மையங்கள் அனைத்தும் மும்பை நகரத்துக்கு வெளியே இருப்பதால், நகரத்துக்குள் இருக்கும் ஆம்புலன்ஸ்கள் இலவசமாக எரிபொருள் நிரப்பிக் கொள்ள முடியாமல் இருந்தது.

அதனை தவிர்க்கும் விதமாக நகரத்துக்குள் எரிபொருளை ஏற்றிச் சென்று ஆம்புலன்ஸூகளுக்கு நிரம்பும் மொபைல் பவுசர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. வோர்லி பகுதியில் உள்ள MCGM சரக்கு மையத்தில் இருந்து பவுசர் சேவை தொடங்கப்பட்டிருப்பதாக கூறியுள்ள ரிலையன்ஸ் நிறுவனம், Pan India திட்டத்தின் கீழ் இதுவரை 811.07 கிலோ லிட்டர் எரிபொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது.

21,080 ஆம்புலன்ஸ் வாகனங்கள் இந்த சேவையின் கீழ் எரிபொருளை நிரப்பியுள்ளதாகவும், இதன் மதிப்பு சுமார் 7.30 கோடி ரூபாய் என ரிலையன்ஸ் தெரிவித்துள்ளது. நாள்தோறும் 50 முதல் 60 கிலோ லிட்டர் எரிபொருளை ஜூன் மாதம் முழுவதும் வழங்க திட்டமிட்டிருப்பதாகவும், தேவைப்பட்டால் மேலும் நீடிக்க வாய்ப்புள்ளதாகவும் ரிலையன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது. 'Jio-bp பிராண்டின் கீழ் நாடு முழுவதும் உள்ள 1,421 பெட்ரோல் நிலையங்களில் இலவசமாக எரிபொருள் வழங்கப்படுகிறது. கோவிட் அவசர சிகிச்சையில் ஈடுபடும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ்களுக்கும் எரிபொருள் கொடுக்கப்படுகிறது.

Also read... Covid Vaccine: தடுப்பூசிக்கு ஒதுக்கப்பட்ட 35 ஆயிரம் கோடி செலவிடப்பட்டதன் விவரம் என்ன? மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் கேள்வி!

ஆக்சிஜன் சிலிண்டர்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள், முதலமைச்சர் அலுவலகத்தால் அங்கீகரிக்கப்பட்ட அவசர தேவைக்காக பயன்படுத்தப்படும் வாகனங்களும் இலவச எரிபொருள் சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். மும்பையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மொபைல் பவுசர் சேவை, கோவிட் நோயாளிகளின் உயிரைக் காப்பாற்றவும், விரைவாக கோவிட் பிடியில் இருந்து நகரம் மீளவும் தங்களால் முயன்ற சேவை என ரிலையன்ஸ் கூறியுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.;
Published by:Vinothini Aandisamy
First published: