முகப்பு /செய்தி /ஆட்டோமொபைல் / முதல் டெஸ்லா காரை தாஜ்மகாலுக்கு டெலிவரி செய்ய வேண்டும் - எலான் மஸ்க்கிடம் கேட்ட விஜய் சேகர்!

முதல் டெஸ்லா காரை தாஜ்மகாலுக்கு டெலிவரி செய்ய வேண்டும் - எலான் மஸ்க்கிடம் கேட்ட விஜய் சேகர்!

Tesla Car

Tesla Car

Tesla Car | எலான் மஸ்க் இந்தியாவிற்கு வந்திருந்த போது, இந்திய அடையாங்களில் ஒன்றான தாஜ்மகாலையும் பார்வையிட்டுள்ளார்

  • Last Updated :

உலகளவில் இரண்டு பெரிய நிறுவனங்களின் தலைவர்கள் உரையாடிக்கொள்வது சுவாரஸ்யமாக மற்றும் வேடிக்கையாகவும் இருக்கும். அந்த வகையில் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் சொந்தக்காரரான எலான் மஸ்க்கிற்கு அறிமுகம் தேவையில்லை. சமீபத்தில் ட்விட்டரையும் வாங்க ஒப்பந்தம் போட்டுள்ளார் எலான் மஸ்க்.

அதேபோல இந்தியாவின் முன்னணியில் இருக்கும் டிஜிட்டல் பேமண்ட் தளங்களில் ஒன்றான பேடிஎம்மின் தலைவர் விஜய் சேகர் ஷர்மாவையும் அனைவரும் அறிவர். விஜய் சேகர் சர்மா எலான் மஸ்க்கிடம் ஒரு புதிய கோரிக்கையை விடுத்துள்ளார்! பேமெண்ட் தளம் மற்றும் ஆட்டோமொபைல் அல்லது டெக் நிறுவனத்திற்கு என்ன சம்பந்தம் என்று நீங்கள் யோசிக்கலாம். ஆனால் இவருடைய கோரிக்கை கொஞ்சம் வித்தியாசமானது. இந்தியாவில் முதல்முதலாக டெலிவரி செய்யப்படும் டெஸ்லா காரை தாஜ்மகாலுக்கு டெலிவரி செய்ய கோரி இருக்கிறார் விஜய் சேகர். அதை பற்றிய முழு விவரம் இங்கே.

உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹால் இந்தியாவின் மிகப்பெரிய பாரம்பரியம் மற்றும் வரலாற்று சின்னமாகவும் கருதப்படுகிறது. அதுமட்டுமின்றி எலான் மஸ்க் இந்தியாவிற்கு வந்திருந்த போது, இந்திய அடையாங்களில் ஒன்றான தாஜ்மகாலையும் பார்வையிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த வார திங்களன்று ஒரு ட்விட்டர் யூசர் ஆக்ராவில் உள்ள செங்கோட்டையின் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். அந்த ட்வீட்டுக்கு பதிலளிக்கும் விதமாக எலான் மஸ்க் இந்தியாவின் மிகவும் அற்புதமான மற்றும் நுணுக்கமான கட்டடக்கலை விவரங்களைக் கொண்டுள்ளது ஆக்ரா போர்ட் என்று குறிப்பிட்டிருந்தார். அதுமட்டுமின்றி ‘நான் தாஜ்மஹாலையும் பார்த்தேன். உலக அதிசயம் என்பதில் சந்தேகமில்லை’ என்றும் ரிப்ளை ட்வீட் செய்திருந்தார்.

Also Read : எலான் மஸ்க் அம்மாவாக இருந்தாலும் தப்பு தப்பு தான்!

2007 ஆம் ஆண்டு எலான் மஸ்க் இந்தியாவுக்கு வந்துள்ளார். இந்தியாவின் கட்டடக்கலை அற்புதங்களை பற்றி இன்னும் பசுமையான நினைவுகள் இருப்பதை அவரின் ட்வீட்டுகள் தெரிவிக்கின்றன. இதன் தொடர்ச்சியாக தான், பேடிஎம் நிறுவனர் எலான் மஸ்க்கிடம் டெஸ்லா டெலிவரி பற்றி கேட்டிருந்தார்.

“இங்கே தாஜில் எப்போது முதல் டெஸ்லாவை டெலிவரி செய்ய வரப்போகிறீர்கள்” என்று உலகின் பணக்காரரான எலான் மஸ்க்கிற்கு டிவிட்டரில் கேள்வி எழுப்பியுள்ளார் ஷர்மா.

இந்திய சாலைகளைப் பற்றி ஏற்கனவே எலான் மஸ்கிற்கு சர்மா எச்சரிக்கை விடுத்துள்ளார். அதுமட்டுமின்றி, முழுக்க முழுக்க செல்ப் டிரைவன் கார்களை இந்திய சாலைகளில் ஓட்டுவது என்பது கொஞ்சம் சவாலானது என்றும் கூறியுள்ளார். சாலைகளில் கரடு முரடாக வண்டி ஓட்டுபவர்கள் பற்றியும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முதல் செல்ஃப் டிரைவன் கார்களை அறிமுகப்படுத்துவது என்பது டெஸ்லாவுக்கு உண்மையிலேயே மிகப்பெரிய சவாலாக இருக்கிறது என்று சர்மா தெரிவித்திருந்தார்.

Also Read : எலான் மஸ்க் ட்விட்டரில் மாற்ற விரும்பும் 5 விஷயங்கள் இவைதான்..

இந்தியாவில் உற்பத்தி ஆலையை தொடங்குமாறு பல மாநிலங்கள் பலமுறை எலான் மஸ்க்கிற்கு அழைப்பு விடுத்துள்ளன. கடந்த ஜனவரி மாதத்தில் தெலுங்கானா அமைச்சரான கே டி ராமாராவ் தெலுங்கானாவில் டெஸ்லாவின் நிறுவனத்தை தொடங்குமாறு கோரியுள்ளார்.

அதேபோல மகாராஷ்டிர மாநிலத்தின் தண்ணீர் வளத்துறை அமைச்சரான ஜெயந்த் பாட்டீலும் டெஸ்லா நிறுவனத்தின் முதன்மை உற்பத்தி ஆலையை எலெக்ட்ரிக் கார்களுக்காக மகாராஷ்டிராவில் தொடங்க அழைப்பு விடுத்திருந்தார். ஆனால் எலான் மஸ்க் தற்பொழுது இந்தியாவில் டெஸ்லா கார்களை விற்பனை செய்ய உள்ள நிலையில், அதில் ஒரு சில சவால்களை எதிர்கொண்டு வருவதாக கூறியிருக்கிறார். உலகிலேயே, இந்தியாவில் தான் அதிக இறக்குமதி கட்டணம் விதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார்.

top videos

    பேடிஎம் நிறுவனர் விஜய் சேகர் கோரியபடி முதல் கார் தாஜ்மகாலுக்கு டெலிவரி செய்யப்படுமா என்பது பற்றி விரைவில் தெரியவரும்.

    First published:

    Tags: Automobile, Elon Musk