• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • சென்னையில் முதல் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மையத்தை திறந்த Piaggio!

சென்னையில் முதல் எலெக்ட்ரிக் வாகன விற்பனை மையத்தை திறந்த Piaggio!

எலெக்ட்ரிக் வாகன மையத்தை திறந்த Piaggio

எலெக்ட்ரிக் வாகன மையத்தை திறந்த Piaggio

எரிபொருள் விலையேற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசு உள்ளிட்டவை காரணமாக EV வாகனங்கள் எதிர்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும்.

  • Share this:
இத்தாலியை தலைமையிடமாக கொண்ட Piaggio குரூப்பின் துணை நிறுவனமான Piaggio Vehicles Pvt Ltd, தமிழக தலைநகரான சென்னையில் தனது எலெக்ட்ரிக் வெஹிகிள் எக்ஸ்பீரியன்ஸ் சென்டரை அமைத்து இருக்கிறது. இந்த ஷோரூம் தங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் முழுமையாக அணுக உதவும் என்று Piaggio நிறுவனம் கூறி இருக்கிறது.

Rheo Automobiles என்ற பெயரில் இந்த எக்ஸ்பீரியன்ஸ் சென்டர் சென்னையில் திறந்து வைக்கப்பட்டு இருக்கிறது. இந்நிறுவனம் சமீபத்தில் சரக்கு மற்றும் பயணிகள் பிரிவுகளில் எலெக்ட்ரிக் வாகனங்களின் FX ரேஞ்சை (ஃபிக்ஸ்டு பேட்டரி) அறிமுகப்படுத்தியது. இந்த புதிய தயாரிப்புகள் சென்னையில் தற்போது புதிதாக திறக்கப்பட்டுள்ள சென்டரில் விரைவில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது

தங்கள் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் வாகனங்களுக்காக தமிழ்நாட்டில் அமைக்கப்பட்டுள்ள முதல் சென்டர் இது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை நிலையத்தை தமிழக மருத்துவ மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியின் போது பேசிய அமைச்சர் மா. சுப்பிரமணியன், "எக்கோ-ஃபிரெண்ட்லி தொழில்நுட்பங்களில் தமிழக அரசு தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது.



எரிபொருள் விலையேற்றம் மற்றும் சுற்றுசூழல் மாசு உள்ளிட்டவை காரணமாக EV வாகனங்கள் எதிர்காலத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். எலெக்ட்ரிக் வாகனங்களின் உற்பத்தி மற்றும் உள்கட்டமைப்புகளை பல மடங்கு மேம்படுத்துவது உள்ளிட்டவற்றுக்கு வசதியாக தமிழகத்தின் EV கொள்கை ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து மக்களையும் EV வாகனங்களை நோக்கி செல்ல செய்ய வேண்டும் என்ற தமிழக அரசின் கனவை நனவாக்கும் திசையில் Piaggio வாகனங்கள் இருக்க போவதை நினைத்து மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்" என்றார்.



Piaggio India Pvt Ltd-ன் கமர்ஷியல் வெஹிகிள் பிசினஸின் தலைவர் சஜு நாயர் பேசுகையில், "சென்னையில் எங்கள் முதல் EV பிரத்யேக ஷோரூமை தொடங்குவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். சென்னை ஒரு பெரிய மெட்ரோ மற்றும் ஒரு முக்கிய வணிக மையமாக இருக்கிறது. எனவே நகரங்களுக்கு இடையேயான போக்குவரத்து வணிகம் முக்கிய பொருளாதார மேம்பாட்டு காரணிகளில் ஒன்றாகும்.

ALSO READ |  EV Scooter: அவென்டோஸ் நிறுவனத்தின் எலக்டிரிக் ஸ்கூட்டர் - எப்போது தெரியுமா?

எங்களது புதிய வகை எலெக்ட்ரிக் வாகனங்கள் அதன் குறைந்த செயல்பாட்டு செலவு மற்றும் சுப்பீரியர் ரேஞ்சின் மூலம் வருவாயை அதிகரிக்க நிச்சயம் உதவும். எங்கள் நிறுவனம் தமிழ்நாடு முழுவதும் எலெக்ட்ரிக் வாகன விற்பனையை விரிவுபடுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.

தவிர எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறும் வாடிக்கையாளர்களுக்கு எங்கள் தயாரிப்புகள் மீதான நம்பிக்கையை உறுதி செய்ய க்ளாஸ்-லீடிங் வாரண்ட்டி மற்றும் ஃப்ரீ மெயின்டனன்ஸ் பேக்கேஜ் போன்ற பல் தனித்துவமான சேவை தீர்வுகளை வழங்க திட்டமிட்டுளோம்" என்றார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sankaravadivoo G
First published: