• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • அக்டோபர் விற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்..!

அக்டோபர் விற்பனையில் அடித்து நொறுக்கிய கியா செல்டாஸ்..!

கியா செல்டாஸ்

கியா செல்டாஸ்

கொரிய நிறுவனமான கியாவுக்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் கடந்த அக்டோபர் மாதத்தில் மட்டும் கியா மோட்டார்ஸ் சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான செல்டாஸ் கார்கள் விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது.

இந்தியா ஆட்டோமொபைல் துறை கடந்த 11 மாதங்களாகக் கடுமையான வீழ்ச்சிப் பாதையில் பயணித்துக் கொண்டிருந்தது. அந்த வீழ்ச்சிக் காலத்திலேயே விற்பனையில் சூடுகாட்டிய கியா மோட்டார்ஸ், கடந்த அக்டோபரில் மட்டும் 12,800 செல்டாஸ் காரை விற்பனை செய்துள்ளது.

கியா மோட்டார்ஸ் இந்தியாவில் அறிமுகமானதே செல்டாஸ் கார் மூலமாகத்தான். கொரிய நிறுவனமான கியாவுக்கு இந்தியாவில் பலத்த வரவேற்பு கிடைத்து வருகிறது. செல்டாஸ் காரின் விலை 9.69 லட்சம் ரூபாய் ஆகும். UVO கனெக்ட் உடனான கனெக்டட் கார் தொழில்நுட்பத்தை செல்டாஸ் கொண்டுள்ளது.

UVO கனெக்‌ஷன் மூலம் நேவிகேஷன், பாதுகாப்பு, வாகன மேலாண்மை, ரிமோட் கன்ட்ரோல் மற்றும் இதர செளகரியங்களைக் கையாள முடியும். AI வாய்ஸ் கமாண்ட், வாகனம் திருடப்பட்டால் ட்ராக் செய்யும் அம்சம், வாகன இயக்கத்தை முடக்குதல், SOS உதவி, ரிமோட் உதவுயுடன் என்ஜின் இயக்கம், காற்று சுத்திகரிப்பு, பாதுகாப்பு அலர்ட் எனப் பல சிறப்பு அம்சங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

1.5 பெட்ரோல், 1.5 டீசல், 1.4 டர்போ பெட்ரோல் ஆகிய மூன்று என்ஜின் அம்சங்கள் உள்ளன. 6 ஸ்பீடு மேனுவல் ட்ரான்ஸ்மிஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் பார்க்க: 10 நிமிடங்கள் சார்ஜ் ஏற்றினால் 360 கிமீ பயணிக்கலாம்..!- புதிய எலெக்ட்ரிக் கார் பேட்டரி அறிமுகம்

தொடரும் மழையால் நிரம்பும் நீர்நிலைகள்

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Rahini M
First published: