Home /News /automobile /

ஏறிக்கொண்டே போகும் எரிபொருள் விலை... மக்களுக்காக கலிஃபோர்னியா மாகாண கவர்னரின் அதிரடி திட்டம்

ஏறிக்கொண்டே போகும் எரிபொருள் விலை... மக்களுக்காக கலிஃபோர்னியா மாகாண கவர்னரின் அதிரடி திட்டம்

பெட்ரோல்

பெட்ரோல்

கொரோனா ஏற்படுத்திய தாக்கம் ஒருபக்கம் இருக்க ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கர்கள் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது.

மேலும் படிக்கவும் ...
கொரோனா ஏற்படுத்தியுள்ள தாக்கம் காரணமாக ரூ.100-க்கும் மேல் சென்ற பெட்ரோல் விலை, அதிகரித்து காணப்படும் டீசல் விலை உள்ளிட்டவை பல மாதங்களாக குறையாமலேயே இருக்கிறது. இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகமாக இருப்பது உங்களது பட்ஜெட்டில் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகிறதே என்று நீங்கள் கவலைப்பட்டால், அமெரிக்கா உட்பட உலகின் பிற பகுதிகளில் உள்ள மக்களும் இந்த அழுத்தத்தை எதிர்கொள்வது என்பது உங்களுக்கு தெரியுமா.? இந்த விஷயம் உங்களுக்கு ஒரு சிறிய ஆறுதலாக இருக்கலாம்.

கொரோனா ஏற்படுத்திய தாக்கம் ஒருபக்கம் இருக்க ரஷ்யா - உக்ரைன் போரை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கர்கள் ஒவ்வொரு லிட்டர் எரிபொருளுக்கும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு தற்போது அதிக விலை கொடுக்க வேண்டிய நிலை காணப்படுகிறது. வரலாறு காணாத எரிபொருள் விலையேற்றதால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள அழுத்தத்தைக் குறைக்க, அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாண கவர்னர் கவின் நியூசோம் (Gavin Newsom), மாநில குடியிருப்பாளர்களுக்கு வரி சலுகை அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

கலிஃபோர்னியாவில் இதுவரை இல்லாத அளவு ஒரு கேலன் (சுமார் 4.56 லிட்டர்) பெட்ரோல் விலை $5.88-ஆக உயர்ந்தது. இந்திய மதிப்பில் பார்த்தால் ஒரு லிட்டர் தோராயமாக ரூ.98.68 தான். எனினும் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதாக குற்றம் சாட்டப்படும் அதே வேளையில், அனைத்து அமெரிக்க மாநிலங்களையும் விட எரிபொருள் மீதான இரண்டாவது மிக அதிக வரி விதிக்கிறது கலிஃபோர்னியா (கேலன் ஒன்றுக்கு 51 சென்ட்ஸ்). எரிபொருள் மீதான அதிக வரி வசூலிப்பில் பென்சில்வேனியா முதலிடத்தில் இருக்கிறது.

இந்த சூழலில் வாகன ஓட்டிகளுக்கு உதவும் சிறந்த வழி வரியை குறைப்பதாகும். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் எப்போதுமே வாடிக்கையாளருக்கு இறுதி பலனைக் கொடுக்காது என்ற கருத்து கூறப்படுகிறது. எனவே கலிஃபோர்னியா கவர்னர் Gavin மாற்று வழியை சிந்திக்கிறார். சராசரியாக கலிஃபோர்னியா குடியிருப்பாளர் ஒவ்வொரு மாதமும் பெட்ரோலுக்கு $800 செலவழிப்பதாக Gavin Newsom நம்புகிறார். எனவே ஒவ்வொரு கார் உரிமையாளரும் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட 2 கார்கள் வரை $400 மதிப்புள்ள டெபிட் கார்டுகளை பெறலாம். ஒருவரிடம் எந்த கார் இருந்தாலும், கார் உரிமையாளர் எந்த பொருளாதார அல்லது சமூகப் பிரிவைச் சேர்ந்தவராக இருந்தாலும் இந்தத் தொகை ஒரே மாதிரியாக இருக்கும். அது போல சொந்தமாக வாகனங்கள் இல்லாதவர்களுக்கும் உதவும் வகையில், பேருந்துகள் மற்றும் ரயில்களில் குறிப்பிட்ட காலத்திற்கு (3 மாதங்கள்) இலவச பயணத்தை அனுமதிக்கலாம் என்றும் Gavin Newsom முன்மொழிந்துள்ளார்.

Also read... ‘இந்தியாவிலும் இனி பறக்கும் கார்’... பிரபல ஜப்பான் நிறுவனத்துடன் சுசூகி போட்ட ஒப்பந்தம்!

கலிஃபோர்னியா கவர்னரின் இந்த முன்மொழிவில் போக்குவரத்து மற்றும் ரயில் நிறுவனங்களுக்கு சுமார் $750 மில்லியன் நிதி வழங்கப்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. இந்த நிதி நாளொன்றுக்கு சுமார் 3 மில்லியன் மக்களுக்கு இலவச சவாரி வழங்க போதுமானது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தனது இந்த முன்மொழிவு பற்றி விளக்கியுள்ள Gavin Newsom. மேற்காணும் இந்த முடிவுகள் எரிபொருள் விலை ஏற்ற இறக்கங்களிலிருந்து மக்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், தூய்மையான போக்குவரத்தை மேம்படுத்த வாய்ப்புள்ளது என்கிறார். அவரது இந்த முன்மொழிவுகள் முதலில் சட்டமன்றத்தால் அங்கீகரிக்கப்பட வேண்டும். பணக்காரர்களுக்கு வரிச் சலுகைகள் தேவையில்லை அதற்கு பதில் குறிப்பிட்ட சம்பளம் உள்ளவர்களுக்குத் தள்ளுபடிகள் வழங்கப்பட வேண்டும் என்று பலர் விரும்புவதால் இந்த முன்மொழிவுக்கு ஓரளவு எதிர்ப்பும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Vinothini Aandisamy
First published:

Tags: Petrol

அடுத்த செய்தி