வாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர்களா? அதற்கும் அபராதம் விதிக்கும் காவல்துறை

ஆனால், பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது.

வாகனங்களில் ஜாதி, மதம் சார்ந்த ஸ்டிக்கர்களா? அதற்கும் அபராதம் விதிக்கும் காவல்துறை
மாதிரிப்படம்
  • News18
  • Last Updated: September 4, 2019, 10:44 PM IST
  • Share this:
இந்தியாவில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது.

இந்த வகையில் ராஜஸ்தான் மாநில போக்குவரத்துத் துறையினர் வாகனங்களில் சாதி மற்றும் மத அடையாளங்கள் உடனான ஸ்டிக்கர்கள் இருந்தால் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளனர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் வாகனங்களில் சாதி, மதம், அரசியல் சார்ந்த அடையாளங்களை ஸ்டிக்கர்களாக ஒட்டிக்கொள்ளும் வழக்கம் அதிகரித்துக் காணப்படுகிறது. இதைத் தடுக்க இதுபோன்ற அடையாளங்கள் நம்பர் ப்ளேட் உள்ளிட்ட சில குறிப்பிட்ட இடங்களில் இருந்தால் வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரையில் அபராதம் விதிக்கப்பட உள்ளது.


ஆனால், பெயர், பதவி, படிப்பு போன்ற ஸ்டிக்கர் அல்லது எழுத்துகளுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்றும் காவல்துறை விளக்கியுள்ளது. ஸ்டிக்கர் கலாச்சாரத்தை ஒழிப்பதற்கான முக்கியக் காரணமே அவை வாகன ஓட்டியின் பாதிகாப்பைக் கேள்விக்குறி ஆக்குவதுதான் என்றும் கூறப்படுகிறது.

மேலும் பார்க்க: ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு
First published: September 4, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்