இந்தியாவில் இந்த ஆண்டு நவராத்திரி மற்றும் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் மக்களுக்கு எந்த அளவில் மகிழ்ச்சியை அள்ளிக் கொடுத்ததோ அதைவிட அதிகமாகவே இ-காமர்ஸ் மற்றும் மோட்டார் நிறுவனங்களுக்கு வாரிக் கொடுத்துள்ளது. காரணம், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல ஆய்வு நிறுவனம் வெளியிட்ட தரவுகளின் படி பண்டிகை கால சிறப்பு விற்பனை மூலமாக இ-காமர்ஸ் தளங்கள் சுமார் 40 ஆயிரம் கோடி வரை வருவாய் ஈட்டியதாக தெரிவிக்கப்பட்டது.
தற்போது நவராத்தி பண்டிகையை முன்னிட்டு இந்தியாவில் 5.39 லட்சம் வாகனங்கள் விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (அக்டோபர் 10) வெளியிட்டுள்ள தகவலின் படி, இந்தியாவில் இந்த ஆண்டு நவராத்திரி பண்டிகையின் போது வாகன சில்லறை விற்பனை 57 சதவீதம் அதிகரித்து, கிட்டத்தட்ட 5.4 லட்சம் யூனிட்கள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவராத்திரியின் போது விற்பனை செய்யப்பட்ட 3,42,459 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், நடப்பு ஆண்டு செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 5, 2022 வரையிலான வாகன சில்லறை விற்பனை 5,39,227 யூனிட்களாக அதிகரித்துள்ளதாக FADA தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
FADA தலைவர் மணீஷ் ராஜ் சிங்கானியா கூறுகையில், “இந்த ஆண்டு பதிவு செய்யப்பட்ட விற்பனை சாதனையாக மாறியுள்ளது. 2019 நவராத்திரி சிறப்பு விற்பனையின் போது, 4,66,128 யூனிட்கள் விற்பனையானது, மூன்று வருட இடைவெளிக்குப் பிறகு வாடிக்கையாளர்கள் மீண்டும் ஷோரூம்களுக்கு வந்திருப்பதை நவராத்திரி விற்பனை காட்டுகிறது” என தெரிவித்துள்ளார்.
இந்த ஆண்டு நவராத்திரியின் போது பாசஞ்சர் ரக வாகன விற்பனை 70.43 சதவீதம் உயர்ந்து, 1,10,521 யூனிட்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த ஆண்டு 64,850 யூனிட் பாசஞ்சர் ரக வாகனங்கள் விற்பனையானது குறிப்பிடத்தக்கது.
"இதேநிலை தீபாவளி பண்டிகை வரை தொடரும் என்று நாங்கள் நம்புகிறோம், ஏனெனில் இந்த பண்டிகையின் போது பயணிகள் வாகனங்களை விட இருசக்கர வாகனங்களின் விற்பனைக்கும் நல்ல சீசன் உள்ளது” என FADA தலைவர் மணீஷ் ராஜ் சிங்கானியா தெரிவித்துள்ளார்.
Read More:நாடு முழுவதும் ரயில்வே ஸ்டேஷன்களில் இலவச அதிவேக Wifi சேவை
இதேபோல், வர்த்தக வாகன சில்லறை விற்பனையும் 48.25 சதவீதம் அதிகரித்து, கடந்த ஆண்டு நவராத்திரியில் 15,135 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்ட நிலையில், 22,437 யூனிட்களாக விற்பனை அதிகரித்துள்ளது. மூன்று சக்கர வாகன விற்பனையும் இந்த ஆண்டு 9,203 யூனிட்களில் இருந்து 19,809 யூனிட்களாக அதிகரித்துள்ளது. 2021ம் ஆண்டு நவராத்திரி சமயத்தில், 11,062 யூனிட் டிராக்டர்கள் விற்பனை 57.66 சதவீதம் உயர்ந்து 17,440 ஆக உயர்ந்துள்ளது
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Auto