• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • Taycan எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்த Porsche - விலை குறித்த விவரம்!

Taycan எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்த Porsche - விலை குறித்த விவரம்!

டெய்கான் ரேஞ்

டெய்கான் ரேஞ்

இந்த கார் 4 சீட்களுடன் கூடிய ஆடம்பரமான கேபினை கொண்டு வருகிறது. இதில் ஃப்ரீஸ்டாண்டிங் கர்வ்டு16.8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் 8.4 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

  • Share this:
ஜெர்மனியின் ஸ்போர்ட்ஸ் கார் நிறுவனமான போர்ஷே (Porsche) தனது எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரான டெய்கான் ரேஞ்சை (Taycan) இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.50 கோடியில் துவங்குகிறது. மேலும் இது Taycan, Taycan 4S, Turbo மற்றும் Turbo S ஆகிய நான்கு மாடல்களில் கிடைக்கும். போர்ஷே நிறுவனம் இந்தியாவில் Taycan மற்றும் Taycan Cross Turismo வேரியன்ட்களை வழங்குகிறது. போர்ஷேயின் Taycan காரானது முதல் முழு எலெக்ட்ரிக் கார் மற்றும் ஏற்கனவே உலக மார்க்கெட்டில் கிடைக்கிறது.

Porsche நிறுவனம் Taycan EV காரை கடந்த செப்டம்பர் 2019-ல் அறிமுகப்படுத்தியது. ஆனால் விற்பனை 2020-ல் தான் தொடங்கியது. அறிமுகப்படுத்தப்பட்ட 9 மாதங்களுக்குள் பல நாடுகளில் மொத்தம் 28,640 Taycan யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக நிறுவனம் தகவல் தெரிவித்து உள்ளது. கோவிட்-19 தொற்று காரணமாக இந்திய சந்தைக்கான வெளியீடு தாமதமாகி கொண்டே வந்தது. இந்நிலையில் தான் கடந்த வார இறுதியில் இந்த கார் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

4S, Turbo மற்றும் Turbo S வெர்ஷன்களில் 'Cross Turismo' வேரியன்ட்கள் கிடைக்கும். போர்ஷேவின் Taycan ஒரு ஸ்போர்ட்டி டிசைன் மற்றும் 4,963 மிமீ நீளம், 2,144 மிமீ அகலம் மற்றும் 1,378 மிமீ உயரம் கொண்டது. 21 இன்ச் அலாய் வீல்களை கொண்டுள்ள இந்த கார் 2,900 மிமீ வீல்பேஸ் கொண்டது. இந்த கார் டெக் ஃபார்வர்டு (tech-forward) கேபினையும் கொண்டுள்ளது. இந்த EV-ஐ ஒருமுறை சார்ஜ் செய்தால் 500 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த கார் 4 சீட்களுடன் கூடிய ஆடம்பரமான கேபினை கொண்டு வருகிறது. இதில் ஃப்ரீஸ்டாண்டிங் கர்வ்டு16.8-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல் மற்றும் 8.4 இன்ச் டச்ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் பேனல் கொடுக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த EV-யில் 'Porsche Charge Map' கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்த அம்சம் ஓட்டுநருக்கு இது பாதையில் இருக்கும் சார்ஜிங் ஸ்டேஷன்களை காண்பிக்கிறது. காரின் ரேஞ்சை கருத்தில் கொண்டு சார்ஜிங் செய்ய திட்டமிடுவதற்கு இது டிரைவருக்கு உதவும்.

Also read... மாருதி சுசுகியின் ஸ்மார்ட் பைனான்ஸ் - ரூ.6,500 கோடி கடன் வழங்கல்

பேட்டரியை பொறுத்தவரை, Taycan RWD மற்றும் 4S ஆகியவை 79.2 kWh பேட்டரி பேக்குடன் வருகின்றன, அதே நேரத்தில் Turbo மற்றும் Turbo S ஆகியவை 93.4 kWh பேட்டரி பேக்குடன் கிடைக்கின்றன. என்ட்ரி லெவல் Taycan RWD ஆனது 484km (WLTP) வரை க்ளைம்டு ரேஞ்சை பெறுகிறது. அதே சமயம் கிராஸ் டூரிஸ்மோ வெர்ஷன் ஒருமுறை சார்ஜ் செய்தால் 456 கிமீ ரேஞ்சை பெறுகிறது. நிறுவனம் 11 கிலோவாட் ஏசி வால்மவுண்ட் சார்ஜரை காருடன் வழங்குகிறது, இதை கொண்டு காரை ஒரு முறை சார்ஜ் செய்ய 9 மணிநேரம் ஆகலாம்.

அதே சமயம் டீலர்ஷிப்கள் மற்றும் பொது இடங்களில் நிறுவப்பட்டுள்ள 50 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மூலம் ஒரு முறை சார்ஜ் செய்ய 90 நிமிடங்கள் வரை ஆகலாம். இதனிடையே எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் காரான Taycan-னுக்கு இந்தியாவில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என Porsche india எதிர்பார்க்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஹோம் சார்ஜிங் கிட்கள் மற்றும் அதன் டீலர்ஷிப்களில் சார்ஜிங் வசதிகளை வழங்குவதாக நிறுவனம் கூறியுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: