• HOME
  • »
  • NEWS
  • »
  • automobile
  • »
  • டிரைவிங் டெஸ்ட்டில் ஃபெயிலாகும் நபர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் டெல்லி போக்குவரத்து துறை!

டிரைவிங் டெஸ்ட்டில் ஃபெயிலாகும் நபர்களுக்காக புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் டெல்லி போக்குவரத்து துறை!

மாதிரி படம்

மாதிரி படம்

அடுத்த முறை தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வசதியாக, அதிகாரிகள் விரிவான டெஸ்ட் ரிப்போர்ட்டையும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

  • Share this:
வாகனங்களை இயக்க ஆவலாக இருக்கும் புதிய ஓட்டுனர்கள் தங்கள் திறன்களை மேம்படுத்தி கொள்ள உதவும் வகையில் தங்கள் தரப்பிலிருந்து புதிய உதவி ஒன்றை செய்ய டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதன்படி டெல்லி சிட்டியில் ஒரு நபர் டிரைவிங் டெஸ்ட்டில் தேர்ச்சி பெறவில்லை என்றால், அவர் தனது வாகனம் இயக்கும் திறனை மேலும் வளர்த்து கொள்ள தங்களின் பர்ஃபாமென்ஸ் வீடியோவை அணுகலாம். டெல்லி அரசின் இந்த புதிய நடவடிக்கை நடைமுறைப்படுத்தப்பட்டால், டெல்லி சிட்டியின் ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்ஸில் (automated test tracks) நிகழ்ந்து வரும் டிரைவிங் டெஸ்ட்டின் அதிக தோல்வி விகித சிக்கலை தீர்க்கும் என்று அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.

வழக்கமான டிரைவிங் டெஸ்ட்களை போல இல்லாமல் விண்ணப்பதாரரின் ஓட்டுநர் திறன்களின் முழு வரம்பும் சோதிக்கப்படும் கடினமான ஓட்டுநர் நிலைகளை ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்குகள் கொண்டுள்ளன. எனவே இதன் விளைவாக வீடியோக்கள் மற்றும் டுட்டோரியல்கள் விண்ணப்பதாரர்களுக்கு காட்டப்படும் போதிலும், முதல் முயற்சியிலேயே துல்லியமான தேர்வில் தேர்ச்சி பெறுவது பலருக்கு கடினமாக இருக்கிறது. இந்த பிரச்சனைகளை தீர்க்க வரும் அக்டோபர் முதல், டிரைவிங் டெஸ்ட்டில் வெற்றி பெற தவறும் விண்ணப்பதாரர்களுக்கு, அவர்கள் பங்கேற்ற டிரைவிங் டெஸ்ட் வீடியோக்களை அனுப்ப டெல்லி போக்குவரத்து துறை முடிவெடுத்துள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும் அடுத்த முறை தங்கள் தவறுகளை திருத்தி கொள்ள வசதியாக, அதிகாரிகள் விரிவான டெஸ்ட் ரிப்போர்ட்டையும் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்ப உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது குறித்து சில தகவல்களை வெளிப்படுத்தி உள்ள டெல்லி போக்குவரத்து துறை அதிகாரிகள், டிரைவிங் டெஸ்ட்டில் வெற்றி பெற முடியாதவர்களுக்கு, அவர்கள் டெஸ்ட்டை அட்டெண்ட் செய்த போது எடுக்கப்படும் முழு வீடியோ கிளிப்பையும் பென் டிரைவ்களில் காப்பி செய்து வழங்க திட்டமிட்டுருந்தோம்.

ஆனால் இப்போது வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் அப்ளிகேஷன்கள் மூலம் வீடியோ கிளிப்களை அவர்களது அனுப்ப முடிவு செய்யப்பட்டு உள்ளது என்றனர். டிரைவிங் டெஸ்ட்டில் ஃபெயிலாகும் பலருக்கு தங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பது பற்றி உறுதியாக தெரியவில்லை. எனவே இந்த வீடியோ கிளிப்புகள் வாகனத்தை இயக்கும் போது தாங்கள் என்ன தவறு செய்கிறோம் என்பதை துல்லியமாக அறிந்து கொள்ள உதவும். தவறுகளை கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சி செய்து தங்களை அடுத்த டிரைவிங் டெஸ்ட்டிற்கு தயாராக்கி கொள்ள முடியும் என்றும் டெல்லி அதிகாரிகள் கூறி இருக்கிறார்கள்.

Also read... இந்தியாவின் மிகவும் சிக்கனமான e-Cycleஐ அறிமுகப்படுத்திய ஸ்ட்ரைடர் நிறுவனம் - 1 கி.மீக்கு வெறும் 6 பைசா மட்டுமே!

அதே போல விண்ணப்பதாரர்கள் டிரைவிங் டெஸ்ட்டில் கலந்து கொள்ளும் முன், ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்ஸ்களை பற்றி சிறந்த ஒலி-ஒளி (audio-visual) தகவல்களை வழங்க டெல்லி போக்குவரத்துக்கு துறை திட்டமிட்டுள்ளது. அடுத்த ஆண்டுக்குள் டெல்லி 12 ஆட்டோமேட்டட் டெஸ்ட் ட்ராக்களைக் கொண்டிருக்கும் நிலையில், போக்குவரத்துக்கு துறையின் இந்த திட்டம் மக்களுக்கு பெரிதும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: