முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / புதிய எலக்ட்ரிக் நேனோ காருடன் ரத்தன் டாடா... சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தது யார் தெரியுமா?

புதிய எலக்ட்ரிக் நேனோ காருடன் ரத்தன் டாடா... சர்ப்ரைஸ் கிப்ட் கொடுத்தது யார் தெரியுமா?

புதிய எலக்ட்ரிக் நேனோ காருடன் ரத்தன் டாடா

புதிய எலக்ட்ரிக் நேனோ காருடன் ரத்தன் டாடா

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னோடியாக இருந்து வருகிறது.

  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய ஆட்டோமொபைல் துறையில் புரட்சிக்கு வித்திட்டவர் ரத்தன் டாடா. கார் என்றாலே அது பிசினஸ் கிளாஸ் மக்கள் மற்றும் வசதி படைத்தவர்கள் மட்டுமே வைத்திருக்க கூடியது என்பதை அடித்து நொறுக்கியவர். உங்க கையில் ஒரு லட்சம் ரூபாய் இருக்கா? அப்போ நீங்களும் குட்டியான க்யூட்டான காருக்கு உரிமையாளர் ஆகலாம் என டாடா மோட்டார்ஸ் சார்பில் நேனோ காரை அறிமுகம் செய்துவைத்தார். இது நடுத்தர மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. நாலு பேர் சொகுசாக அமர்ந்து பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த காரை இந்தியா முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மக்கள் போட்டி, போட்டி வாங்கினர்.

தற்போது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பிலும் விற்பனையிலும் முன்னோடியாக இருந்து வருகிறது. இந்நிலையில் நடுத்தர மக்களின் கார் கனவில் விளக்கேற்றிய ரத்தன் டாடா புதிய எலக்ட்ரிக் நேனோ கார் முன்பு நின்று வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நேனோ காரை தயாரிப்பில் அசத்திய டாடாவுக்கே அதை யார் பரிசாக கொடுத்திருப்பார்கள், அதில் அப்படி என்ன ஸ்பெஷல் என தெரிந்து கொள்ள பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

டாடா மோட்டார்ஸ் உட்பட இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிக்கும் பல முன்னணி நிறுவனங்களுக்கும் பவர் டிரைன் சப்ளை செய்யும் நிறுவன்மாக எலக்ட்ரா EV என்ற நிறுவனம் இருந்து வருகிறது. இந்த எலக்ட்ரா EV நிறுவனத்தை உருவாக்கியதும் ரத்தன் டாடா தான். இந்த எலக்ட்ரா EV நிறுவனத்தின் தலைமையிடம் புனேவாக இருந்தாலும், உற்பத்தி தொழிற்சாலையில் கோவையில் உள்ளது. இந்நிறுவனம் Tigor EV மற்றும் Nexon EV ஆகியவை பேட்டரி கார்களுக்கான EV பவர்டிரெய்ன் தயாரிப்புகளை வழங்கி வருகிறது. இந்த நிறுவன ஊழியர்கள் தங்களது நிறுவனரான ரத்தன் டாடா மீதான அன்பை கட்டும் வகையில், அவருக்கு ஒரு அற்புதமான நேனோ காரை வடிவைத்து கொடுத்துள்ளனர்.

Also read... பிப்ரவரி 2022 கார் டிஸ்கவுண்ட்ஸ்: ரூ.38,000 வரை சலுகை வழங்கும் மாருதி சுசுகி!

இதுகுறித்து லின்கிடுஇன் பக்கத்தில் எலக்ட்ரா EV, “எங்கள் நிறுவனர் தனிப் பயனாக்கப்பட்ட 72 V நேனோ காரில் பயணிக்கும் போது, ஒட்டுமொத்த எலக்ட்ரா EV டீமும் பெருமை அடைகிறோம். அந்த கார் எலக்ட்ரா EV-ன் பவர்டிரெய்னின் பொறியியல் வல்லமையால் இயக்கப்படுகிறது. திரு. டாடாவிற்கு நானோ EVயை வழங்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம் மற்றும் அவருடைய விலைமதிப்பற்ற கருத்துகள் மூலம் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டோம்” என பதிவிட்டுள்ளது.

இந்நிறுவனம் பரிசாக கொடுத்த காருடன் ரத்தன் டாடாவும், அவருடைய எக்சிகியூட்டிவ் அசிஸ்டென்ட் சாந்தனு நாயுடு இருக்கும் போட்டோஸ் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தற்போது எலக்ட்ரிக் வாகனங்களுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ள நிலையில், ரத்தன் டாடாவுக்கு பரிசளிக்கப்பட்ட இந்த நேனோ எலக்ட்ரிக் காரை டாடா நிறுவனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யுமா? என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

First published:

Tags: Ratan TATA