Home /News /automobile /

தமிழகத்தில் புதிதாக 900 இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள்.. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!

தமிழகத்தில் புதிதாக 900 இ-சார்ஜிங் ஸ்டேஷன்கள்.. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் திட்டம்!

எலெக்ட்ரிக் கார்கள்

எலெக்ட்ரிக் கார்கள்

தமிழ்நாட்டின் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs - Oil Marketing Companies) சுமார் 900 இ-சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. எரிபொருட்களின் விலையேற்றம் ஒரு பக்கம் இருந்தாலும், சுற்றுசூழல் மாசுபாடு மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் எலெக்ட்ரிக் வாகன துறையை பெரிதும் ஊக்குவித்து வருகின்றன.

    இந்நிலையில் இந்த பசுமை மாற்றத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டின் பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் (OMCs - Oil Marketing Companies), சுமார் 900 இ-சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் மற்றும் பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை முன்னணியில் உள்ளன.

    தமிழகத்தில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (IOC) 133 இ-சார்ஜிங் ஸ்டேஷன்களை கொண்டுள்ளது. இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 400 இ-ஸ்டேஷன்களை நிறுவ திட்டமிட்டுள்ளது. இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (HPC) தற்போது இருக்கும் 79 இ-ஸ்டேஷன்களை தவிர மேலும் 175 இ-சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இதே போல பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் (BPCL) இந்த நிதியாண்டின் இறுதிக்குள் மேலும் 145 இ-சார்ஜிங் ஸ்டேஷன்களை நிறுவவுள்ளது.

    இதனிடையே தமிழகத்தில் புதிதாக 900 இ-சார்ஜிங் ஸ்டேஷன்களை அமைக்க உள்ளது பற்றி ஆயில் மார்க்கெட்டிங் கார்ப்பரேஷன் அதிகாரிகள் கூறுகையில், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான தேவையை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இ-சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்றனர்.

    இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனின் (IOC) அதிகாரி ஒருவர் பேசுகையில், தற்போது மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள எரிபொருள் நிலையங்களுடன் இணைக்கப்பட்ட இ-சார்ஜிங் ஸ்டேஷன்களில் ஒரு சில ரீசார்ஜிங் மட்டுமே கிடைக்கிறது, ஆனால் இ-சார்ஜிங் ஸ்டேஷன்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், பயணத்தின் போது சார்ஜிங் ஸ்டேஷன்கள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பேட்டரிகளை ரீசார்ஜ் செய்ய உதவும் என்பதாலும் அதிக மக்கள் இனி தயக்கமின்றி எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவார்கள் என நம்புகிறோம் என்றார்.

    Also Read : கார் பராமரிப்புக்கு மாதம் ரூ.200 மற்றும் பல அசத்தல் சலுகைகளை அறிவித்த GoMechanic

    ஒரு சார்ஜிங் ஸ்டேஷன் நிறுவ சுமார் ரூ.1 கோடி முதலீடு தேவைப்படுவதால், முதலீட்டு விலை அதிகம் என்றும் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நீண்ட பயணத்தின் போது வேகமாக ரீசார்ஜ் செய்ய வேண்டிய பயணிகளுக்கு வசதியாக நெடுஞ்சாலைகளில் ஃபாஸ்ட் சார்ஜிங் ஸ்டேஷன்கள் உள்ளன என்றாலும் நகர அடிப்படையிலான சார்ஜிங் ஸ்டேஷன்களில் மெதுவான ரீசார்ஜ் செய்யப்படுகிறது.

    இருப்பினும், எரிபொருள் விற்பனை நிலையங்களின் தனிப்பட்ட டீலர்களால் தற்போது விலை நிர்ணயிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குபவர்களுக்கு அரசு கூடுதல் மானியம் வழங்க வேண்டும் என்று இ-சார்ஜிங் ஸ்டேஷன் உரிமையாளர்கள் விரும்புகின்றனர். எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிக்க மேலும் பல சலுகைகளை வழங்க வேண்டும். இதனால் மாசு குறைந்து சுற்றுசூழல் பாதுகாக்கப்படும் என்று கூறி உள்ளார் ஆயில் மார்க்கெட்டிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Automobile

    அடுத்த செய்தி