Home /News /automobile /

விலைகுறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த எஸ்யூவி- ரேஞ்ச் ரோவர் வெலார்..!

விலைகுறைந்த இந்தியாவின் மிகச்சிறந்த எஸ்யூவி- ரேஞ்ச் ரோவர் வெலார்..!

ரேஞ்ச் ரோவர் வெலார்

ரேஞ்ச் ரோவர் வெலார்

இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசான நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

  • News18
  • Last Updated :
    உலகளவிலும், இந்திய அளவிலும் மிகச்சிறந்த எஸ்யூவி-களில் ஒன்றாக உள்ளது ரேஞ்ச் ரோவர் வெலார்.

    மிகவும் ஸ்போர்ட்டி தோற்றத்தில் சொகுசான எஸ்யூவி ஆக உள்ளது ரேஞ்ச் ரோவர் வெலார். தோற்றத்திலேயே போட்டியில் உள்ள அத்தனை எஸ்யூவி-க்களையும் பின் தள்ளியுள்ளது வெலார். தற்போது ரேஞ்ச் ரோவர் வெலார் காருக்கு 16 லட்சம் ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆக, 88.88 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 72.47 லட்சம் ரூபாய் ஆகக் குறைக்கப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இரண்டு என்ஜின் ரகங்கள் உடனான வெலார் 2.0 லிட்டர் டீசல் மற்றும் 2.0 லிட்டர் பெட்ரோல் கொண்டுள்ளது. வடிவமைப்புகளில் பெரிய ஆடம்பரம் இன்றி மினிமலிசம் முறையை லேண்ட் ரோவர் பின்பற்றியுள்ளது.

    வெளிப்புறத் தோற்றத்தைவிட உட்புற வடிவமைப்புகள் மிகவும் கவர்வதாய் உள்ளன. தொடுதிறன் உணர்வு கொண்ட ஸ்டியரிங் வீல், அத்தனை செயல்பாடுகளுக்கும் தேவைப்படும் பட்டன்கள், டச் ஸ்கிரீன் சிஸ்டம் என அசத்துகிறது வெலார். இந்தியாவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ள ரேஞ்ச் ரோவர் சொகுசான நீண்ட பயணங்களுக்கு ஏற்றதாக உள்ளது.

    மேலும் பார்க்க: அசுரா...பெயருக்கேற்ற அசுரத் தோற்றத்துடன் ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 500!

     
    Published by:Rahini M
    First published:

    Tags: Range Rover

    அடுத்த செய்தி