மஹாராஷ்டிராவில் உள்ள ஒரு சின்ன நகரத்தைச் சேர்ந்த மக்கள் ஒரே நாளில் 200-க்கும் அதிகமான ட்ராக்டர்கள், 20-க்கும் அதிகமான கார்கள், 500-க்கும் அதிகமான இரு சக்கர வாகனங்கள் என ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு 30 கோடி ரூபாய் வருவாய் அளித்துள்ளனர்.
இந்தியாவிலேயே ஆட்டோமொபைல் துறை பெரும் வீழ்ச்சியைச் சந்தித்து வரும் வேளையில், கல்வான் பகுதியில் உள்ள அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும் அதிகப்படியான வாகன விற்பனையால் மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்து வருகின்றனர். கல்வான் என்ற ஒரு சின்ன ஊரில் மட்டும் ஒரே நாளில் 30 கோடி ரூபாய் மதிப்பிலான வாகனங்கள் விற்பனையாகி உள்ளன.
மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சின்ன நகரம் கல்வான். இப்பகுதியில் வெங்காய விளைச்சல் அதிகம். சமீபத்தில் வெங்காய விலை அதிகரித்ததால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் அனைவரும் அதிகப்படியாகவே சம்பாதித்துள்ளனர்.
இதனால், நவராத்திரி காலத்தில் ஒரே நாளில் 250 ட்ராக்டர்கள், 500 இருசக்கர வாகனங்கள், 21 கார்கள் என ஒரே நாளில் இந்த ஊர் மக்கள் வாங்கியுள்ளனர். இதனால் கல்வான் நகரத்தில் உள்ள அத்தனை ஆட்டோமொபைல் நிறுவனங்களும் மனமகிழ்ந்து அனைத்து நிறுவனங்களின் தலைமைகளும் இணைந்து இந்த ஊருக்குப் பாராட்டு விழா நடத்தியுள்ளனர்.
மேலும் பார்க்க: ஹெக்டார் இரண்டாம் கட்ட முன்பதிவுக் காலம்...அதீத வரவேற்பால் திணறும் MG மோட்டார்ஸ்
சிதம்பரத்தில் ஹெல்மெட் அணிந்தும் அபராதம் விதித்த காவலர்கள்
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.