தமிழகத்தில் புதிய வாகன பதிவு வீழ்ச்சி... டிராக்டர் விற்பனை அதிகரிப்பு
தமிழகத்தில் ஜுலை மாதத்தில் புதிய வாகனங்களுக்கான பதிவில் 38.43 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அதேவேளையில், டிராக்டர் விற்பனை 59.32 சதவிகிதம் அதிகரித்துள்ளது.

மாதிரி படம்
- News18
- Last Updated: August 10, 2020, 7:55 PM IST
கொரோனா காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதோடு, வாகனங்கள், நகை உள்ளிட்ட ஆடம்பரப் பொருட்களுக்கான தேவை குறைந்துள்ளது. இதனால் புதிய வாகனங்களுக்கான பதிவு கடந்த மார்ச் மாதம் முதலே வீழ்ச்சியடைந்துள்ளது.
நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் புதிய வாகனங்களுக்கான பதிவு 70 சதவீதமும், மே மாதம் 88.87 சதவீதமும் வீழ்ச்சி வீழ்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில், ஜுலை மாதத்தில் நாடு முழுவதும் பயணிகள் வாகனங்கள் பிரிவில் 1,57,373 வாகனங்களும், வர்த்தக வாகனங்கள் பிரிவில் 19,293 வாகனங்களும், இருசக்கர வாகனங்கள் பிரிவில் 8.74 லட்சம் வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் 15,132 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், ஜுலை மாதத்தில் வாகனப் பதிவில் 38.43 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் 46.88 சதவீத சரிவுடன் மொத்தம் 9,001 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. Also read... குறைந்த தொற்று உறுதி விகிதம் - சென்னை மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
வர்த்தக வாகனங்கள் பிரிவில் 70.93 சதவீத வீழ்ச்சியுடன் 2,278 வாகனங்களும், இருசக்கர வாகனங்கள் பிரிவில் 35.67 சதவீத சரிவுடன் 95,902 வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் 86.74 சதவீத சரிவுடன் 521 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழகத்தில் டிராக்டர் விற்பனை மட்டும் அதிகரித்துள்ளது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் டிராக்டர் விற்பனை 59.32 சதவிகிதம் அதிகரித்துள்ளது. ஜுலை மாதத்தில் தமிழகத்தில் 2,879 டிராக்டர்கள் விற்பனையாகி உள்ளன.
நாடு முழுவதும் ஏப்ரல் மாதத்தில் புதிய வாகனங்களுக்கான பதிவு 70 சதவீதமும், மே மாதம் 88.87 சதவீதமும் வீழ்ச்சி வீழ்ச்சியடைந்திருந்தது. இந்நிலையில், ஜுலை மாதத்தில் நாடு முழுவதும் பயணிகள் வாகனங்கள் பிரிவில் 1,57,373 வாகனங்களும், வர்த்தக வாகனங்கள் பிரிவில் 19,293 வாகனங்களும், இருசக்கர வாகனங்கள் பிரிவில் 8.74 லட்சம் வாகனங்களும், மூன்று சக்கர வாகனங்கள் பிரிவில் 15,132 வாகனங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில், ஜுலை மாதத்தில் வாகனப் பதிவில் 38.43 சதவீதம் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதாக ஆட்டோமொபைல் டீலர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. பயணிகள் வாகனங்கள் பிரிவில் 46.88 சதவீத சரிவுடன் மொத்தம் 9,001 வாகனங்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன.