மார்ச் மாதத்தில் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ நீங்கள் வாங்கவேண்டிய நல்ல நாட்கள், நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மார்ச் மாதத்தில் வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளீர்களா? அப்போ நீங்கள் வாங்கவேண்டிய நல்ல நாட்கள், நேரம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்

மாதிரி படம். (Shutterstock)

புனித நாள் என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு புதிய காரியத்தைச் செய்வதற்கோ அல்லது தொடங்குவதற்கோ மிகச் சிறந்ததாக நல்ல நேரம் கருதப்படும்.

  • News18
  • Last Updated :
  • Share this:
    இந்தியாவில், எந்தவொரு சந்தர்ப்பத்தையும் கொண்டாடுவதற்கும், எந்தவொரு சடங்குகளையும் செய்வதற்கும் அல்லது எந்தவொரு புதிய வேலையைத் தொடங்குவதற்கும் முழு நன்மை, வெற்றி மற்றும் செழிப்பு ஆகியவற்றைத் பெற நல்ல நாட்களையும் நேரத்தையும் பின்பற்றும் பழக்கம் மக்களிடையே இருக்கிறது. அது திருமணமாக இருந்தாலும் சரி, வீடு வாகனம் வாங்குவதாக இருந்தாலும் சரி நல்ல நேரம் பார்த்துதான் அனைத்து விஷயங்களையும் செய்வார்கள். ஒரு வாகனம் வாங்குவது என்பது குறிப்பிட்ட குடும்பத்திற்கு ஒரு வகையான சந்தர்ப்பமாகும். ஏனெனில் அது ஒரு சொத்தாகவும் முதலீடாகவும் மாறும். அதனால்தான் மக்கள் அதை ஒரு நல்ல நேரத்தில் வாங்க விரும்புகிறார்கள்.

    புனித நாள் என்பது இந்து மத நம்பிக்கைகளின்படி, ஒரு புதிய காரியத்தைச் செய்வதற்கோ அல்லது தொடங்குவதற்கோ மிகச் சிறந்ததாக நல்ல நேரம் கருதப்படும். நல்ல நேரம் அல்லது சுபமுகுர்த்த நேரம் என்பது ஒரு நாளில் குறிப்பிட்ட சில மணிநேரமே நடைபெறும். இந்த நேரங்களே நல்ல விஷயங்களை செய்ய சாதகமான ஒன்றாக கருதப்படுகிறது. எனவே தான் ஜோதிடர்கள் ஒரு வருடத்தில் இருக்கும் எல்லா மாதங்களுக்கும் சுபமுகுர்த்த தினத்தை வரையறுக்கின்றனர்.

    பஞ்சாங்கத்தின் கூற்றுப்படி, வேத நாட்காட்டி மார்ச் மாதத்தில் புதிய வாகனம் வாங்குவதற்கு பரிசீலிக்கக்கூடிய சிறந்த நாட்கள் மற்றும் நேரங்களை வகுத்துள்ளன. இந்த நாட்களில் நீங்கள் கார்கள், பைக்குகள் லாரிகள், பேருந்துகள், டிராக்டர்கள் போன்ற எந்தவொரு வாகனத்தையும் வாங்கலாம் என்பதையும், ஒவ்வொரு வாகனத்திற்கும் சுபமுகுர்த்த நேரங்கள் ஒரே மாதிரியாக இருப்பதையும் நீங்கள் கவனிக்கலாம்.

    மார்ச் 11, 2021: காலை 06:35 மணி முதல் பிற்பகல் 02:39 வரை வாகனம் வாங்க சிறந்த நேரம். நக்ஷத்திரம் தனிஷ்டாவாகவும், திதி த்ரயோதாஷியாகவும் இருக்கும்.

    மார்ச் 15, 2021: மாலை 06:49 மணி முதல் மார்ச் 16ம் தேதி காலை 4 மணி வரை நீங்கள் வாகனம் வாங்குவது குறித்து பரிசீலிக்க சிறந்த நேரம். நக்ஷத்திரம் ரேவதியாகவும், திதி திரிதியாவாகவும் இருக்கும்.

    மார்ச் 19, 2021: இந்த நாளில் வாகனம் வாங்குவதற்கான நல்ல நேரம் பிற்பகல் 01:44 முதல் மார்ச் 20 அன்று காலை 04:48 வரை. நக்ஷத்திரம் ரோகிணி மற்றும் திதி சாஷ்டி.

    மார்ச் 21, 2021: காலை 07:09 முதல் மாலை 07:25 வரை வாகனம் வாங்குவது குறித்து நீங்கள் பரிசீலிக்கலாம். நக்ஷத்திரம் மிருகஷிர்ஷா, திதி அஷ்டமி.

    Also read... குறிப்பிட்ட வாகனங்களுக்கு ரூ. 70,000 வரை தள்ளுபடியை அறிவித்துள்ள டாடா மோட்டார்ஸ்!

    மார்ச் 24, 2021: சுபமுகுர்த்த நேரம் காலை 06:20 மணி முதல் இரவு 11:12 மணி வரை நடக்கிறது. நக்ஷத்திரம் புஷ்யாவாகவும், தித்தி தசாமி மற்றும் ஏகாதசி என்றும் இருக்கும்.

    மார்ச் 28, 2021: மாலை 05:36 முதல் மார்ச் 29 அன்று காலை 06:15 வரை நீங்கள் வாகனம் வாங்குவது குறித்து பரிசீலிக்க சிறந்த நேரம். நக்ஷத்திரம் ஹஸ்தா, திதி பூர்ணிமா மற்றும் பிரதிபாதா.

    மார்ச் 29, 2021: காலை 06:15 முதல் இரவு 08:54 வரை இந்த நாளில் புதிய வாகனம் வாங்கலாம். நக்ஷத்திரம் ஹஸ்தா மற்றும் சித்ராவாகவும், திதி பிரதிபாதாவாகவும் இருக்கும்.



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
    Published by:Vinothini Aandisamy
    First published: