புது அப்டேட் உடன் RE Thunderbird 500X
புதிதாகப் பொருத்தப்பட்ட ABS அமைப்பு கொண்ட கனரக பைக் ஆக அறிமுகமாக உள்ளது Thunderbird 500X

புதிதாகப் பொருத்தப்பட்ட ABS அமைப்பு கொண்ட கனரக பைக் ஆக அறிமுகமாக உள்ளது Thunderbird 500X
- News18
- Last Updated: November 30, 2018, 9:46 PM IST
புதிதாக ABS எனப்படும் anti- brake lock system உடன் அறிமுகமாக உள்ளது ராயல் என்ஃபீல்டின் Thunderbird 500X.
இந்தியாவில் வருகிற ஏப்ரல் 2019 முதல் 125cc-க்கு மேல் உள்ள பைக்குகளில் anti- brake lock system பொருத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையொட்டி இந்தப் புதிய அப்டேட் உடன் களமிறங்குகிறது ராயல் என்ஃபீல்டு Thunderbird 500X.
ஏபிஎஸ் என்பது கனரக வாகனங்களுக்குப் பொருத்தப்பட வேண்டிய ஒரு பாதுகாப்பு பிரேக் அமைப்பு ஆகும். 125cc க்கு மேல் திறன் கொண்ட பைக்குகள் நிச்சயம் ABS பொருத்த வேண்டும் என்றும் அதற்குக் குறைவான திறன் கொண்ட பைக்குகள் நிச்சயம் CBS பொருத்திருக்க வேண்டும் என்று உத்தரவு அமலாக உள்ளது. CBS என்பது திறன் குறைவான (வாகனம்) பைக்குகள் பிரேக் பிடிக்கப்படும் போது வாகனத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் கருவி ஆகும். இந்த வகையில் தற்போது Thunderbird 500X அதிக மாற்றங்கள் இல்லாமல் புதிதாக ABS மட்டும் பொருத்தப்பட்டு அறிமுகமாகிறது. வழக்கம் போல் 27.5 பிஎஸ் திறன் கொண்ட 499cc சிலிண்டர் உள்ளது. ஐந்து கியர் கொண்ட இந்த பைக்கின் டார்க் வெளீயீடு 41.3 Nm ஆக உள்ளது.
இதர தண்டர்பேர்டு ரகங்களிலிருந்து வெளிபுறத் தோற்றம் மட்டுமே மாறுபட்டுள்ளது. ABS பொருத்தப்பட்டு மட்டுமே இனி RE பைக்குகள் வெளியாகும் என்றும் குறிப்பிட்டு அறிவித்துள்ளது ராயல் என்ஃபீல்டு நிறுவனம். ABS பொருத்தப்படாத பைக்குகளைக் காட்டிலும் 14,000 ரூபாய் கூடுதல் விலை இப்புதிய பைக்குகளுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் உற்பத்தி விலை 2.13 லட்சமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பார்க்க: மலைப்பாதையில் அந்தரத்தில் தொங்கிய லாரி!
இந்தியாவில் வருகிற ஏப்ரல் 2019 முதல் 125cc-க்கு மேல் உள்ள பைக்குகளில் anti- brake lock system பொருத்திருக்க வேண்டும் என்ற உத்தரவு அமலுக்கு வருகிறது. இதையொட்டி இந்தப் புதிய அப்டேட் உடன் களமிறங்குகிறது ராயல் என்ஃபீல்டு Thunderbird 500X.
ஏபிஎஸ் என்பது கனரக வாகனங்களுக்குப் பொருத்தப்பட வேண்டிய ஒரு பாதுகாப்பு பிரேக் அமைப்பு ஆகும். 125cc க்கு மேல் திறன் கொண்ட பைக்குகள் நிச்சயம் ABS பொருத்த வேண்டும் என்றும் அதற்குக் குறைவான திறன் கொண்ட பைக்குகள் நிச்சயம் CBS பொருத்திருக்க வேண்டும் என்று உத்தரவு அமலாக உள்ளது. CBS என்பது திறன் குறைவான (வாகனம்) பைக்குகள் பிரேக் பிடிக்கப்படும் போது வாகனத்தின் ஸ்திரத்தன்மையை உறுதி செய்யும் கருவி ஆகும்.