ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை குப்பையில் வீசி விடுவோம்: மிரட்டும் வாடிக்கையாளர்கள்

news18
Updated: September 7, 2018, 3:45 PM IST
ராயல் என்ஃபீல்ட் பைக்குகளை குப்பையில் வீசி விடுவோம்: மிரட்டும் வாடிக்கையாளர்கள்
குப்பையில் வீசிப்பட்ட ராயல் என்ஃபீல்ட் பிகாசஸ் 500.
news18
Updated: September 7, 2018, 3:45 PM IST
ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மீது கோபம் கொண்ட வாடிக்கையாளர் ஒருவர் 2.4 லட்சம் மதிப்புள்ள புல்லட் பைக்கை குப்பையில் வீசியுள்ளார். இதனைத்தொடர்ந்து இதேபோல பல வாடிக்கையாளர்களும் தங்கள் பைக்குகளை குப்பையில் வீசி போவதாக மிரட்டல் விடுத்துள்ளனர். 

ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் பிகாசஸ் 500 என்ற பைக்கை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. லிமிட்டட் எடிஷனாக வெறும் 250 பைக்குகள் மட்டுமே தயாரிக்கப்பட்டதால், இந்த பைக் அறிமுகப்படுத்தப்பட்ட நாளன்று வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டு கொண்டு புக் செய்ததில், ராயல் என்ஃபீல்டின் இணையதளமே முடங்கியது.

2.4 லட்சம் ரூபாயான பிகாசஸ் 500 பைக் 2-ம் உலகப்போரில் ஆங்கிலேய ராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது. இதை கவுரவிக்கும் வகையில் இந்த பைக்கை ராயல் என்ஃபீல்ட் நிறுவனம் தயாரித்து வெளியிட்டது. இதே போல் இந்திய ராணுவத்தை கவுரப்படுத்தும் வகையில் கிளாசிக் 350 ஏபிஎஸ் சிக்னல்ஸ் என்ற பைக் சென்ற வாரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை 1.61 லட்சம் ரூபாயாகும்.
பிகாசஸ் 500 பைக்கை போலவே இருக்கும் சிக்னல்ஸ் பைக் டிசைன் செய்யப்பட்டிருப்பதாலும், விலையும் 80,000 ரூபாய் குறைவாக இருப்பதாலும் ஆத்திரமடைந்த பிகாசஸ் 500 பைக்கின் ஓனர்கள் ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர். அக்கடிதத்தில்  “நாங்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறோம். ராயல் என்ஃபீல்ட் நிறுவனத்தின் மீதிருந்த மரியாதை போய்விட்டது. வங்கிகளில் கடன் பெற்று, மிகக் கடுமையான போட்டிக்கு மத்தியில் பைக்கை புக் செய்து வாங்கினோம். ஆனால் அந்த பைக்கை போலவே சிக்னல்ஸ் ஏபிஎஸ் பைக் உள்ளது. பிகாசஸின் மாடலை போலவே சிக்னல் 350 பைக்குகள் விற்கப்பட்டது என்றால் நாங்கள் அனைவரும் எங்கள் பைக்குகளை நகராட்சி நிர்வாகத்திடம் கொடுத்துவிடுவோம். அதை அவர்கள் தூய்மை இந்தியா பணிகளுக்கு பயன் படுத்திக்கொள்ளட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளனர்.

 
First published: September 7, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...