கிராமப்புறங்களில் டிராக்டர் விற்பனை அதிகரிப்பு... சோனாலிகா, மகேந்திரா நிறுவனங்கள் விற்பனையில் சாதனை

கிராமப்புறங்களில் டிராக்டர் விற்பனை அதிகரிப்பு... சோனாலிகா, மகேந்திரா நிறுவனங்கள் விற்பனையில் சாதனை
MS Dhoni Tractor
  • Share this:
இந்தியாவில் ஜூன் மாதத்தில் கிராமப்புறங்களில் டிராக்டர் விற்பனை அதிகரித்துள்ளதால் வாகன உற்பத்தி துறையினர் ஆறுதல் அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் ஏப்ரல் மாதத்தில் ஆட்டோமொபைல் துறை படு வீழ்ச்சியை சந்தித்தது. ஒரு வாகனம் கூட விற்பனையாகாத நிலையில், மே மாதத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகும் வாகனங்கள் விற்பனை மந்தமாகவே உள்ளது.

இந்நிலையில், ஜூன் மாதத்தில் கிராமப் புறங்களில் டிராக்டர் விற்பனை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. நாட்டின் முன்னணி நிறுவனங்களில் ஒன்றான சோனாலிகா நிறுவனம் உள்நாட்டில் மட்டும் 13,691 வாகனங்களை விற்றுள்ளது.Also read... தமிழகத்தில் 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்

மகேந்திரா அண்டு மகேந்திரா நிறுவனம் கடந்த மாதத்தில் ஒட்டுமொத்தமாக 36,544 யூனிட்களை விற்று சாதனைபடைத்துள்ளது. அந்நிறுவனத்தில் கடந்த ஆண்டு இதே காலட்டத்தில் 33,094 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
First published: July 6, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading