முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / அதிநவீன வசதிகளுடன் Picasso D15 இ-ஸ்கூட்டர் அறிமுகம் - முழு விவரங்கள்

அதிநவீன வசதிகளுடன் Picasso D15 இ-ஸ்கூட்டர் அறிமுகம் - முழு விவரங்கள்

பிகாஸ் D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

பிகாஸ் D15 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

Picasso D15 | பிகாஸ் நிறுவனம் ஆர்.ஆர் குளோபல் என்கிற நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமாகும். இது தற்போது இந்தியாவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது.

  • 1-MIN READ
  • Last Updated :

இந்திய சந்தையில் ஒவ்வொரு நாளும் வாகனங்களின் விற்பனையானது பல மடங்கு அதிகரித்து வருகிறது. இதற்கு பல காரணிகள் இருந்தாலும், மக்கள் தொகையின் பெருக்கம் என்பது முக்கியமான ஒன்றாக உள்ளது. அதன்படி, வாகன உற்பத்தியானது அதிகரித்தாக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இன்றைய கால கட்டத்தில் வாகனங்களால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க பலரும் எலெக்டிக் வகை வாகனங்களை பரிந்துரை செய்து வருகின்றனர்.

மக்களின் இந்த தேவையை புரிந்து கொண்டு, பல நிறுவனங்களும் எலெக்ட்டிக் வாகனங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கின்றன. அதே போன்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலையை கருத்தில் கொண்டு பலர் எலெக்ட்ரிக் வாகனங்களை தேர்வு செய்து வருகின்றனர். வருங்காலங்களில் இந்தியாவில் மின்சார வாகனங்களின் பயன்பாடானது பல மடங்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் பல நிறுவனங்களும் இதில் அதிக பணத்தை முதலீடு செய்து வருகின்றனர். அதில் ஒரு வகையான நிறுவனம் தான் பிகாஸ் (BGauss) என்கிற இருசச்சர வாகன தயாரிப்பு நிறுவனம்.

பிகாஸ் நிறுவனம் ஆர்.ஆர் குளோபல் என்கிற நிறுவனத்தின் ஆதரவுடன் இயங்கும் எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன நிறுவனமாகும். இது தற்போது இந்தியாவில் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, பிகாஸ் D15 சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் எக்ஸ்-ஷோரூம் விலையாக ரூ.99,999-க்கு விற்கப்படுகிறது. இது தான் ஆரம்ப விலையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 2020'இல் பிகாஸ் B8 மற்றும் A2 ஆகிய மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. அதை தொடர்ந்து இந்நிறுவனத்தின் மூன்றாவது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இந்த D15 சீரிஸ்.

பிகாஸ் D15 சீரிஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது 3.2 kWh Li-ion நீக்க கூடிய வசதி உடைய பேட்டரியை கொண்டுள்ளது. மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த வண்டி குறித்த பவர் மற்றும் டார்க் புள்ளி விவரங்கள் வெளியிடப்படவில்லை என்றாலும், அவை ஸ்போர்ட்ஸ் பயன்முறையில் 7 வினாடிகளில் 0 முதல் 60 கி.மீ வேகத்தை எட்டும் என்று கூறப்படுகிறது. ஈகோ மற்றும் ஸ்போர்ட் என இரண்டு ரைடிங் மோடுகளையும் இது பெறுகிறது. ஏஆர்ஏஐ-சான்றளிக்கப்பட்ட ஒரு சார்ஜில் 115 கி.மீ தூரம் வரை பயணம் செய்ய முடியும் என்று இந்நிறுவனம் கூறுகிறது.

Read More : ராயல் என்பீல்டு இன்டர்செப்ட்டார், கான்டினென்டல் GT ஆகிய பைக்குகளின் இ.எம்.ஐ லோன் பற்றிய தகவல்கள் இதோ!

இதன் அம்சங்களைப் பொறுத்தவரை, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரானது ப்ளூடூத் இணைப்பு, டர்ன்-பை-டர்ன் நேவிகேஷன், எஸ்எம்எஸ் & அழைப்பு எச்சரிக்கைகள், மொபைல் சார்ஜிங்கிற்கான USB போர்ட் போன்ற டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரைப் பெறுகின்றன. இந்த புதிய பிகாஸ் D15i மாடலின் விலை ரூ.99,999 ஆக தொடங்குகிறது. அடுத்து, டி15 ப்ரோ மாடலின் விலை ரூ. 1.15 லட்சமாக எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதற்கான முன்பதிவுகள் இப்போது திறக்கப்பட்டுள்ளன. எனவே ஆன்லைனில் அல்லது ஆஃப்லைனில் தங்கள் அருகிலுள்ள டீலர்ஷிப்பில் பதிவு செய்து கொள்ளலாம்.

இந்த வண்டியின் அறிமுகம் குறித்து பிகாஸ் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் நிறுவனரான ஹேமந்த் கப்ரா சிலவற்றை பகிர்ந்து கொண்டார்.“புனேவில் உள்ள எங்கள் உள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழுவால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட 100% மேட் இன் இந்தியா எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இந்த BG D15 மாடல். இதை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இந்த வண்டியின் தரம் மற்றும் அதன் செயல்பாடு ஆகியவை பிகாஸ் எலக்ட்ரிக்'இன் சிறந்த-இன்-கிளாஸ் மொபிலிட்டி தீர்வுகளை வழங்குவதற்கான இலக்கிற்கு ஒரு சான்றாகும். இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களின் புரட்சியில் முன்னணியில் இருப்பதற்காக, எங்கள் வண்டியில் உயர் செயல்திறன், பாதுகாப்பான மற்றும் ஸ்மார்ட்டான மின்சார ஸ்கூட்டர்களை வழங்கும் எங்கள் பணிக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்" என்று கூறியுள்ளார்.

First published:

Tags: Automobile, Bike, Electric bike