பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வரும் நிலையில், மின்சார வாகனங்களுக்கான (Electric vehicle) தேவை மக்களிடையே ஏற்பட்டிருக்கிறது. சமீப மாதங்களாக நாட்டில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை சூடு பிடித்துள்ளது. பல்வேறு ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மட்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்று வந்த நிலையில், மார்க்கெட்டிற்குள் அதிரடியாக நுழைந்துள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் மின்சார ஸ்கூட்டர்கள் பிரிவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. எலெக்ட்ரிக் டூ வீலர்களின் விற்பனை கணிசமாக உயர்ந்துள்ள நிலையில், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை பெரிதாக அதிகரிக்கவில்லை.
இந்நிலையில் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமான மாருதி சுசூகி, எலெக்ட்ரிக் கார்களை தற்போது அறிமுகப்படுத்துவதற்கான திட்டம் எதுவும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளது. எலெக்ட்ரிக் கார்களின் தேவை தற்போது எதிர்பார்க்கும் அளவில் இல்லை, குறைவாகவே இருக்கிறது. எனவே எலெக்ட்ரிக் கார்கள் தயாரிப்பில் நுழையும் முன், அதற்கான தேவை அதிகரிக்க வேண்டும் என்று விரும்புவதாக அந்நிறுவனம் கூறி இருக்கிறது. மாருதி சுசூகியின் Q2FY22 நிதிநிலை அறிக்கைகள் குறித்த ஒரு மெய்நிகர் நிகழ்வில் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன திட்டங்களை பற்றி கூற சொல்லி பத்திரிகையாளர்கள் கேட்டனர்.
Must Read | தொழில்நுட்ப உலகில் அடுத்த மைல்கல்… ‘மெட்டாவெர்ஸ்’ என்னும் பிரம்மாண்டமான விர்ச்சுவல் ரியாலிட்டி!
இதற்கு பதிலளித்து பேசிய அந்நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி.பார்கவா, இந்தியாவில் EV-யை அறிமுகப்படுத்த அவசரம் காட்டவில்லை என்பதை தெளிவுபடுத்தி உள்ளார். இது குறித்து பேசிய பார்கவா, மார்க்கெட்டில் தற்போது எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை மாதத்திற்க்கு சில நூறு யூனிட்கள் எனற அளவில் இருப்பதை பார்க்க முடிகிறது. ஆனால் எலெக்ட்ரிக் கார்களை விற்க மாருதி சுசூகி முடிவெடுத்தால் குறைந்தபட்சம் மாதத்திற்கு 10,000 யூனிட் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.
எங்களிடம் அதிக விற்பனையாகும் வகையிலான ஒரு கார் இருக்க வேண்டும், அதனை தயாரிக்க அதிக டிமாண்ட் இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். எனவே எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை அதிகரிக்கும் போது தான் அந்த செக்மென்ட்டில் நிறுவனம் நுழையும். எனினும் சந்தை நிலவரங்கள், சார்ஜிங் செய்ய தேவையான உள்கட்டமைப்பின் கிடைக்கும் தன்மை மற்றும் பேட்டரி விலை ஆகியவற்றைப் பொறுத்து, நிறுவனம் 2025-க்கு முன் ஒரு எலெக்ட்ரிக் காரைஅறிமுகப்படுத்தலாம் என்றார்.
Must Read | ஆதாரில் மொபைல் எண்ணை மாற்ற வேண்டுமா? ஆன்லைனில் அப்ளை செய்ய ஸ்டெப்ஸ் இதோ!
எவ்வாறாயினும் வணிக ரீதியாக ஒரு எலெக்ட்ரிக் வாகனத்தை வெளியிடுவதாக நாங்கள் இதுவரை ஒருபோதும் அறிவிக்கவில்லை. எலெக்ட்ரிக் வாகனத்தை எப்போது வெளியிடுவோம் என்றும் தெரியவில்லை. ஆனால் நான் முன்பே குறிப்பிட்டபடி எங்களது எலெக்ட்ரிக் கார் 2025-ம் ஆண்டுக்கு முன் வெளிவரலாம் என்றும் கூறினார். அனைத்துமே உள்கட்டமைப்பு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது, எலெக்ட்ரிக் பேட்டரிகளின் விலை நிர்ணயம் போன்ற காரணிகளின் சந்தை நிலவரங்களைப் பொறுத்தது. எனவே, விலை நிர்ணயம் செய்வது நம் கையில் இல்லை. பேட்டரிகளுக்கு உலகளாவிய தேவை இருப்பதால் பேட்டரிகள் பற்றாக்குறையும் நிலவுகிறது என்றும் குறிப்பிட்டார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Automobile, Electric Cars, Maruti Suzuki