புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மதிக்காத போலீஸ் அதிகாரிகளுக்கு இரட்டிப்பு அபராதம்!

முதன்முதலாகக் கடந்த 2017-ம் ஆண்டு புதிய மோட்டார் வாகனச் சட்டம் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது.

Web Desk | news18
Updated: September 6, 2019, 6:46 PM IST
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தை மதிக்காத போலீஸ் அதிகாரிகளுக்கு இரட்டிப்பு அபராதம்!
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 6, 2019, 6:46 PM IST
புதிய மோட்டார் வாகனச் சட்டத்தைப் பின்பற்றாத போலீஸாருக்கு அபராதத்தொகை இரட்டிப்பாக விதிக்கப்படும் என டெல்லி போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது.

இந்தியாவில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் கடந்த செப்டம்பர் 1-ம் தேதி முதல் கடுமையாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. சாலை விதிகளை மதித்து மக்கள் செயல்பட வேண்டும் என்பதை ஊக்குவிக்கவே இந்தக் கடுமையான அபராதங்கள் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி விளக்கம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், புதிய வாகனச் சட்டத்தை மீறும் போலீஸாருக்கு இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இந்த விதிமுறை போலீஸ் வாகனம் ஓட்டும்போதும் சரி சொந்த வாகனத்தை ஓட்டும்போதும் சரி, பொருந்தும் என்கிறது எச்சரிக்கை சுற்றறிக்கை.


முதன்முதலாகக் கடந்த 2017-ம் ஆண்டு புதிய மோட்டார் வாகனச் சட்டம் மாநிலங்களவையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், போதிய ஆதரவு இன்றி 2019-ம் ஆண்டில்தான் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்துள்ளது.

மேலும் பார்க்க: ஹூண்டாய் க்ரெட்டாவின் சாதனையை முறியடித்த கியா செல்டாஸ்..!

ஆகஸ்ட் மாத கார்களின் விற்பனை பன்மடங்கு சரிவு

Loading...

First published: September 6, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...