முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / நாட்டில் பயோ எரிவாயு விற்பனை செய்யும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரிப்பு

நாட்டில் பயோ எரிவாயு விற்பனை செய்யும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் மும்மடங்கு அதிகரிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

நாட்டில் பயோ எரிவாயு விற்பனை செய்யும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 2016 - 17 காலகட்டத்தில் 29,897 ஆக இருந்தது. கடந்த 5 ஆண்டு காலத்தில் இது மும்மடங்கு அதிகரித்து தற்போது 67,641 ஆக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி இந்தத் தகவலை தெரிவித்தார்.

மேலும் படிக்கவும் ...
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai, India

நாட்டில் பயோ எரிவாயு விற்பனை செய்யும் பெட்ரோல் நிலையங்களின் எண்ணிக்கை கடந்த 2016 - 17 காலகட்டத்தில் 29,897 ஆக இருந்தது. கடந்த 5 ஆண்டு காலத்தில் இது மும்மடங்கு அதிகரித்து தற்போது 67,641 ஆக உள்ளது. மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி இந்தத் தகவலை தெரிவித்தார்.

வருகின்ற 2025ஆம் ஆண்டில் நாட்டின் எத்தனால் தேவை என்பது 10.16 பில்லியனாக இருக்கும் என்றும் அமைச்சர் கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1,000 கோடி லிட்டர் எத்தனால் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற இலக்கை 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் எட்ட வேண்டும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.

கரும்புச் சக்கையில் இருந்து கிடைக்கும் மொலாசஸ் போன்ற பொருட்களில் இருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படுகிறது.

பயோ எரிவாயு குறித்த சர்வதேச கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர் பேசுகையில், நாட்டில் ப்ளெக்ஸ் - எரிவாயு எந்திரங்களை மிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று கூறினார். பெட்ரோலுடன் 20 சதவீத எத்தனால் கலந்து விற்பனை செய்யப்பட்டு வருவதையே இ20 எனக் குறிப்பிடுகின்றனர்.

அமைச்சர் மேலும் கூறுகையில், “ ப்ளெக்ஸ் - எரிவாயு எந்திரங்களை மிக அதிக அளவில் உற்பத்தி செய்ய வேண்டும் என்றால் இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்கள் உள்பட பல்வேறு விலை அளவுகளில் வாகன உற்பத்தியை பெருக்க வேண்டும். நாட்டிற்கு இது வெகுவிரைவாக தேவைப்படுகிறது.

இ10 மற்றும் இ20 எரிவாயுவில் இயங்கக் கூடிய வாகனங்களை உற்பத்தி செய்ய கால நிர்ணயம் செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக, கால வரம்புகளை விரைவுபடுத்த வேண்டிய தேவையும் இருக்கிறது. ப்ளெக்ஸ் - எரிவாயு எந்திரங்கள் மற்றும் இ20 பயன்பாடு கொண்ட வாகனங்களை தயாரிக்கும்போது ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள் என்ற உறுதியை வழங்க வேண்டியுள்ளது. இ10 மற்றும் இ20 வாகனங்களுக்கான விநியோகம், கொள்கை மற்றும் தேவைகளை உருவாக்குவது போன்ற தளங்களை உருவாக்கிக் கொடுப்பதில் மத்திய அரசு சார்பில் உரிய ஒத்துழைப்பு கொடுக்கப்படும்’’ என்று தேரிவித்தார்.

Read More: இளைஞர்களை இலக்காக கொண்டு அறிமுகமாகியுள்ள அப்டேட்டட் TVS Raider 125 - விலை மற்றும் அம்சங்கள்!

 சிபிஐ (அழுத்தப்பட்ட பயோ எரிவாயு) தொழில்நுட்பம் கொண்ட பயோ எரிவாயுவை உற்பத்தி செய்ய மத்திய அரசு போதுமான ஒத்துழைப்பு வழங்கும் என்று அமைச்சர் ஹர்தீப் எஸ் பூரி கூறினார். SATAT கொள்கையின் கீழ் ஏற்கனவே 37 சிபிஜி உற்பத்தி ஆலைகள் நிறுவப்பட்டுள்ளன, அதில் கிடைத்த உற்பத்தி மூலமாக 9 ஆயிரம் டன் அளவுக்கு சிபிஜி எரிவாயு விற்பனை செய்யப்பட்டுள்ளது’’ என்றும் அமைச்சர் கூறினார்.

First published:

Tags: Petrol