• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • பிரீமியம் ஹேட்ச்பேக் வாங்க நினைப்பவர்கள் Tata Altroz-ஐ தேர்வு செய்வதற்கு தேவையான 5 காரணங்கள்!

பிரீமியம் ஹேட்ச்பேக் வாங்க நினைப்பவர்கள் Tata Altroz-ஐ தேர்வு செய்வதற்கு தேவையான 5 காரணங்கள்!

டாடா அல்ட்ராஸ்

டாடா அல்ட்ராஸ்

போதுமான கேபின் ஸ்பேஸ் மற்றும் ரியர்லெக் ரூமுடன் Tata Altroz ஒரு ப்ராக்டிக்கல் ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. 2

  • Share this:
ஹேட்ச்பேக் கார்கள் எப்போதுமே இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் கார்களாக இருந்து வருகின்றன. பெரும்பாலான ஹேட்ச்பேக்குகளில் உள்ள பிரச்சனை சில குறிப்பிட்ட வசதிகள் இல்லாமல் இருப்பது தான். தற்போது மார்க்கெட்டில் இருக்கும் பல நிறுவனங்களின் என்ட்ரி - லெவல் ஹேட்ச்பேக் கார்கள் சிறந்த ஆற்றலை வெளிப்படுத்தாத என்ஜின்களுடன் வருகின்றன. நீங்கள் நல்ல நவீன டிவைஸ்கள் தரும் வசதி மற்றும் சிறந்த செயல்திறன் ஆகியவற்றில் சமரசம் செய்யாமல் ஒரு ஹேட்ச்பேக்கை வாங்க விரும்பினால், நீங்கள் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மென்ட்டிற்கு செல்லுவது நல்லது.

இந்தியாவில் மிகவும் பிரபலமான பிரீமியம் ஹேட்ச்பேக்குகளில் ஒன்றாக திகழ்வது டாடா ஆல்ட்ரோஸ் கார் ஆகும். அறிமுகப்படுத்தப்பட்ட இருபதே மாதங்களில் 1 லட்சம் யூனிட்டுகளை கடந்து விற்பனையாகி வாடிகையாளர்களின் நன்மதிப்பை பெற்று இருக்கிறது டாடாவின் ஆல்ட்ரோஸ். நீங்கள் இந்த ஹேட்ச்பேக் காரை வாங்கலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருந்தால் இந்த ஹேட்ச்பேக்கை நீங்கள் ஏன் தேர்வு செய்யலாம் என்பதற்கான சில காரணங்களை இங்கே தருகிறோம்.,

ப்ராக்டிக்கல்..

போதுமான கேபின் ஸ்பேஸ் மற்றும் ரியர்லெக் ரூமுடன் Tata Altroz ஒரு ப்ராக்டிக்கல் ஹேட்ச்பேக் காராக இருக்கிறது. 2,501 மிமீ நீளமுள்ள வீல்பேஸை கொண்டிருக்கிறது. வீக் எண்ட் ட்ரிப்களின் போது இதில் கொடுக்கப்பட்டிருக்கும் 345-லிட்டர் பூட் ஸ்பேஸ் உங்கள் லக்கேஜ்களை எளிதாக வைக்க நல்ல ஸ்பேசியஷான இடத்தை அளிக்கும். காருக்குள் நுழைவது மற்றும் வெளியேறுவதில் உங்களுக்கு சிரமம் இருக்கிறது என்றால் இதன் 90-டிகிரி ஓப்பனிங் டோர் சிக்கலை தீர்க்க உதவும்.

அம்சங்கள்..

இந்த காரை அதன் செக்மென்ட்டில் மிகவும் வசதிகள் நிறைந்த ஹேட்ச்பேக் என்று குறிப்பிட முடியாவிட்டாலும் கூட, பல நிறுவன ஹேட்ச்பேக்களை விட நிச்சயம் சிறப்பம்சங்களை கொண்டுள்ளது என்று கூற முடியும். இதன் அம்சங்கள் நீங்கள் தேர்வு செய்யும் வேரியன்ட்டை பொறுத்தது. Apple CarPlay உடன்கூடிய 7 இன்ச் டச்ஸ்கிரீன் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ, செமி டிஜிட்டல் இன்ஸ்டரூமென்ட் பேனல், புஷ்-பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், ஆட்டோமேட்டிக் ஏர் கண்டிஷனிங், ஹர்மன் சவுண்ட் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் ஹெட்லேம்ப்ஸ், ரெயின் சென்ஸிங் வைப்பர்ஸ், கனெக்ட்டட் டெக்னலாஜிக்கான iRA suite உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ளது.

பாதுகாப்பு:

Tata Altroz காரை கருத்தில் கொள்ள முக்கிய காரணம் இதன் பாதுகாப்பு தன்மை. 5 ஸ்டார் உலகளாவிய NCAP பாதுகாப்பு மதிப்பீடு கொண்ட இந்தியாவின் ஒரே ஹேட்ச்பேக் காராக உள்ளது இந்த கார். கட்டமைப்பு நிலைத்தன்மைக்கு காரின் சரியான இடங்களில் அதிக வலிமை கொண்ட ஸ்டீல் இருப்பதால் அதிக பாதுகாப்பை வழங்குகிறது. இந்த காரில் டூயல் ஃப்ரன்ட் ஏர்பேக்ஸ், ஏபிஎஸ் மற்றும் ஈபிடி கார்னர் ஸ்டெபிலிட்டி கன்ட்ரோல், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள் போன்றவையும் உள்ளன.

Also read... மாருதி சுசூகி இக்னிஸ் முதல் ரெனால்ட் க்விட் வரை - பெஸ்ட் மைலேஜ் தரும் கார்கள் விவரம்!

என்ஜின் ஆப்ஷன்கள்:

Altroz நாட்டிலேயே மிகவும் எரிபொருள்-திறனுள்ள டீசல் என்ஜின்களில் ஒன்றாகும். 1.2L ரெவோட்ரான் பெட்ரோல், 1.2L i- டர்போ பெட்ரோல் மற்றும் 1.5L டீசல் என்ஜின்கள் ஆகிய 3 எஞ்சின் தேர்வுகளுடன் 6 வேரியன்ட்கள் உள்ளன. 1.2-லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 85 bhp மற்றும் 113 Nm தவிர இந்த வாகனம் 89 bhp மற்றும் 200 Nm டார்க்கை வெளிப்படுத்தும் 1.5-லிட்டர் டீசல் யூனிட் ஆப்ஷனையும் பெறுகிறது.

விலை..

இந்தியாவில் Tata Altroz பெட்ரோல் மாடலின் விலை ரூ.5.85 லட்சத்தில் துவங்கி ரூ.8.71 லட்சம் வரை இருக்கிறது. Altroz டீசல் மாடலின் விலை ரூ.7.05 லட்சத்தில் துவங்கி ரூ.9.59 லட்சம் வரை செல்கிறது. Altroz iTurbo இன் விலையைப் பொறுத்தவரை, இது ரூ.8.02 லட்சம் முதல் ரூ.9.36 லட்சம் வரை இருக்கும். மேற்கண்ட அனைத்து விலைகளும் டெல்லி. எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: