• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • தொடர்ந்து ஆறு முறையாக உலகின் மிக சிறந்த ஏர்லைன் இதுதான் - ஏன் தெரியுமா ?

தொடர்ந்து ஆறு முறையாக உலகின் மிக சிறந்த ஏர்லைன் இதுதான் - ஏன் தெரியுமா ?

கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ்

கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகச் சிறந்த பிசினஸ் கிளாசுக்கான ‘ஆன் போர்ட் கேட்டரிங் ’ விருதினையும் பெற்றிருக்கிறது.

  • Share this:
தொடர்ச்சியாக ஆறாவது முறையாக ஸ்கைட்ராக்ஸ் WAA- வின் ‘ஏர்லைன் ஆஃப் தி இயர்’ விருதை வென்றது கத்தார் ஏர்வேஸ்.

சர்வதேச விமான போக்குவரத்து மதிப்பீட்டு நிறுவனமான ஸ்கைடிராக்ஸ், இந்த ஆண்டின் சிறந்த விமான நிறுவனமாக “ கத்தர் ஏர்வேஸ் “ நிறுவனத்தை சிறந்த ஏர்லைனாக தேர்ந்தெடுத்துள்ளது. உலகிலேயே சிறந்த பிசினெஸ் கிளாஸ், பிசினெஸ் கிளாஸ் லாஞ்ச், பிசினெஸ் கிளாஸ் ஏர்லைன் சீட், பிசினஸ் கிளாஸ் ஆன் போர்டு கேட்டரிங் மற்றும் மத்திய கிழக்கில் சிறந்த ஏர்லைன் போன்ற வசதிகளை கொண்டுள்ளது.

அதுமட்டுமில்லாமல், இந்த வசதிகளை சரியான முறையில் தொடர்ந்து கொடுத்து வருகிறது என்றும் கூறியியுள்ளது. இது கத்தார் ஏர்வேஸ் பெரும் 6வது விருதாகும். இதற்கு முன்னர் 2011, 2012, 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளிலும் விருதினை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் மிகசிறந்த பிசினஸ் கிளாஸ் :

கத்தார் ஏர்வேஸ் இந்த விருதை மட்டுமல்லாமல், உலகின் சிறந்த ஆடம்பரமான அல் மௌர்ஜன் வசதிக்காக சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. இதே போல குயூஸ்யூய்ட் (Qsuite) என்ற இவர்களின் பிசினஸ் கிளாஸ் இருக்கைக்கான காப்புரிமை வாங்கி உள்ளது. உலகின் சிறந்த பிசினஸ் கிளாஸ் வகுப்புக்காக ஐந்து வருடத்துக்கும் மேலாக வெற்றியை தக்க வைத்துள்ளது கத்தார் ஏர்வேஸ்.

கத்தார் ஏர்வேஸ் உலகின் மிகச் சிறந்த பிசினஸ் கிளாசுக்கான ‘ஆன் போர்ட் கேட்டரிங் ’ விருதினையும் பெற்றிருக்கிறது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், மத்திய கிழக்கில் சிறந்த விமான நிறுவனம் என்ற பெயரையும் பெற்றுள்ளதாகும். ஹமாத் சர்வதேச விமான நிலையமானது இப்பகுதியில் உள்ள ஒரே ஸ்கைடிராக்ஸ் ஐந்து நட்சத்திர விமான நிலையம் என்ற சிறப்பையும் பெற்றுள்ளது. ஜனவரி 2021ல் ஸ்கைட்ராக்ஸ் கோவிட் -19 பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற முதல் உலகளாவிய விமான நிறுவனமாக மாறியது கத்தார் ஏர்வேஸ் நிறுவனம்.

Also read... யமாஹா நிறுவனத்தின் YZF-R15 V4 பைக் உதிரி பாகங்கள் விலையுடன் அறிவிப்பு!

இதுபற்றி பேசிய கத்தார் ஏர்வேஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பேக்கர், ‘உலகின் சிறந்த விமான நிறுவனமாக ஆறாவது முறையாக அங்கீகரிக்கப்பட்டது எங்கள் விமான நிறுவனத்திற்கு ஒரு நம்பமுடியாத சாதனை ஆகும்.இந்த விருதுக்காக எங்கள் விசுவாசமான பயணிகளுக்கு இந்நேரத்தில் நன்றியை தெரிவித்து கொள்ள கடமைப்பட்டுள்ளேன். எங்களுக்கு மட்டுமல்ல , உலகின் சவாலான இக்காலகட்டத்தில் நாங்கள் பெற்ற இந்த விருது எங்களின் கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றியாக பார்க்கிறேன்.

இந்த வெற்றிக்கு முதல் காரணம் எங்களின் வாடிக்கையாளர்கள் தான். நாங்கள் அவர்களை ஒருபோதும் கைவிடவில்லை.மக்களை வீட்டிற்கு அழைத்துச் செல்ல நாங்கள் பறந்து கொண்டே இருந்தோம் இந்த கடின காலகட்டத்திலும்.மக்கள் மற்றும் ஊழியர்களின் உயிர்களுக்கு பாதுகாப்பு கொடுப்பதிலும் முழுமையாக கவனம் செலுத்தினோம்' என்று கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: