• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • 15 வருட கார்களின் ரிஜிஸ்ட்ரேஷனை ரினீவல் செய்ய இனி 8 மடங்கு கட்டணம் - விவரம் உள்ளே

15 வருட கார்களின் ரிஜிஸ்ட்ரேஷனை ரினீவல் செய்ய இனி 8 மடங்கு கட்டணம் - விவரம் உள்ளே

Registration renewal for cars

Registration renewal for cars

15 வருட பழைய கார்களுக்கான ரிஜிஸ்டிரேஷன் ரினீவல் கட்டணம் 600 ரூபாயில் இருந்து இனி 5000 ரூபாயாக உயர்த்தப்படும்

  • Share this:
15 வருடங்கள் பழைய கார்களின் ரிஜிஸ்டிரேஷனை ரினீவல் செய்ய வேண்டும் என்றால் இனி 8 மடங்கு கூடுதலாக கட்டணம் செலுத்த வேண்டும்.

வெஹிகிள் ஸ்கிராப்பேஜ் பாலிசி:

பயணிகள் வாகனம் 20 ஆண்டுகளும், வணிக வாகனம் 15 ஆண்டுகளும் ஆயுட்காலத்தை கொண்டுள்ளன. அதன்பிறகு அவற்றின் செயல்பாடு சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடியவையாக இருக்கும் என்பதால், அந்த வாகனங்கள் மறுசுழற்சிக்கு உட்படுத்தப்படும். இதுதான் வாகன ஸ்கிராப்பேஜ் கொள்கை ஆகும். இந்தியாவில் இதுவரை இந்த கொள்கை நடைமுறையில் இல்லாத நிலையில், சுற்றுச்சூழல் பாதிப்பை கருத்தில் கொண்டு இந்த புதிய நடைமுறையை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

8 மடங்கு கட்டண உயர்வு:

வெஹிகிள் ஸ்கிராப்பேஜ் பாலிசியின் கொள்கைகளை வெளியிட்டுள்ள மத்திய அரசு, வரும் 2022 ஏப்ரல் 1ம் தேதி முதல் 15 வருடங்கள் பழைய வாகனங்களின் ரிஜிஸ்டிரேஷனை ரினீவல் செய்வதற்கான கட்டணத்தை 8 மடங்கு உயர்த்தி புதிய புதிய அறிவிப்பானையை வெளியிட்டிருக்கிறது. மத்திய சாலை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி இந்த கட்டண உயர்வு அமலுக்கு வர இருக்கிறது.

Also read: மேட்ரிமோனி வெப்சைட்டில் இப்படியும் நடக்குது மோசடி – மக்களே உஷார்!

அதன்படி, தற்போது 15 வருட பழைய கார்களுக்கான ரிஜிஸ்டிரேஷன் ரினீவல் கட்டணம் 600 ரூபாயில் இருந்து இனி 5000 ரூபாயாக உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல 15 வருடங்கள் பழைய பைக்குகளின் ரிஜிஸ்டிரேஷன் ரினீவல் கட்டணம் 300 ரூபாயில் இருந்து 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

மேலும், 15 வருட பழைய பேருந்து, அல்லது ட்ரக்குக்கான ஃபிட்னஸ் சான்றிதழுக்கான கட்டணம் 1500 ரூபாயில் இருந்து 12,500 ரூபாயாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மத்திய ரக சரக்கு வாகனங்கள் அல்லது பயணியர் வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்றிதழுக்கான கட்டணம் இனி 10,000 ரூபாயாக அதிகரிக்கப்படும்.

Also read:   ஓய்வுக்குப்பிறகு பாலிவுட் படங்களில் நடிக்கப்போகிறாரா மகேந்திர சிங் தோனி?

வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் மோட்டார்பைக்குகளை ரிஜிஸ்டர் செய்வதற்கான கட்டணம் 10,000 ரூபாயாகவும், வெளிநாட்டு இறக்குமதி கார்களை ரிஜிஸ்டர் செய்வதற்கான கட்டணம் 40,000 ரூபாயாகவும் இனி வசூலிக்கப்படும்.

ஃபிட்னஸ் சான்றிதழை புதுப்பிக்க காலதாமதமாகும் ஒவ்வொரு நாளுக்கும் கூடுதலாக 50 ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: